மேலும் அறிய

Hit List Review: ஹிட் அடிக்குமா ஹிட் லிஸ்ட்? மகனை நல்ல ஹீரோவாக செதுக்கினாரா இயக்குநர் விக்ரமன்? முழு திரைவிமர்சனம்

Hit List Movie Review in Tamil: இயக்குனர் விக்ரமன் மகன் நாயகனாக அறிமுகமாகியுள்ள ஹிட் லிஸ்ட் படம் எப்படி உள்ளது? என்று அதன் விமர்சனத்தை கீழே காணலாம்.

Hit List Movie Review: தமிழ் திரையுலகின் தவிர்க்க முடியாத இயக்குனராக வலம் வந்தவர் இயக்குனர் விக்ரமன். இவரது மகன் விஜய் கனிஷ்கா. இவர் முதன்முறையாக கதாநாயகனாக அறிமுகமாகியுள்ள திரைப்படம் ஹிட்லிஸ்ட். இயக்குனராக பல வெற்றிகளை சூடிய இயக்குனரின் மகன் தன் முதல் படத்தில் கதாநாயகனாக வெற்றி பெற்றாரா? ஹிட் லிஸ்ட் படம் ஹிட் அடிக்குமா? என்பதை கீழே காணலாம்.

படத்தின் கதை:

கே.எஸ்.ரவிக்குமார் தயாரித்துள்ள இந்த படத்தில் சிறு உயிருக்கு கூட தீங்கு விளைவிக்கக்கூடாது என்று கருதுபவரும், வாடிய பயிரைக் கண்டபோதெல்லாம் வாடினேன் என்று சொன்ன வள்ளலாரின் கொள்கைகளை கடைபிடித்து வாழும் மென்பொறியாளர் நாயகன் விஜய். இவரது அம்மா சித்தாரா, தங்கை என அமைதியாக வாழும் ஒரு குடும்பம்.

அனைவர் மத்தியிலும் நல்ல பெயரை சம்பாதித்து மிகவும் நல்லவர் என்ற பெயருடன் வாழும் நாயகனின் அம்மாவையும், தங்கையும் திடீரென முகமூடி அணிந்த ஒரு மர்மநபர் கடத்துகிறான்? கடத்திய மர்மநபர் சிறு உயிரைக் கூட கொல்லக்கூடாது என்ற கொள்கையுடன் வாழும் நாயகன் விஜய்யை மிரட்டி இரண்டு கொலைகளைச் செய்யச் சொல்கிறான். அந்த முகமூடி அணிந்த மர்மநபர் யார்? அந்த மர்மநபர் எதற்கு சைவ உணவை மட்டுமே உண்டு, சிறு எறும்பைக் கூட கொல்லக்கூடாது என்று வாழும் கொள்கை  கொண்ட நாயகனை கொலை செய்யச் சொல்கிறான்? அந்த முகமூடி அணிந்த மர்மநபரிடம் இருந்து எப்படி நாயகன் தனது தங்கை, அம்மாவை காப்பாற்றுகிறார்? நாயகனுக்கும், முகமூடி அணிந்த மர்மநபருக்கும் இடையே நடக்கும் அந்த யுத்தத்தில் நாயகனை மீட்டு, குற்றவாளியை எப்படி கைது செய்கிறார் காவல்துறை அதிகாரி சரத்குமார்? இதற்கெல்லாம் காரணம் என்ன? என்பதற்கு விடை சொல்கிறது ஹிட் லிஸ்ட்.

படத்தின் பலம் என்ன?

படத்தின் நாயகன் விஜய் கனிஷ்கா அப்பாவித்தனமான, பயந்த சுபாவமான, அம்மா தங்கையை காப்பாற்ற போராடும் ஒரு மகனாக நடிப்பில் விக்ரமனின் மகன் என்பதை நிரூபித்துள்ளார். காவல்துறையினருக்கும், அந்த முகமூடி அணிந்த மர்மநபருக்கும் இடையில் சிக்கிக் கொண்டு தவிக்கும் தவிப்பை மிக அழகாக வௌிப்படுத்தியுள்ளார். முதல் படம், மிகப்பெரிய இயக்குனரின் மகன் என்பதால் காதல், டூயட் என கதைக்கு தேவையில்லாத விஷயங்கள் படத்தில் இடம்பெறாதது மிகப்பெரிய பலம்.

குறிப்பாக, இடைவேளைக்கு முன்பு வரும் மிகப்பெரிய ரவுடியாக உலா வரும் காளிக்கும்( கே.ஜி.எஃப். வில்லன் கருடா ராம்), நாயகனுக்கும் இடையில் நடக்கும் சண்டைக்காட்சி படத்திற்கு மிகப்பெரிய பலம். முதல் பாதியில் சரத்குமாருக்கு எந்தவொரு ஆக்‌ஷன் காட்சிகளும் பெரியளவில் இல்லாத நிலையில், இரண்டாம் பாதியில் தொடக்கத்திலே சரத்குமாருக்கு சண்டைக் காட்சிகள் மிகச்சிறப்பாக அமைக்கப்பட்டிருக்கும்.

இரண்டாம் பாதியில் சிறந்த இயக்குநர்களில் ஒருவரின் வருகை ரசிகர்களுக்கு சர்ப்ரைசாகவே இருந்தது. குறைந்த நேரம் வந்தாலும் நிறைவான நடிப்பையும், முக்கியமான கதாபாத்திரமாகவும் வருகிறார். எதற்காக இது அனைத்தும் நடக்கிறது என்று முகமூடி அணிந்த மர்மநபர் தரும் விளக்கம் யதார்தத்திற்கு நெருக்கமானதாக அமைகிறது. படத்தின் உச்சகட்ட ட்விஸ்டே முகமுடி அணிந்து வரும் மாஸ்க் மேன் யார்? என்பதுதான். சமுத்திரக்கனி குறைந்த நேரமே வந்தாலும் தன்னுடைய  படங்களில் சொல்லும் சமூக கருத்துக்களைப் போல, அதற்கேற்ற கதாபாத்திரத்தில் நடித்து அசத்தியிருப்பார்.

பலவீனம் என்ன?

படத்தின் மைனசாக இருப்பது முக்கிய கதாபாத்திரமான முகமூடி அணிந்த மர்மநபரின் உடல்மொழி ஆங்காங்கே அந்நியன் பட விக்ரமை நினைவுக்கு கொண்டு வருவது. முனீஷ்காந்த், பால சரவணனை இன்னும் பயன்படுத்தியிருக்கலாம் என்று தோன்றியது. ஆனால், அது படத்தை ஏதும் பாதிக்கவில்லை. நடிகை ஐஸ்வர்யா தத்தா தொடக்கத்தில் வரும் காட்சிகள் ஒன்றும் பெரிதாக ரசிகர்களை ஈர்க்கவில்லை. இந்த காட்சிகளும், கதாபாத்திரங்களும் படத்திற்கு பெரியளவு தேவைப்படாத காரணத்தால் படத்தின் வேகம் எந்த இடத்திலும் தடைபடவில்லை. மேலும், ஹேக்கர் என்று அழைத்து வரப்படுபவரின் கதாபாத்திரம் எதற்கு என்பது போல இருந்தது. 

ஹிட் லிஸ்ட் ஹிட் அடிக்குமா?

அறிமுக இயக்குனர்கள் சூர்யகதிர் காக்கள்ளார் மற்றும் கார்த்திகேயன் அனுபவ இயக்குனர் கே.எஸ்.ரவிக்குமாரின் இயக்குனர் என்பதை நிரூபித்துள்ளனர். சி.சத்யாவின் பின்னணி இசை படத்திற்கு பெரிய பலமாகும்.

ஒரு உயிர் துடிப்பதை கண்டு துடிக்கும் உயிரே புனிதமானது என்ற தத்துவத்தை உரக்கச் சொல்லும் ஹிட் லிஸ்ட் படம் குடும்பத்துடன் சென்று ரசித்து பார்ப்பதற்கு நிச்சயம் ஏற்ற படம். பூவே உனக்காக, புது வசந்தம், கோகுலம், சூர்யவம்சம், வானத்தைப் போல, பிரியமான தோழி என தமிழ் சினிமாவில் தரமான படங்களை இயக்கிய விக்ரமனின் மகன் கதாநாயகனாக வெற்றி பெறவும் வாழ்த்துகள்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Ilayaraja on Symphony:
"Incredible இந்தியா மாதிரி நான் Incredible இளையராஜா".! லண்டன் புறப்பட்டபோது அசத்தல் பேட்டி...
EAM Jaishankar: ”திருடப்பட்ட காஷ்மீர், இந்தியா மீதான் ட்ரம்பின் வரி திட்டம்” - வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் விளக்கம்
EAM Jaishankar: ”திருடப்பட்ட காஷ்மீர், இந்தியா மீதான் ட்ரம்பின் வரி திட்டம்” - வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் விளக்கம்
Tigers Death: மூன்று நாட்களில் இரண்டாவது புலி மரணம் - காரணம் என்ன? முதுமலை புலிகள் சரணாலயத்தில் என்ன பிரச்னை?
Tigers Death: மூன்று நாட்களில் இரண்டாவது புலி மரணம் - காரணம் என்ன? முதுமலை புலிகள் சரணாலயத்தில் என்ன பிரச்னை?
Income Tax Rule: ஆப்பு கன்ஃபார்ம், தனிநபர் உரிமைகள் கோவிந்தா..! அமலுக்கு வரும் புதிய வருமான வரி விதிகள்
Income Tax Rule: ஆப்பு கன்ஃபார்ம், தனிநபர் உரிமைகள் கோவிந்தா..! அமலுக்கு வரும் புதிய வருமான வரி விதிகள்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

TVK Vijay Slams Delimitation | ”பல லட்சம் கோடி கடன் புதிய MP-க்கள் அவசியமா?” மோடியை வெளுத்த விஜய்EPS on BJP ADMK Alliance | அதிமுகவினரை வைத்தே ஸ்கெட்ச் ஆட்டம் காட்டிய பாஜக வழிக்கு வந்த EPS | Election 2026Tamilisai vs MK Stalin | தெலுங்கில் பிறந்தநாள் வாழ்த்து!முதல்வரை சீண்டிய தமிழிசை ஸ்டாலின்பதிலடிGovt School Issue | அரசு பள்ளியில் அவலம்!’’பாத்ரூம் கழுவ சொல்றாங்க’’  மாணவிகள் பகீர் புகார்

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Ilayaraja on Symphony:
"Incredible இந்தியா மாதிரி நான் Incredible இளையராஜா".! லண்டன் புறப்பட்டபோது அசத்தல் பேட்டி...
EAM Jaishankar: ”திருடப்பட்ட காஷ்மீர், இந்தியா மீதான் ட்ரம்பின் வரி திட்டம்” - வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் விளக்கம்
EAM Jaishankar: ”திருடப்பட்ட காஷ்மீர், இந்தியா மீதான் ட்ரம்பின் வரி திட்டம்” - வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் விளக்கம்
Tigers Death: மூன்று நாட்களில் இரண்டாவது புலி மரணம் - காரணம் என்ன? முதுமலை புலிகள் சரணாலயத்தில் என்ன பிரச்னை?
Tigers Death: மூன்று நாட்களில் இரண்டாவது புலி மரணம் - காரணம் என்ன? முதுமலை புலிகள் சரணாலயத்தில் என்ன பிரச்னை?
Income Tax Rule: ஆப்பு கன்ஃபார்ம், தனிநபர் உரிமைகள் கோவிந்தா..! அமலுக்கு வரும் புதிய வருமான வரி விதிகள்
Income Tax Rule: ஆப்பு கன்ஃபார்ம், தனிநபர் உரிமைகள் கோவிந்தா..! அமலுக்கு வரும் புதிய வருமான வரி விதிகள்
Tamilnadu Roundup : செந்தில் பாலாஜிக்கு அமலாக்கத்துறை செக்? 2026ல் தமிழ்நாட்டில் புதிய கல்விக்கொள்கை - தமிழ்நாட்டில் இதுவரை
Tamilnadu Roundup : செந்தில் பாலாஜிக்கு அமலாக்கத்துறை செக்? 2026ல் தமிழ்நாட்டில் புதிய கல்விக்கொள்கை - தமிழ்நாட்டில் இதுவரை
NZ vs SA: இறுதிப்போட்டியில் நியூசிலாந்து.. கண்ணீருடன் விடைபெற்ற தென்னாப்பிரிக்கா! மில்லர் சதம் வீண்!
NZ vs SA: இறுதிப்போட்டியில் நியூசிலாந்து.. கண்ணீருடன் விடைபெற்ற தென்னாப்பிரிக்கா! மில்லர் சதம் வீண்!
தமிழகத்தின் 45 கட்சிகளுக்கு பறக்க போகும் கடிதம்! பாஜகவின் பக்கா ப்ளான்! ஸ்கெட்ச் போட்டுக்கொடுத்த அண்ணாமலை!
தமிழகத்தின் 45 கட்சிகளுக்கு பறக்க போகும் கடிதம்! பாஜகவின் பக்கா ப்ளான்! ஸ்கெட்ச் போட்டுக்கொடுத்த அண்ணாமலை!
China, Canada Complaint: ட்ரம்ப்பின் ஆட்டம் குளோஸ்.? மேலிடத்தில் புகாரளித்த சீனா, கனடா...
ட்ரம்ப்பின் ஆட்டம் குளோஸ்.? மேலிடத்தில் புகாரளித்த சீனா, கனடா...
Embed widget