வான்டடா போயி மாட்டிக்கிட்ட சந்திரகலா! கார்த்திக்கிடம் சாமுண்டீஸ்வரி சொல்வது என்ன?
ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் சீரியலில் இன்று என்ன நடக்கப்போகிறது? என்பதை கீழே காணலாம்.
தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் சனி வரை இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் கார்த்திகை தீபம்.
கார்த்திக்கை பாராட்டும் சாமுண்டீஸ்வரி:
இந்த சீரியலின் நேற்றைய எபிசோடில் கார்த்திக் கலசத்தை மீட்டு வர, சந்திரகலா அதிர்ச்சியான நிலையில் இன்று நடக்க போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க.
அதாவது, சந்திரகலா நான் தான் கலசத்தை எடுத்தது என்ற உண்மையை கார்த்திக் சொல்லி விட்டால் என்ன செய்வது? என பயப்பட, சிவனாண்டி அதெல்லாம் நடக்காது என அவளுக்கு ஆறுதல் சொல்லி அனுப்பி வைக்கிறான்.
பதறும் சந்திரகலா:
அடுத்து வீட்டிற்கு வந்த கார்த்திக்கை நீ என்னுடைய கௌரவத்தையும் இந்த குடும்ப மானத்தையும் காப்பாத்திட்ட என்று சொல்லி பாராட்டுகிறாள், அதே சமயம் உன் மேல ஒரு குற்றசாட்டு விழுந்து இருக்கு.. அதுக்கும் உனக்கும் சம்மந்தம் இல்லனு நீ நிரூபிக்கணும் என சாமுண்டீஸ்வரி சொல்கிறாள்.
சந்திரகலா இடையில் புகுந்து அப்புறம் அவன் நான் தான் கலசத்தை எடுத்துதேன், நானும் சிவனாண்டியும் பேசிட்டு இருந்தோம் என என் மேல பழியை போடுவான் என பதற, மயில்வாகனம் அவன் அப்படி சொல்லவே இல்ல, நீங்க ஏன் பதறுறீங்க என்று கேட்க சந்திரகலா சமாளித்து விடுகிறாள்.
முகம் தெரியாத எதிரி:
தொடர்ந்து மயில்வாகனம் இது எப்படி நடந்தது என கார்த்திக்கிடம் கேட்க, கார்த்திக் விஷயம் தெரிந்தா வீட்டில் எல்லாரும் கஷ்டப்படுவாங்க? சந்திரகலா தான் என்று சொல்ல மயில் வாகனம் அதிர்ச்சியாகிறார். சந்திரகலா, சிவனாண்டி இல்லாமல் முகம் தெரியாத எதிரி யாரோ இருக்காங்க என்று சொல்கிறான்.
அதன் பிறகு எல்லாரும் சாப்பிட்டு கொண்டிருக்க கார்த்தியும் சாப்பிட வர சந்திரகலா அவனை சாப்பிட விடாமல் நிற்க வைத்து அவனமானப்படுத்துவது போல் பேசுகிறாள். இப்படியான நிலையில் அடுத்து நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய கார்த்திகை தீபம் சீரியலை உங்கள் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காண தவறாதீர்கள்.