Watch Video | மோகன்லாலின் மரக்கார் செட்டுக்கு தல அஜித் சர்ப்ரைஸ் விசிட்... வைரல் வீடியோ
சென்னை: மோகன்லால் நடிக்கும் மரக்கார் பட செட்டுக்கு தல அஜித் சர்ப்ரைஸ் விசிட் செய்த வீடியோ வைரலாகியுள்ளது.
மலையாளத்தில் பெரிய பட்ஜெட் படங்கள் வருவது அபூர்வத்திலும் அபூர்வம். குறைந்த பட்ஜெட்டில் எதார்த்த சினிமாக்களை கொடுக்கவே கடவுளின் தேசம் விரும்பும். ஆனால் சில படங்கள் இந்த விதியை உடைத்து உருவாக்கப்படும். அப்படி உருவாகியுள்ள திரைப்படம் மரக்கார். இயக்குநர் ப்ரியதர்ஷன் இயக்கத்தில் ரூ.85 கோடி பட்ஜெட்டில் உருவாகியுள்ள இந்தத் திரைப்படத்தில் மரக்காராக மோகன்லால் நடிக்கிறார்.
ஆங்கிலேயர்களை எதிர்த்து முதலில் கடற்படையை உருவாக்கிய மரக்காரின் உண்மைக்கதையை தழுவி இப்படம் உருவாகியுள்ளது. இந்நிலையில் இப்படத்தின் படப்பிடிப்பின்போது தல அஜித் அங்கு சென்று படக்குழுவினரை சந்தித்த வீடியோ இப்போது வைரலாகியுள்ளது. மோகன்லால், ப்ரியதர்ஷன் என அங்குள்ளவர்களை மரியாதை நிமித்தமாக சந்தித்து அவர் பேசினார். இது தொடர்பான வீடியோவை சோஷியல் மீடியாவில் பலரும் ஷேர் செய்து வருகின்றனர்.
முன்னதாக, மரக்கார் திரைப்படம் கடந்த வருடமே ரிலீஸுக்கு காத்திருந்தது. கண்டிப்பாக தியேட்டரில்தான் படம் வெளியாகுமென படக்குழு அடித்துக் கூறியது. ஆனால் பல குழப்பங்கள் இடையே வர வியாபாரமும் சரியாக இல்லை எனக் கூறப்பட்டது. இதனால் படத்தை அமேசான் ப்ரைமுக்கு கொடுக்க படக்குழு ஓகே சொல்லியதாக தகவல் வெளியானது. இப்படியான பிரமாண்ட படம் தியேட்டரில் ரிலீஸ் இல்லையா என ரசிகர்கள் நொந்துகொள்ள கேரள அமைச்சரோ தியேட்டரில் ரிலீஸ் செய்ய வேண்டுமென நேரடியா கோரிக்கை விடுத்தார்.
இது குறித்து பேசிய அமைச்சர் ஷாஜி செரியன், “பெரிய நடிகர்கள் முதல் சிறிய நடிகர்கள்வரை யார் நடித்த படமாக இருந்தாலும் அதை முதலில் திரையரங்குகளில்தான் வெளியிட வேண்டும். ஓடிடி தளங்கள் மூலமாக முதலில் திரைப்படங்களை வெளியிடும் கலாசாரத்தை கேரள அரசு ஊக்குவிக்க விரும்பவில்லை”எனக் கூறினார்.
மேலும் பேசிய அவர், கரோனா ஊரடங்கு காலகட்டத்தில் இடைக்கால தேவைக்காக மட்டுமே பயன்படுத்தப்பட்ட ஒன்று. இக்கட்டான காலக்கட்டங்களிலும், திரையரங்குகளில் திரையிட வாய்ப்பு கிடைக்காத சிறிய படங்களை மட்டுமே ஓடிடியில் இனி வெளியிட வேண்டும். திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாவது நின்றுவிட்டால் சினிமாத் துறை அழிவை நோக்கி செல்லும்” என்றும் அவர் பேசினார்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்
மேலும் வாசிக்க: பட்டா அல்ல நம்பிக்கை.. முதல்வர் ஸ்டாலினுக்கு நெகிழ்ச்சியாய் நன்றி சொன்ன சூர்யா - ஜோதிகா!