மேலும் அறிய

Yogi Babu : கோயிலில் தீண்டாமை கொடுமையை எதிர்கொண்டாரா யோகிபாபு?.. குவிந்த கண்டனங்கள்.. வைரலாகும் வீடியோ..

தீவிர முருக பக்தரான யோகிபாபு மனமுடைந்து போகும் படியான ஒரு நிகழ்வை எதிர்கொண்டுள்ளார் என்கிற ரீதியில் வீடியோ இணையத்தில் வைரலாகியுள்ளது.

சாதிய பாகுபாட்டை தங்களது வாழ்க்கையில் எதிர்கொள்ளாதவர்கள் மிக குறைவானவர்கள் தான். சாதாரன மக்கள் மட்டும் இல்லை நடிகர்களும் தீண்டாமையை எதிர்கொள்கிறார்கள் என்பதை நாம் பார்த்திருக்கிறோம். பா.ரஞ்சித் இயக்கிய படங்களில் நடித்த ஒரே காரணத்திற்காக தங்களுக்கு நடிக்கும் வாய்ப்புகள் மறுக்கப்பட்டிருக்கின்றன என்று சில நடிகர்கள் பல்வேறு நிகழ்ச்சிகளில்  தெரிவித்திருக்கிறார்கள். இந்த முறை தீண்டாமையை எதிர்கொண்டதாக சொல்லப்படுவது தனது காமெடிகளால் அனைவரையும் சிரிக்க வைக்கும் நடிகர் யோகிபாபு.

யோகிபாபு

சந்தானம் , சூரி ஆகியவர்களுக்குப் பின் தமிழ் சினிமாவில் காமெடியனாக உச்சத்தை தொட்டவர் என்றால் யோகிபாபுவை சொல்லலாம். முந்தைய இரண்டு நடிகர்களின் எந்த தாக்கமும் இல்லாமல் தனக்கென ஒரு தனி நகைச்சுவை பாணியை கொண்டவர். சின்ன சின்ன கதாபாத்திரங்களில் தொடங்கிய இவரது கேரியர் இன்று இவரை கலாய்ப்பதற்கு நான்கு சின்ன காமெடியன்கள் சேர்ந்து நடிக்கு வகையில்  நடிப்பில் சீனியராகி இருக்கிறார்.

அதே நேரத்தில் பெரிய பெரிய ஸ்டார்களின் கால்ஷீட் கூட கிடைத்துவிடும் ஆனால் யோகி பாபுவின் கால் ஷீட் கிடைக்குமா என்கிற சந்தேகம் வரும் அளவிற்கு பிஸியாக நடித்து வருகிறார். சின்ன படமோ பெரிய படமோ யோகி பாபு இருந்தால் ரசிகர்களை திரையரங்கத்திற்கு வரவழைக்கலாம் என்கிற நம்பிக்கையை தன்மேல் உருவாக்கி இருக்கிறார்.

 நாங்க ஹீரோவா நடிச்சா ஒத்துக்க மாட்டீங்களா

காமெடியனாக நடித்துவிட்டு ஹீரோவாக  நடிக்க ஒரு சில நடிகர்கள் திணறி வரும் நிலையில் அசால்ட்டாக தான் கதாநாயகனாக நடித்த முதல் படத்திலேயே லேடி சூப்பர்ஸ்டார் நயன்தாராவுடன் கனவு என்றாலும் ஒரு ரொமான்ஸ் பாடலிலும் நடித்துவிட்டார். இது ஒரு ஒன் டைம் லக் என்று சொன்னவர்கள் எல்லாம் மண்டேலா படம் தேசிய விருது வாங்கியபோது இவர் ஹீரோதான் என்று ஏற்றுக்கொள்ளதான் வேண்டும் என்று சமாதானத்திற்கு வந்தார்கள். எல்லா நேரமும் ஹீரோவாக நடிக்க முயற்சிக்காமல் நல்ல கதைகளுக்காக காத்திருந்து  நகைச்சுவைக் கதாபாத்திரங்களைத் தொடர்ந்து வருகிறார் யோகிபாபு.

மக்களை சிரிக்க வைக்கும் கலைஞனிடம் கூட சாதி பாக்கனுமா

View this post on Instagram
 
A post shared by YOGI BABU (@yogibabu.official_)

தீவிர முருக பக்தரான யோகி பாபு அவ்வப்போது கோவில்களுக்கு சென்று வருவது வழக்கம். அதேபோல் இந்த முறை சிறுவாபுரியில் இருக்கும் முருகன் கோவிலுக்குச் சென்ற யோகிபாபு அர்ச்சனை செய்துமுடித்தப் பின் தனது ரசிகர்களுடன் செல்ஃபி எடுத்துக்கொண்டார். இதனைத் தொடர்ந்து மிக சாதாரனமாக அர்ச்சகருக்கு கை கொடுத்தார் யோகி பாபு . ஆனால் அவருக்கு கை கொடுக்க மறுத்துவிட்டார் அர்ச்சகர்.

சாதிய பாகுபாட்டால் தான் கை கொடுக்க மறுத்துள்ளதாக இணையவாசிகள் கூறிவருகிறாரகள். இணையதளத்தில் பரவி வரும் இந்த காணொளி எல்லோரையும் கலாய்க்கும்  யோகி பாபு அமைதியாய் இருப்பதைக் கண்டு பொங்கி எழுந்துள்ளார்கள். ஆனால் இந்த வீடியோ தொடர்பாகவோ, சம்பவம் தொடர்பாகவோ யோகிபாபு தரப்பு விளக்கம் கொடுத்தால் மட்டுமே என்ன நடந்தது என்பது தெரிய வரும். 

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

எங்க அப்பாவ மன்னிச்சிடுங்க? தந்தையின் பகீர் குற்றச்சாட்டு.. அஸ்வின் மறுப்பு!
எங்க அப்பாவ மன்னிச்சிடுங்க? தந்தையின் பகீர் குற்றச்சாட்டு.. அஸ்வின் மறுப்பு!
Rahul Gandhi: ''ராகுல் காந்தி என்னிடம் தவறாக நடந்துகொண்டார்'' பாஜக பெண் எம்.பி. பகீர் குற்றச்சாட்டு!
''ராகுல் காந்தி என்னிடம் தவறாக நடந்துகொண்டார்'' பாஜக பெண் எம்.பி. பகீர் குற்றச்சாட்டு!
ஹனிமூனுக்கு அங்க போகக் கூடாது! புது மாப்பிள்ளை மீது ஆசிட் வீச்சு.. மாமனார் வெறிச்செயல்
ஹனிமூனுக்கு அங்க போகக் கூடாது! புது மாப்பிள்ளை மீது ஆசிட் வீச்சு.. மாமனார் வெறிச்செயல்
TN Rain: மழை வருமா, வராதா? ;  தமிழ்நாட்டில் 7 நாட்களில் மழை நிலவரம் எப்படி இருக்கும் தெரியுமா?
மழை வருமா, வராதா? ; தமிழ்நாட்டில் 7 நாட்களில் மழை நிலவரம் எப்படி இருக்கும் தெரியுமா?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Ashwin Profile: ”நான் சொடுக்கு பந்து போடணுமா?”தலையெழுத்தை மாற்றிய COACH நாயகன் அஸ்வினின் கதை..!Rahul gandhi on MP injury: ”ஆமா...தள்ளிவிட்டேன்! என்னையவே தடுக்குறீங்களா?” ஆதாரத்துடன் பேசிய ராகுல்Vijay vs Vck | வாயை திறக்காத விஜய்.. பணிய வைத்த விசிக!ரவுண்டு கட்டும் நெட்டிசன்ஸ்! tvk | vckMLA Inspection : ‘’எல்லாம் அறிவு கெட்டவனா?’’LEFT & RIGHT வாங்கிய MLA திக்குமுக்காடிய அதிகாரிகள்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
எங்க அப்பாவ மன்னிச்சிடுங்க? தந்தையின் பகீர் குற்றச்சாட்டு.. அஸ்வின் மறுப்பு!
எங்க அப்பாவ மன்னிச்சிடுங்க? தந்தையின் பகீர் குற்றச்சாட்டு.. அஸ்வின் மறுப்பு!
Rahul Gandhi: ''ராகுல் காந்தி என்னிடம் தவறாக நடந்துகொண்டார்'' பாஜக பெண் எம்.பி. பகீர் குற்றச்சாட்டு!
''ராகுல் காந்தி என்னிடம் தவறாக நடந்துகொண்டார்'' பாஜக பெண் எம்.பி. பகீர் குற்றச்சாட்டு!
ஹனிமூனுக்கு அங்க போகக் கூடாது! புது மாப்பிள்ளை மீது ஆசிட் வீச்சு.. மாமனார் வெறிச்செயல்
ஹனிமூனுக்கு அங்க போகக் கூடாது! புது மாப்பிள்ளை மீது ஆசிட் வீச்சு.. மாமனார் வெறிச்செயல்
TN Rain: மழை வருமா, வராதா? ;  தமிழ்நாட்டில் 7 நாட்களில் மழை நிலவரம் எப்படி இருக்கும் தெரியுமா?
மழை வருமா, வராதா? ; தமிழ்நாட்டில் 7 நாட்களில் மழை நிலவரம் எப்படி இருக்கும் தெரியுமா?
Sunita Williams: சிக்கித்தவிக்கும் சுனிதா வில்லியம்ஸ்?  பிப்ரவரியில் பூமி திரும்பமாட்டார்;  புதிய சிக்கல் என்ன?
சிக்கித்தவிக்கும் சுனிதா வில்லியம்ஸ்? பிப்ரவரியில் பூமி திரும்பமாட்டார்; புதிய சிக்கல் என்ன?
இது தனி ரூட்... தவெக மாநாடு வசூலில் பதம்பார்த்த லிஸ்டட் நிர்வாகிகள் ; மனஉளைச்சலில் பிற நிர்வாகிகள்...!
இது தனி ரூட்... தவெக மாநாடு வசூலில் பதம்பார்த்த லிஸ்டட் நிர்வாகிகள் ; மனஉளைச்சலில் பிற நிர்வாகிகள்...!
"ஒரு ஆணுக்கு இரண்டு மனைவிகள்.. லிவ் இன் ரிலேஷன்ஷிப் தவறு" நிதின் கட்காரி பரபர கருத்து!
Ambedkar Row: என்னதான் நடக்கிறது டெல்லியில்? ஐசியுவில் பாஜக எம்.பி.- காங்கிரஸ் தலைவர் கார்கேவுக்கு காயம்!
Ambedkar Row: என்னதான் நடக்கிறது டெல்லியில்? ஐசியுவில் பாஜக எம்.பி.- காங்கிரஸ் தலைவர் கார்கேவுக்கு காயம்!
Embed widget