பட்டா அல்ல நம்பிக்கை.. முதல்வர் ஸ்டாலினுக்கு நெகிழ்ச்சியாய் நன்றி சொன்ன சூர்யா - ஜோதிகா!
சென்னை: பழங்குடிமக்களின் இல்லம் தேடிச்சென்று வழங்கியிருப்பது வெறும் பட்டா அல்ல, புதிய நம்பிக்கை என முதலமைச்சருக்கு நடிகர் சூர்யா பாராட்டு தெரிவித்துள்ளார்.
செங்கல்பட்டு மாவட்டம் பூஞ்சேரி பகுதியில் வாழும் நரிக்குறவர்கள் மற்றும் இருளர் இன மக்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நலத்திட்ட உதவிகளை வழங்கினார்
அவர் நரிக்குறவர்கள், இருளர் இன மக்களுக்கு இலவச வீட்டு மனை பட்டா, முதியோர் உதவித்தொகை, ரேஷன் கார்டு, நலவாரிய அட்டை உள்ளிட்டவைகளை அளித்தார். இந்த விழாவில் பங்கேற்ற அவருக்கு நரிக்குறவர் சமூகத்தைச் சேர்ந்த அஸ்வினி என்ற பெண் பாசி மாலை அணிவித்து நன்றி தெரிவித்தார்
முதலமைச்சர் மு.க. ஸ்டாலினின் இந்த நடவடிக்கைக்கு பல்வேறு தரப்பினர் தங்களது பாராட்டை தெரிவித்துவருகின்றனர். அந்தவகையில் நடிகர் சூர்யா தனது ட்விட்டர் பக்கத்தில், “மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் அவர்கள் எளிய பழங்குடிமக்களின் இல்லம் தேடிச்சென்று வழங்கியிருப்பது வெறும் பட்டா அல்ல, புதிய நம்பிக்கை. காலங்காலமாக தொடரும் எளிய மக்களின் இன்னல்களுக்கு, நிரந்தர தீர்வு கிடைக்கும் என்கிற நம்பிக்கையை அளித்துள்ளது” என பதிவிட்டுள்ளார்.
மாண்புமிகு தமிழக முதல்வர் @mkstalin அவர்கள் எளிய பழங்குடிமக்களின் இல்லம் தேடிச்சென்று வழங்கியிருப்பது வெறும் பட்டா அல்ல, புதிய நம்பிக்கை. காலங்காலமாக தொடரும் எளிய மக்களின் இன்னல்களுக்கு, நிரந்தர தீர்வு கிடைக்கும் என்கிற நம்பிக்கையை அளித்துள்ளது… https://t.co/DRLkJLn14n
— Suriya Sivakumar (@Suriya_offl) November 4, 2021
அதேபோல் அவரது மனைவியும் நடிகையுமான ஜோதிகா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், “மதிப்பிற்குரிய ஐயா மக்களின் தேவைகளைக் கேட்டறிந்து அவற்றை நிறைவேற்ற உங்களால் முடிந்த அனைத்தையும் செய்வதன் மூலம் அதை நிரூபித்துள்ளீர்கள், மிக முக்கியமாக, அதை உடனடியாக நடைமுறைக்குக் கொண்டுவருவது. தலைமை என்பது ஒரு செயல், பதவி அல்ல என்பது நமக்கு நிரூபனமாகியுள்ளது.
கல்வி முறையில் நீங்கள் கொண்டு வரும் நேர்மறையான மாற்றங்களை குடிமகளாக நானும், அகரம் பவுண்டேஷனும் கடந்த 16 ஆண்டுகளில் அனுபவிக்காத ஒன்று.
எண்ணற்ற இருளர் மற்றும் குறவர் குடும்பங்களுக்கு நீங்கள் பட்டாக்கள், சாதி சான்றிதழ்கள் மற்றும் அரசாங்கத்தின் முக்கிய மானியங்களை விநியோகித்தது மனித குலத்திற்கு கிடைத்த வெற்றியாகும், மேலும் உங்களது செயல்கள் நமது அரசியல் அமைப்பின் மீது எங்களுக்கு நம்பிக்கையை ஏற்படுத்துகிறது.
View this post on Instagram
"முதலில் இருந்து இறுதிவரை நாம் இந்தியர்கள்" என்ற அம்பேத்கரின் நம்பிக்கையை உண்மையாக்கியதற்கு நன்றி. ஒரு குடிமகள் என்ற முறையில் மட்டுமின்றி தியா மற்றும் தேவ் ஆகியோரின் தாயாகவும் உங்கள் நிர்வாகம் மற்றும் உடனடி நடவடிக்கைகளுக்காக உங்களை முழு மனதுடன் நன்றி கூறிக்கொள்கிறேன்” என பதிவிட்டுள்ளார்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்