கொள்ளி வைத்த கார்த்தி.. சாமுண்டீஸ்வரிக்கு தெரிந்த உண்மை - கார்த்திகை தீபத்தில் விறுவிறுப்பு
கார்த்திகை தீபம் சீரியலில் அபிராமிக்கு கார்த்திக் கொள்ளி வைத்த நிலையில், உண்மை சாமுண்டீஸ்வரிக்கும் தெரியவந்துள்ளது.

தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் வெள்ளி வரை இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் கார்த்திகை தீபம். அதிகளவு ரசிகர்கள் கொண்ட இந்த சீரியலுக்கு நேற்றைய எபிசோடில் கார்த்திக் அபிராமிக்கு கொள்ளி வைக்க அதை ரேவதி பார்த்து உண்மையை அறிந்து கொண்ட நிலையில் இன்று நடக்கப்போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க.
கார்த்திக்கை சத்தியத்தை அறிந்த ரேவதி:
அதாவது கார்த்திக் தனது அம்மாவுக்கு இரண்டு குடும்பத்தையும் சேர்த்து வைப்பேன் என சத்தியம் செய்த விஷயம் தெரிய வருகிறது. இதனால் ரேவதி கார்த்திக் நல்லவன் தான் என்ற முடிவுக்கு வருகிறாள்.
மறுபக்கம் சந்திரகலா சாமுண்டீஸ்வரியிடம் கார்த்தி தான் பரமேஸ்வரி பார்ட்டி ஓட பேரன் என்று திரும்ப திரும்ப சொல்ல அதை அவன் நம்ப மறுக்கிறாள். அதன் பிறகு ரேவதி பரமேஸ்வரி பாட்டி பார்த்து உண்மைய சொல்லுங்க ராஜா தான் உங்க பேரனா என்று தன் தலையில் சத்தியம் செய்ய சொல்லிக் கேட்கிறாள்.
உண்மையை ஒப்புக்கொண்ட பரமேஸ்வரி:
பிறகு பரமேஸ்வரி பாட்டி ஆமாம் என்று உண்மையை சொல்ல ரேவதி அதிர்ச்சி அடைகிறாள். அதைத்தொடர்ந்து வில்லன்கள் எல்லோரும் ஒன்று சேர்ந்து கூடிய விரைவில் ராஜா சேதுபதியின் பேரன் கார்த்தி தான் என்ற உண்மையை உடைக்க வேண்டும் என திட்டமிடுகின்றனர்.
இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய கார்த்திகை தீபம் சீரியலை உங்கள் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காணத்தவறாதீர்கள். இந்த சீரியல் சூடுபிடித்த நிலையில், அடுத்து நடக்கப்போவது என்ன? என்பதை கீழே காணலாம்.





















