Karthigai deepam: வெளியில் பாராட்டு.. வீட்டில் திட்டு! சுவாதியிடம் இரட்டை முகம் காட்டும் சாமுண்டீஸ்வரி - கார்த்திகை தீபத்தில் இன்று
karthigai deepam serial: கார்த்திகை தீபம் சீரியலில் இன்று என்ன நடக்கப்போகிறது? என்பதை கீழே விரிவாக காணலாம்.

தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் இரவு 9:15 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் கார்த்திகை தீபம்.
சட்டை போட மறுக்கும் கார்த்திக்:
இந்த சீரியலின் நேற்றைய எபிசோடில் காலேஜில் ஒரு பெண்ணை காப்பாற்றிய சண்டையில் கார்த்தியின் சட்டை கிழிந்த நிலையில் இன்று நடக்கபோவது என்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க.
அதாவது, ரேவதி கார்த்திக்காக ஒரு சட்டை எடுக்க கடைக்கு வருகிறாள், அதே நேரத்தில் காலேஜில் ஒரு பெண் சட்டையை கொண்டு வந்து கொடுத்து போட்டுக்கொள்ள சொல்ல கார்த்திக் என் மனைவி எனக்காக டிரஸ் எடுக்க போய் இருக்காங்க என்று சொல்லி மறுத்து விடுகிறான்.
சிறப்பு விருந்தினராக சாமுண்டீஸ்வரி:
இதையடுத்து ரேவதி வாங்கி வந்து கொடுத்த சட்டையை போட்டு கொள்கிறான், தொடர்ந்து காலேஜில் ப்ரோகிராம் தொடங்குகிறது. ஸ்வாதியும் பாடி முடிக்கிறாள். பிறகு வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு கொடுக்க சீப் கெஸ்ட் ஒருவர் வரப்போவதாக சொல்கின்றனர்.
கொஞ்ச நேரத்தில் சாமுண்டீஸ்வரி என்ட்ரி கொடுக்க கார்த்திக், ரேவதி, ஸ்வாதி என மூவரும் அதிர்ச்சி அடைகின்றனர். இருப்பினும் ஸ்வாதியிடம் நீ போய் பரிசை வாங்கு என்று சொல்ல சாமுண்டீஸ்வரி என் பொண்ணு தான்.. அவ இவ்வளவு நல்லா பாடுறது பெருமையா இருக்கு என்று பேசுகிறாள்.
வீட்டில் விழும் திட்டு:
ஆனால் வீட்டுக்கு வந்த பிறகு யாரை கேட்டு நீ பாடுன என்று சத்தம் போடுகிறாள். இதுக்கு நீயும் உடந்தையா என்று ரேவதி மீதும் கோபப்படுகிறாள். இப்படியான நிலையில் அடுத்து நடக்கப்போவது என்ன என்பது குறித்து அறிய கார்த்திகை தீபம் சீரியலை உங்கள் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காணத்தவறாதீர்கள்.





















