Ayali: அமுதா கையில் சிக்கிய துப்பாக்கி.. அயலியின் உண்மை முகம் வெளிவருமா? அயலி சீரியலில் பரபரப்பு
அயலியின் துப்பாக்கி அமுதா கையில் கிடைத்த நிலையில், மொத்த குடும்பமும் அதிர்ச்சியில் உறைந்துள்ளது.

தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் வெள்ளி வரை இரவு 8.30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் அயலி. இந்த புதிய சீரியலில் கடந்த வெள்ளிக்கிழமை எபிசோடில் செல்லம்மா அயலி கபோர்டில் துப்பாக்கி இருப்பதை பார்க்க போன சமயத்தில், அமுதா கீழே விழுந்து சத்தம் போட்ட நிலையில் இன்று நடக்கப்போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க.
காலில் விழுந்து கெஞ்சிய அயலி:
அதாவது இளைஞர்கள் சிலர் அமுதாவிடம் பிரச்சனை செய்ய கீழே வாக்குவாதம் உருவாகிறது. தேவராஜன் அந்த இளைஞர்களின் சட்டையை பிடித்து சத்தம் போட அயலி கோபத்தில் கையை முறுக்க அதை பார்க்க இளைஞர்கள் இங்க பாருடா அந்த பொண்ணு கையெல்லாம் முறுக்குது என்று கிண்டல் அடிக்கின்றனர். இதனால், அயலி தன் அடையாளத்தை மறைக்கிறாள்.
பிறகு அவர்கள் காலில் விழுந்து அண்ணா விட்டிடுங்க என்று கெஞ்சுகிறாள்.. ஜமுனா அவனுங்க உன் அப்பாவையும் தங்கச்சியும் அவமானப் படுத்துறாங்க.. நீ கால்ல விழுந்து கெஞ்சுற அசிங்கமா இல்ல என்று திட்டுகிறாள். உள்ள போய் காய்கறி எல்லாம் எடுத்து கட் பண்ணு என்று சொல்கிறாள்.
சமாளிக்கும் அயலி:
ரொம்ப நேரமாக வெளியே வராத காரணத்தினால் ரித்விகாவை அனுப்பி என்னன்னு பார்க்க சொல்ல, அயலி அங்கு இல்லை என தெரிய வருகிறது. பிறகு அயலி வீட்டுக்கு வர எங்க போயிருந்த என்று விசாரிக்க ரெஸ்ட் ரூம் போயிருந்ததாக சமாளிக்கிறாள்.
துப்பாக்கியை பார்த்த அமுதா:
பிரச்சனை செய்துவிட்டு போன இளைஞர்கள் அடிபட்டு காயங்களுடன் வந்து மன்னிப்பு கேட்கின்றனர். அடுத்ததாக செல்லம் மீண்டும் அயலி கபோர்டில் இருந்து நகை எடுக்க போக துப்பாக்கி மறைத்து வைத்திருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைகிறாள். அதை எடுத்து வந்து எல்லோரிடமும் காட்டி நான் தான் சொன்னேன்ல இதை டீச்சர் வேலை எல்லாம் செய்யல இவன் அம்மா மாதிரி போலீஸ் ஆக போறா? என்று சொல்ல அனைவரும் அதிர்ச்சி அடைகின்றனர்.
இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய அயலி சீரியலை உங்கள் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காணத்தவறாதீர்கள்.





















