Karthigai Deepam: ரேவதியை கட்டிப்பிடித்த கார்த்திக்.. அடுத்து நடந்தது என்ன? கார்த்திகை தீபத்தில் இன்று
Karthigai Deepam: கார்த்திகை தீீபம் சீரியலில் இன்று என்ன நடக்கப்போகிறது? என்பதை கீழே விரிவாக காணலாம்.

தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் சனி வரை இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் கார்த்திகை தீபம்.
இந்த சீரியலில் சனிக்கிழமை எபிசோடில் கார்த்திக் ரேவதியிடம் உன் மேல எனக்கு எந்த விருப்பமும் இல்லை என்று சொல்லிய நிலையில் இன்று நடக்கப்போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க
உண்மையை உடைத்த மயில்வாகனம்:
அதாவது கார்த்திக் சொன்னதை நினைத்து ரேவதி வருத்தப்பட, அங்கு வந்த மயில்வாகனம் கார்த்திக்கும் உன் மேல காதல் இருக்கு. ராஜா சேதுபதியோட பேரன் தான் கார்த்திக் என்ற விஷயம் தெரிந்தால் அத்தை அவனை வீட்டை விட்டு வெளியே அனுப்பிடுவாங்க அதனால ரெண்டு பேரும் பிரிய வேண்டிய சூழ்நிலை உருவாகும். உனக்கு கஷ்டத்தை கொடுக்க வேண்டாம் என்று தான் கார்த்திக்கு இப்படி இருக்கான் என்ற உண்மையை உடைக்கிறான்.
ரேவதியை கட்டியணைத்த கார்த்திக்:
மீண்டும் ரூமுக்கு வந்த ரேவதி என்ன நடந்தாலும் நான் உன்னை விட்டு விலக மாட்டேன். இதுக்கு மேலயும் என்னை தள்ளி வைக்காத என்று வருத்தப்பட கார்த்திக் ரேவதியை கட்டியணைத்துக் கொள்கிறான்.
வீட்டிற்குள் நாட்டு வெடிகுண்டு:
சிவனாண்டி நாட்டு வெடிகுண்டை சாமுண்டீஸ்வரி வீட்டுக்குள் கொண்டு வந்து மறைத்து வைக்கிறான். அவன் வீட்டுக்குள் வந்து சென்ற நேரத்தில் அவன் கழுத்தில் இருந்த செயின் தவறுதலாக கீழே விழுந்து விடுகிறது.
அடுத்து ரேவதி கார்த்தியிடம் நீ பட்டாசு வெடிக்கும்போது மேல ஐ லவ் யூ னு வரணும் அந்த மாதிரி ஏற்பாடு பண்ணு என்று சொல்லி மொட்டை மாடிக்கு அழைத்துச் செல்கிறாள். பட்டாசுகளுடன் சேர்த்து நாட்டு வெடிகுண்டை எடுத்துச் சென்று விடுகின்றனர்.
கார்த்திக் அது நாட்டு வெடிகுண்டு என்பதை கண்டுபிடிப்பான இல்லையா? என்ற பில்டப் செல்ல பட்டாசு கொளுத்த போகும் சமயத்தில் அங்கு வந்த சாமுண்டீஸ்வரி இப்ப வேண்டாம் காலையில வெடிங்க என்று தடுத்து விடுகிறாள். இங்கே பரமேஸ்வரி வீட்டுக்கு வந்த தீபாவதி பாட்டி தூங்கியதும் கார்த்திக் குறித்த ஆதாரம் ஏதாவது கிடைக்கிறதா என அலசுகிறாள். திடீரென பரமேஸ்வரி பாட்டி தண்ணீர் குடிக்க எழுந்து வர தீபாவதி சந்தேகம் வராமல் எஸ்கேப் ஆகிறாள்.
தல தீபாவளி கொண்டாட்டம்:
அடுத்த நாள் காலையில் சாமுண்டீஸ்வரி வீட்டில் கார்த்திக் ரேவதி தல தீபாவளியை கொண்டாட தயாராகின்றனர். இங்கே துர்கா நவீன் வெளியில் கிளம்ப பரமேஸ்வரி பாட்டி சந்தோஷமா போயிட்டு வாங்க என்று வாழ்த்தி அனுப்புகிறார். தீபாவதியிடம் இரண்டு பேரும் வீட்டை விட்டு ஓடி வந்து கல்யாணம் பண்ணிக்கிட்டாங்க. இப்போ அவ அம்மா கையால துணி வாங்கிட்டு வர்றதுக்காக போறான் என்று சொல்ல தீபாவதி அது எப்படி முடியும் என்று கேட்க அங்கே என் பேரன் ராஜா இருக்கான் அவன் மனசு வச்சா எல்லாம் நடக்கும் என்று சொல்கிறாள்.
இங்கே சாமுண்டீஸ்வரி கார்த்திக் ரேவதியிடம் மோதிரத்தை கொடுத்து இருவரையும் மாற்றிக்கொள்ள சொல்கிறாள். ரோகினி துர்கா இருந்தா இன்னும் நல்லா இருக்கும் என்று வருத்தப்படுகிறாள். இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்கப் போவது என்ன என்பது குறித்து அறிய கார்த்திகை தீபம் சீரியலை உங்கள் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காணத்தவறாதீர்கள்.




















