உயிர் போகும் வலி...உதட்டை பெரிதாக்க காஸ்மெடிக் சர்ஜரி செய்துகொண்ட பிரபல நடிகை..
தொலைக்காட்சி நடிகை மற்றும் சமூக வலைதள பிரபலமான உர்ஃபி ஜாவெத் தனது உதட்டமைப்பை மாற்றுவதற்காக காஸ்மெடிக் சர்ஜரி செய்துகொண்டுள்ளார்

யார் இந்த உர்ஃபி ஜாவெத்
இந்தி தொலைக்காட்சித் தொடர்களில் நடித்து பிரபலமானவர் நடிகை உர்ஃபி ஜாவேத் (Urfi Javed). தனது பேஷன் சென்ஸ் மற்றும் துணிச்சலான உடை தேர்வுகளுக்கு பிரபலமான உர்ஃபி ஜாவேத் இணையத்தில் எப்போதும் ட்ரெண்டிங்கில் இருந்து வருகிறார். பாட்டில் மூடிகளால் செய்யப்பட்ட ஆடை அணிவது, பிளாஸ்டிக் பைகளை உடலில் சுற்றிக் கொள்வது, ப்ளேட்டால் செய்யப்பட்ட ஆடைகள், சின்னக் குழந்தைகளின் விளையாட்டு பொம்மைகளை ஆடை செய்வது, கயிறு, பூக்கள், ரோஜா இதழ்கள் என கையில் கிடைக்கும் எல்லாவற்றையும் வைத்து வித்தியாசமான ஆடைகளை அணிந்து இணையதளத்தில் அடிக்கடி வைரலாகி வருபவர். தற்போது இவர் தனது உதட்டில் காஸ்மெடிக் சர்ஜரி செயதுகொண்டிருப்பது இணையத்தில் பேசுபொருளாகியுள்ளது
உதட்டில் காஸ்மெட்டிக் சர்ஜரி
தனது உதடுகள் சீரான அமைப்பில் இல்லாததால் அதனை காஸ்மெடிக் சர்ஜரி மூலம் மாற்றியமைத்துள்ளார் உர்ஃபி ஜாவெத். உதடுகள் சின்னதாய் இருப்பதைக் காட்டிலும் கண்களை கவரும் படி பெரிதாக இருப்பதையே பலர் விரும்புகிறார்கள். அப்படி விரும்புபவர்கள் தங்கள் உதடுகளை தேர்ந்த ஸ்கின் டாக்டர்களின் மூலம் Lip Filler என்று சொல்லப்படுகிற காச்மெடிக் சர்ஜரியின் மூலம் தங்கள் விருப்பப் படி மாற்றியமைத்துக். கொள்கிறார்கள். இந்த சர்ஜரி என்பது மிகுந்த கவனத்துடனும் மேற்கொள்ள வேண்டிய முறை அதே நேரத்தில் அதிக வலி நிறைந்த ஒரு சிகிச்சையும் கூட. இது குறித்து உர்ஃபி ஜாவெட் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோ ஒன்று வெளியிட்டுள்ளார்.
இந்த வீடியோவைப் பார்த்த ரசிகர்கள் இவ்வளவு வலியை சகித்துக் கொண்டு இந்த சர்ஜரி தேவையா என கேள்வி எழுப்பி வருகிறார்கள்
View this post on Instagram






















