Maari Serial: தாராவை பதறவிட்ட மாரியின் குழந்தை - மாரி சீரியல் இன்றைய எபிசோட் அப்டேட் இதோ!
Zee Maari Serial : தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் சனி வரை தினமும் மாலை 6.30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் மாரி
Zee Maari Serial : தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் சனி வரை தினமும் மாலை 6.30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் மாரி. கடந்த சனிக்கிழமை எபிசோடில் தாரா சங்கரபாண்டியுடன் ஹாஸ்பிடலுக்கு வந்திருக்க அதை ஆஸ்பிட்டலுக்கு சாஸ்திரி குழந்தையுடன் வந்திருந்த நிலையில் இன்று நடக்கப்போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க.
அதாவது தாராவும் சாஸ்திரியும் அதே ஹாஸ்பிடலில் இருக்க குழந்தையின் கை தாராவின் மீது பட மீண்டும் அவளது கை பற்றி எறிய தொடங்குகிறது. பிறகு சாஸ்திரி குழந்தையை கூட்டிக்கொண்டு கிளம்ப தாரா அந்த குழந்தை இங்க தான் இருக்கு என்று குழந்தையை தேட சொல்லி சங்கரபாண்டியை அனுப்பி வைக்கிறாள்.
இதனால் சங்கர பாண்டி சாஸ்திரி செல்லும் ஆட்டோவை பின் தொடர்ந்து செல்ல ஆட்டோ சாஸ்திரியை இறக்கிவிட்டு திரும்பி வரும்போது அந்த டிரைவரிடம் அவங்களை எங்க விட்டுட்டு வந்த என்று கேட்க சங்கர பாண்டியின் பேச்சுத் தோரணையை வைத்து இது ஏதோ தப்பா இருக்கு என ஆட்டோ டிரைவர் சொல்ல மறுத்து கிளம்பி வருகிறார்.
குழந்தை இருக்கும் ஏரியாவை கண்டு பிடிச்சாச்சு இதை அக்கா கிட்ட சொல்லுவோம் என சங்கர பாண்டி கிளம்பி வருகிறார். ஹாஸ்பிடலில் தாரா வழியில் தவிக்க சங்கரபாண்டி இவ்வளவு நாளா அவஸ்தைப்பட்டு இப்பதான் சரியாகி வந்தது, இப்ப திரும்பவும் அதே கையில அடிபட்டிருச்சு என்று புலம்புகிறார். ரவுடிகளை ஏற்பாடு பண்ணி வச்சிருக்கேன் கண்டிப்பா அந்த குழந்தையை பிடித்து விடலாம் என்று சொல்கிறார்.
இதையடுத்து டாக்டர் சந்தித்து ட்ரீட்மென்ட் எடுக்க அவர் திரும்ப எப்படி அடிபட்டிச்சு ஏதோ ஒரு காரணத்தை சொல்லி சமாளிக்கின்றனர். இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய மாரி சீரியலை ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காணத்தவறாதீர்கள்.