Idhayam Serial : ஆதி, பாரதி நிச்சயம்.. கடுப்பாகும் மரகதம்.. இதயம் சீரியல் இன்றைய எபிசோட் அப்டேட்
இதயம் சீரியலின் இன்றைய எபிசோட் அப்டேட் குறித்துப் பார்க்கலாம்.
சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்கட்சியில் திங்கள் முதல் சனி வரை தினமும் மதியம் 1.30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் இதயம். இந்த சீரியலின் கடந்த சனிக்கிழமை எபிசோடில் ஆதியும் பாரதியும் சேர்ந்து தமிழின் பேரன்ட்ஸ் மீட்டிங்கை அட்டென்ட் செய்த நிலையில் இன்று நடக்க போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க.
அதாவது தமிழ் ஆதியை பார்த்து உங்களை அப்பானு கூப்பிடவா, ஆதி அப்பான்னு கூப்பிடவா இல்ல தமிழ் அப்பான்னு கூப்பிடவா என்று கேட்க ஆதி உன் இஷ்டம் எப்படி வேணாலும் கூப்பிடு, தமிழ் அப்பா கூட நல்லா தான் இருக்கு என்று சொல்ல பாரதி அதை பார்த்து சந்தோசப்படுகிறாள்.
இதனையடுத்து வீட்டில் மரகதம் சாப்பாடு செய்து காத்திருந்து பாரதியையும் தமிழையும் கூப்பிட போக இவர்கள் ஆதியுடன் பேசி கொண்டிருக்க வெளியே வந்து விடுகிறாள், நைட் 12 மணி வரைக்கும் போனில் பேச அதை பார்த்த மரகதம் கடுப்பாகிறாள். மறுநாள் ரத்னம் மணியை கூப்பிட்டு நிச்சயதார்த்த தேதியை சொல்லி அன்னைக்கு லீவ் போட சொல்ல அவனும் சம்மதம் சொல்கிறான்.
உடனே பாரதியை அழைத்து விஷயத்தை சொல்லி உனக்கு சந்தோஷம் தானே என்று கேட்க பாரதி சந்தோஷத்தை வெளிப்படுத்துகிறாள். அதனை தொடர்ந்து சாரதாவும் வீட்டிற்கு வந்து நிச்சயத்தை எப்படி நடத்துவது என்னவென்றால் பேசி செல்கிறாள். அடுத்து மரகதம் வாசு போட்டோ முன்பு நின்று இந்த நிச்சயத்தை இப்படி எல்லாம் செய்யணுமா என்று கேட்கிறாள். இதற்கு ரத்னம் கொடுக்க போகும் பதில் என்ன? நிச்சயத்தில் நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய இதயம் சீரியலின் இன்றைய எபிசோடைப் பார்த்து தெரிந்து கொள்ளலாம்.
View this post on Instagram