Karthigai Deepam: திருட்டு மாங்காய் அடித்து கண்மாய்க்கு சென்ற கார்த்திக், ரேவதி - அடுத்து நடந்த ரொமான்ஸ்!
Karthigai Deepam Serial: கார்த்திகை தீபம் சீரியலில் இன்று என்ன நடக்கப்போகிறது? என்பதை கீழே விரிவாக காணலாம்.

தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் சனி வரை இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் கார்த்திகை தீபம். இந்த சீரியலின் நேற்றைய எபிசோடில் கார்த்திகை தீபம். இந்த சீரியலின் நேற்றைய எபிசோடில் கார்த்திக் ரேவதி கிராமத்திற்கு வந்த நிலையில் இன்று நடக்கப்போவது என்ன? என்பது குறித்து பார்க்கலாம் வாங்க.
திருட்டு மாங்காய்:
அதாவது, ரேவதி மாங்காய் தோட்டத்தை பார்த்து மாங்காய் சாப்பிட வேண்டுமென ஆசைப்படுகிறாள். கார்த்திக் தோட்டத்துகாரரிடம் பேசி வாங்கி தருவதாக சொல்ல, ரேவதி "திருட்டு மாங்காய் தான் ருசியா இருக்கும்" என்று சொல்கிறாள்.
இதனால் கார்த்தியும், ரேவதியும் தோட்டத்துக்குள் புகுந்து கல் எடுத்து அடிக்க, அந்த கல் யாரோ ஒருவர் தலையில் விழுந்து அவர் இவர்களை துரத்த இருவரும் அங்கிருந்து எஸ்கேப் ஆகி விடுகின்றனர். பிறகு இருவரும் சேர்ந்து கண்மாய்க்கு வருகின்றனர்.
புடவையில் மீன்:
தனித்தனியாக மீன் பிடிக்கின்றனர், ஆனால் யாருக்கும் மீன் கிடைக்காததால் பிறகு இருவரும் சேர்ந்து புடவை முந்தானையில் மீன் பிடிக்க முயற்சிக்க மீனும் கிடைக்கிறது, பிறகு இதை சுட்டு சாப்பிட முடிவெடுக்கின்றனர்.
இப்படியான நிலையில் அடுத்து நடக்கப்போவது என்ன என்பது குறித்து அறிய கார்த்திகை தீபம் சீரியலை உங்கள் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காணத்தவறாதீர்கள்.





















