Seetha Raman: சீதாவின் வலையில் சிக்கிய மகா.. காத்திருக்கும் பேரதிர்ச்சி - சீதா ராமன் இன்றைய எபிசோட் அப்டேட்
ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் இரவு 7.30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் சீதாராமன்.
ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் இரவு 7.30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் சீதாராமன்.
இந்த சீரியலில் வெள்ளிக்கிழமை எபிசோடில் மகாவின் ரூமில் ரகசிய கேமரா மற்றும் மைக் பொருத்தியும் சூர்யா வீட்டில் கஞ்சா வைத்தது பற்றி எதுவும் பேசாத நிலையில் இன்று நடக்கப் போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க.
சீதாவிடம் இந்த விஷயங்களை சொல்ல அதைக் கேட்ட அவள் என்கிட்ட இன்னொரு ஐடியா இருக்கு என்று சொல்கிறாள். அதாவது வீட்டில் ரகசிய கேமரா வைத்தது போல ஆபிசிலும் வைக்க, கண்டிப்பா அவங்க பேசுவாங்க என்று சொல்ல இது சூப்பர் ஐடியா என்று சொல்லி இருவரும் கிளம்பி செல்கின்றனர்.
துரை ஆஃபீஸில் ஏசி ரிப்பேர் என அதை சரி செய்ய அங்கு வரும் மகா இது ஏதோ தப்பா படுதே என்று யோசிக்க சுபாஷ் மற்றும் அர்ச்சனா ஆகியோர் இதுல என்ன தப்பு இருக்க போகுது? இதில் எல்லாம் லாஜிக் பார்க்காத என்று சொல்கின்றனர்.
அதை தொடர்ந்து துரை இவர்களை ஒருவழியாக சமாளித்து ரகசிய கேமரா மற்றும் மைக் பொருத்தி விடுகிறான். பிறகு ராம் அங்கு வர அவன் கண்கள் சிவந்து இருப்பதை பார்த்து எல்லோரும் என்ன சீதாவை பத்தியே யோசிச்சிட்டு இருந்தியா என்று கலாய்க்க அவன் சூர்யா வீட்டில் கஞ்சா வச்சது நமக்கு நெருக்கமான இரண்டு பேர் தான், அவங்க யாரா இருந்தாலும் சும்மா விடமாட்டேன் என்று சொல்ல எல்லோருக்கும் டென்ஷன் அதிகமாகிறது.
பிறகு ராம் உள்ளே சென்றதும் இந்த கஞ்சா விஷயம் பற்றி பேச இதை எல்லாம் வெளியவா பேசுவாங்க என்று சொல்லி துரை ரூமுக்குள் அனுப்பி வைக்கிறார். ரூமுக்குள் வந்ததும் சுபாஷ் மற்றும் சேது நாம கஞ்சா வச்சி இருக்க கூடாது வேற யாரையாவது வைத்து வச்சி இருக்கணும் என்று பேச சத்யன் இதை எல்லாம் ரெக்கார்ட் செய்து விடுகிறான்.
அதன் பிறகு சீதாவை சந்தித்து இதை காமிக்க அவள் இது போதும் எல்லாரையும் ஒரே நேரத்தில் உள்ள அனுப்பிட்டா அவங்க படுற கஷ்டத்தை நம்மளால பார்க்க முடியாது. சேதுவும் சுபாஷூம் ஜெயிலுக்கு போகட்டும், மகாவும் அர்ச்சனாவும் இதை நினைத்து நினைத்து கஷ்டப்படுவதை நாம பார்க்கணும். அதுக்காக அவங்க வெளியவே இருக்கட்டும் என சொல்ல இதுவும் நல்லா ஐடியா தான் என சத்தியன் மற்றும் துரை சம்மதம் தெரிவிக்கும் காட்சிகள் இடம் பெற்றுள்ளது.