Veera Serial: நகையுடன் கிளம்பிய கண்மணி.. சந்தேகத்துடன் வீரா, நடக்கப்போவது என்ன? வீரா சீரியல் அப்டேட்!
Veera Serial Today May 31: கண்மணி “அந்த நபர் கேட்ட பணத்தை கொடுக்கணும், இல்லனா உண்மையை சொல்லிடுவான்” என்று பயந்து நகையை எடுத்து வேறொரு பையில் வைத்து மறைத்துக் கொண்டு செல்கிறாள்.
![Veera Serial: நகையுடன் கிளம்பிய கண்மணி.. சந்தேகத்துடன் வீரா, நடக்கப்போவது என்ன? வீரா சீரியல் அப்டேட்! veera serial today may 31st zee tamil written update Veera Serial: நகையுடன் கிளம்பிய கண்மணி.. சந்தேகத்துடன் வீரா, நடக்கப்போவது என்ன? வீரா சீரியல் அப்டேட்!](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/05/31/fba54641bb3fc491676bc934548dbe401717164973763574_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
Veera Serial Written Update: தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் இரவு 8 மணிக்கு ஒளிப்பரப்பாகி வரும் பிரபலமான சீரியல் வீரா. இந்த சீரியலின் நேற்றைய எபிசோடில் மர்ம நபர் கண்மணிக்கு போன் செய்து பணத்தை கேட்டு மிரட்டிய நிலையில், இன்று நடக்கப்போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம்.
அதாவது, வீரா தூக்கம் வராமல் இருக்க மொட்டை மாடிக்கு எழுந்து வருகிறாள், அங்கே மாறன் குடித்துக் கொண்டிருக்க அவனிடம் சென்று பேச்சு கொடுக்கிறாள். “என்ன நடுராத்தில உட்கார்ந்து வீட்ல குடிச்சிட்டு இருக்க?” என்று கேள்வி கேட்க, அவன் “பகல்ல குடிச்சா ஏன் பகல்ல குடிக்கறேனு கேட்கறீங்க.. நைட்டுல குடிச்சாலும் கேட்கறீங்க, அப்போ எப்போ தான் குடிக்கிறது?” என்று கேட்கிறான். மேலும் இந்த வீட்டில என்னை நல்லா புரிஞ்சிகிட்ட ஒருத்தன் இவன் தான் என்று சரக்கு பாட்டிலை எடுத்து காட்டுகிறான்.
இதனைத் தொடர்ந்து “இதுக்கு முன்னாடி என்னை புரிஞ்சிகிட்டு ஒருத்தி இருந்தா.. இப்போ இல்ல போய்ட்டா” என்று பேச, வீரா “யார் அந்த பொண்ணு, சொல்லு சேர்த்து வைக்கிறேன்” என்று சொல்ல, மாறன் “அவ என் அம்மா. ரொம்ப தைரியமான ஆளு, எதுவா இருந்தாலும் எதிர்த்து நின்னு சாதிப்பா.. உன்னை பார்க்கும் போது என் அம்மாவை பார்க்குற மாதிரியே இருக்கு” என்று சொல்கிறான்.
அடுத்து மறுநாள் காலையில் மாறன் ஹாங் ஓவரில் வெளியே நின்று கொண்டிருக்க, அங்கு வந்த வீரா மாறன் பாடிய பாடலைப் பாட, அவன் “எனக்கு புடிச்ச பாட்டு உனக்கு எப்படி தெரியும்?” என்று கேட்க வீரா “அப்போ போதையில் பேசுனதையெல்லாம் மறந்துடுவியா?” என்று கேட்க, அவனும் ஆமாம் என்று சொல்லி என்ன பேசுனேனு தெரியலையே என்று பதறுகிறான். இதையடுத்து “என்ன பேசுனேன்?” என்று கேட்க உங்க அம்மாவை பத்தி பேசுன என்று சொன்னதும் நிம்மதி அடைகிறான்.
அதன் பிறகு கண்மணி “அந்த நபர் கேட்ட பணத்தை கொடுக்கணும், இல்லனா உண்மையை சொல்லிடுவான்” என்று பயந்து நகையை எடுத்து வேறொரு பையில் வைத்து மறைத்துக் கொண்டு செல்கிறாள். வீராவும் அம்மாவும் எங்க போற என்று கேட்க, ராகவன் கடைக்கு வர சொன்னதாக பொய் சொல்லி கிளம்பி வீரா சந்தேகமடைந்து பின் தொடர்ந்து செல்கிறாள். இப்படியான நிலையில் இன்றைய வீரா சீரியல் எபிசோட் நிறைவடைகிறது.
மேலும் படிக்க: Garudan Movie Review: நட்பு, பகை, விஸ்வாசம்.. மீண்டும் ஹீரோவாக ஜெயித்தாரா சூரி.. கருடன் விமர்சனம் இதோ!
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)