Seetha Raman: சீதாவுக்கு செக் வைக்க மகா போட்ட பிளான், சிக்கிய ராம் - சீதா ராமன் சீரியலின் இன்றைய அப்டேட்..!
ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் இரவு 7.30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் சீதா ராமன்.
ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் இரவு 7.30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் சீதா ராமன்.
இந்த சீரியலில் நேற்றைய எபிசோடில் சீதாவை பழிவாங்க மகா புதிய திட்டம் தீட்டிய நிலையில் இன்று நடக்கப் போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க. அதாவது வீட்டுக்கு கிளம்பும் மீரா சீதாவிடம் மகாவும் அர்ச்சனாவும் நல்லவர்கள் போல பேசுவதை நம்ப முடியவில்லை என்று சொல்ல சீதா அவங்க வேற ஏதாவது திட்டம் வச்சிருப்பாங்க என்று சொல்கிறாள்.
எதுவாக இருந்தாலும் பாத்துக்கலாம் உங்களுக்கு ஒரு போன் பண்ணா நீங்க வந்து விட மாட்டீங்களா என்று சொல்லி சீதா மீராவை வழி அனுப்பி வைக்க அர்ச்சனா எதிரில் வந்து இன்று முறைக்க சீதா ரொம்ப நேரம் நிக்காதீங்க வெயிட் தாங்காம கீழே விழுந்துட போறீங்க என குண்டாக இருப்பதை கிண்டல் அடித்து விட்டு உள்ளே செல்கிறாள்.அதைத்தொடர்ந்து மூன்று பெண்களையும் காலேஜிலிருந்து வீட்டிற்கு அழைத்து வரும் மகா அவர்களை தனியாக அழைத்துச் சென்று ராம் மனசில் ஐபிஎஸ் கனவு பூதகரமாக வேண்டும் அதற்கு ஏற்றார் போல நீங்கள் எல்லோரும் பேச வேண்டும் என்று சொன்ன அவர்களும் ராம் இருக்கும் ரூமுக்கு சென்று அவனிடம் நீ ஐபிஎஸ் ஆகணும்னா என பேசி பேசி ஆசையை தூண்டுகின்றனர்.
அவர்கள் மட்டுமல்லாமல் அர்ச்சனா, சுபாஷ் என எல்லோரும் ஐபிஎஸ் கனவு பற்றி பேசி ராமின் ஆசையை அதிகப்படுத்துகின்றனர். இதையெல்லாம் பார்த்த சீதாவுக்கு லைட்டாக சந்தேகம் வருகிறது.அதைத்தொடர்ந்து மகா செய்துவிடும் வந்து நாசுக்காக பேசி ராம் மனதில் இருக்கும் ஐபிஎஸ் கனவு பற்றி எடுத்து சொல்லி நீங்களா அவனிடம் சொல்வது போல சொல்லி அவனை ஐபிஎஸ் ஆக வேண்டும் என சொல்லுங்க என்று சொல்ல சேதுவும் மகாவின் நடிப்பை நம்பி சம்மதம் தெரிவிக்கிறார்.
அதைத்தொடர்ந்து ராம் சேதுவின் காலுக்கு எண்ணெய் தேய்த்து விட்டுக் கொண்டிருக்கும் போது செய்து உனக்கு ஐபிஎஸ் ஆகணும்னு ஆசை இருக்கா என்று கேட்க ராம் ஆமாம் என்று சொல்ல உன்னுடைய ஆசை நிறைவேறனும் நீ ஐபிஎஸ் ஆகணும் உன்ன போலீஸ் டிரஸ்ல கம்பீரமா பாக்கணும் என தன்னுடைய ஆசையை சொல்ல ராம் சந்தோஷமடைகிறான்.
இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய சீதா ராமன் சீரியலை உங்கள் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காணத்தவறாதீர்கள்.