மேலும் அறிய

Music Director Raj: 3000 பாடல்களுக்கு இசையமைத்த பிரபல இசையமைப்பாளர் மரணம் - திரையுலகினர் அதிர்ச்சி

பிரபல இசையமைப்பாளர் ராஜ் காலமான தகவல் தென்னிந்திய சினிமாவில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது, 

பிரபல இசையமைப்பாளர் ராஜ் காலமான தகவல் தென்னிந்திய சினிமாவில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது, 

90 காலக்கட்டத்தில் தென்னிந்திய இசையமைப்பாளர்களில் பிரபலமான ஒருவராக திகழ்ந்த இரட்டை இசையமைப்பாளர்கள் ‘ராஜ்-கோடி’ . தோட்டகுரு சோமராஜு மற்றும் சலூரி கோட்டேஷ்வர் ராவ் என்பது இவர்களின் உண்மையான பெயராகும். இவர்கள் இருவரும் சுமார் 180 மேற்பட்ட படங்களுக்கு இசையமைத்துள்ளனர். 90களில் பல படங்களுக்கு சூப்பர் ஹிட் பாடல்களை கொடுத்துள்ள ராஜ் - கோடி இசையில் வெளியான 3000 பாடல்களில், சுமார் 2,500 பாடல்களை பாடகர்கள் எஸ்.பி.பாலசுப்ரமணியம் மற்றும் கே.எஸ்.சித்ரா ஆகியோர் பாடியுள்ளனர். 

இவர்களிடம் இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் 8 ஆண்டுகள் கீ-போர்டு பிளேயராக பணியாற்றியுள்ளார். இப்படி புகழ்பெற்ற இந்த கூட்டணி 1982 ஆம் ஆண்டு முதல் 1995 ஆம் ஆண்டு வரை இசை உலகில் கொடிகட்டி பறந்தனர். இவர்களில் 68 வயதான ராஜ், ஹைதராபாத் குகட் பாலியில் உள்ள ஃபோரம் மால் அருகே வசித்து வருகிறார். 

இவருக்கு தீப்தி, ஸ்வேதா, திவ்யா என்ற மூன்று மகள்கள் உள்ளனர். இவர்களில் திவ்யா இணை இயக்குநராக பணியாற்றி வருகிறார். மற்ற இருவரும் மலேசியாவில் வசித்து வருகின்றனர்.  இப்படியான நிலையில்  ராஜ் நேற்று குளியலறையில் தவறி விழுந்ததாக கூறப்படுகிறது. இதில் மயக்கமான அவரை மீட்டு குடும்பத்தினர் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ராஜை பரிசோதித்த மருத்துவர்கள், விழுந்த அதிர்ச்சியில் மாரடைப்பு ஏற்பட்டு அவர் உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர். இதனைக் கேட்டு குடும்பத்தினர் கடும் அதிர்ச்சியடைந்தனர். 

ராஜின் இறுதி சடங்குகள் ஹைதராபாத்தில் உள்ள மகாபிரஸ்தானத்தில் இன்று நடைபெறுகிறது. அவரது இரு மகள்களும் மலேசியாவில் இருந்து இந்தியா விரைந்து வந்துள்ளனர். ராஜ் மறைவு செய்தி கேட்டவுன் தென்னிந்திய திரையுலக பிரபலங்கள், ரசிகர்கள் அவரது குடும்பத்தினருக்கு தங்கள் இரங்கலைத் தெரிவித்தனர். சமீபகாலமாக திரையுலகில் பிரபலங்களின் மரணங்கள் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி வருகிறது.

நடப்பாண்டில் மட்டும் தமிழ் சினிமாவில் நடிகர்கள் மனோபாலா, இயக்குநர் டிபி கஜேந்திரன், மயில்சாமி, நடிகை விஜயலட்சுமி உள்ளிட்ட பிரபலங்கள் அடுத்தடுத்து உயிரிழந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.  

தலைப்பு செய்திகள்

2 நிமிடப் காட்சிக்காக நோக்கியா அலுவலகத்திற்கே சென்ற ஷங்கர்! கண்ணும் கண்ணும் நோக்கியா பாடல் பின்னணி
2 நிமிடப் காட்சிக்காக நோக்கியா அலுவலகத்திற்கே சென்ற ஷங்கர்! கண்ணும் கண்ணும் நோக்கியா பாடல் பின்னணி
 “யுவர்ஸ் லவ்விங்லி” … இறுதிக்கட்டத்தை நெருங்கும் படப்பிடிப்பு!
 “யுவர்ஸ் லவ்விங்லி” … இறுதிக்கட்டத்தை நெருங்கும் படப்பிடிப்பு!
விஜய் மில்டனின் ‘தொண்டர் படை – Chapter 1: Gods and Soldiers’ படத்தின் முதல் பாடல் ‘நந்தினி’ வெளியீடு!
விஜய் மில்டனின் ‘தொண்டர் படை – Chapter 1: Gods and Soldiers’ படத்தின் முதல் பாடல் ‘நந்தினி’ வெளியீடு!
Karthigai Deepam: ரேஷன் கடைக்காரரை வைத்து புதிய சதி.. விசாரணையில் இறங்கிய கார்த்திக்! கார்த்திகை தீபத்தில் இன்று
Karthigai Deepam: ரேஷன் கடைக்காரரை வைத்து புதிய சதி.. விசாரணையில் இறங்கிய கார்த்திக்! கார்த்திகை தீபத்தில் இன்று

வீடியோ

Nepal Flood | அதிகாலையில் திடீர் வெள்ளம் அலறியடித்து ஓடிய மக்கள் நேபாளத்தில் மீண்டும் பேரதிர்ச்சி!
லவ் டார்ச்சர் கொடுத்த இளைஞர் இளம்பெண் விபரீத முடிவு அடித்தே கொன்ற உறவினர்கள்!
கோவிலுக்குள் பாலியல் தொல்லை சிறுமிக்கு நேர்ந்த கொடூரம் அதிர்ச்சியூட்டும் CCTV காட்சிகள்!
அன்று இந்தியாவுக்கு நெருக்கடி இன்று ரஷ்யாவுடன் டீல் அந்தர் பல்டி அடித்த ட்ரம்ப்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CM Vijay:
CM Vijay: "தளபதி விஜய்.." ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு சொன்னதும் அதிர்ந்த அரங்கம்!
Special Bus: ஆயுதபூஜைக்கு ஊருக்கு போறீங்களா? 15 ஆயிரம் பஸ் ரெடி - எந்த ஊருக்கு போக எங்கே ஏறணும்?
Special Bus: ஆயுதபூஜைக்கு ஊருக்கு போறீங்களா? 15 ஆயிரம் பஸ் ரெடி - எந்த ஊருக்கு போக எங்கே ஏறணும்?
Udhayanidhi: ஒரு யூனிட் மின்சாரம் ரூபாய் 35; நாட்டின் நம்பர் 1 டுபாக்கூர் விஜய் - விமர்சித்த உதயநிதி
Udhayanidhi: ஒரு யூனிட் மின்சாரம் ரூபாய் 35; நாட்டின் நம்பர் 1 டுபாக்கூர் விஜய் - விமர்சித்த உதயநிதி
CM Vijay: உள்ளே வரும் பாமக? திருமாவை சமாதானப்படுத்த முயற்சி! கழட்டிவிட அமைச்சர்கள் ஐடியா! விஜய் முடிவு என்ன?
CM Vijay: உள்ளே வரும் பாமக? திருமாவை சமாதானப்படுத்த முயற்சி! கழட்டிவிட அமைச்சர்கள் ஐடியா! விஜய் முடிவு என்ன?
அமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார் எல்.முருகன் - ஏன் இந்த திடீர் முடிவு?
அமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார் எல்.முருகன் - ஏன் இந்த திடீர் முடிவு?
திருநெல்வேலி, தூத்துக்குடியில் நாளை மறுநாள் (15.10.2026) மின்தடை ! முழு விவரம்!
திருநெல்வேலி, தூத்துக்குடியில் நாளை மறுநாள் (15.10.2026) மின்தடை ! முழு விவரம்!
கமிஷன் வாங்குவதற்காக ஆந்திரா சென்றுள்ளீர்களா? முதலமைச்சர் விஜய்க்கு முன்னாள் சபாநாயகர் கேள்வி
கமிஷன் வாங்குவதற்காக ஆந்திரா சென்றுள்ளீர்களா? முதலமைச்சர் விஜய்க்கு முன்னாள் சபாநாயகர் கேள்வி
சினிமா துறையினருக்கு அரசுப் பதவி... தகுதி இல்லையா? - ஆவேசமடைந்த பிரபல பாடகர்
சினிமா துறையினருக்கு அரசுப் பதவி... தகுதி இல்லையா? - ஆவேசமடைந்த பிரபல பாடகர்
Embed widget