மேலும் அறிய
Advertisement
Ethirneechal: குணசேகரன் கைது.. அண்ணனுக்காக போலீஸ் ஸ்டேஷன் செல்லும் கதிர்.. இன்றைய எதிர்நீச்சல் அப்டேட்!
Ethirneechal: சன் டிவியில் திங்கள் முதல் சனி வரை இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகும் எதிர்நீச்சல் தொடரின் இன்றைய (மே 31) எபிசோடுக்கான ப்ரோமோ வெளியாகியுள்ளது.
எதிர்நீச்சல் (Ethirneechal) சீரியலின் நேற்றைய (மே 30) எபிசோடில் நந்தினியின் மசாலா பொருட்களை அனைவரும் சேர்ந்து பேக்கிங் செய்து கொண்டு இருக்கிறார்கள். அப்போது அப்பத்தாவை நினைத்து ஜனனி வருத்தப்பட்டு பேசுகிறாள். அப்பத்தாவின் இறப்புக்கு யார் காரணம் என்ற வழக்கு விசாரணையை பாதியிலேயே நிறுத்திவிட்டதை நினைத்து ஜனனி வருத்தப்படுகிறாள். அனைவரும் அவளை சமாதானம் செய்கிறார்கள்.
அடுத்த நாள் ஜனனிக்கு இன்ஸ்பெக்டர் கொற்றவை போன் செய்கிறார். தர்ஷினி கடத்தல் விஷயத்திலும், அப்பத்தா விபத்துக்கும் காரணம் குணசேகரன் தான் என்ற விஷயம் ஆதாரத்துடன் நிரூபணமாகியுள்ளது என்பதை சொல்ல ஜனனி அதிர்ச்சி அடைகிறாள். நேரடியாக ஜனனியும் சக்தியையும் வர சொல்லி அப்பத்தாவை விஷம் வைத்து குணசேகரன் கொன்றதை பற்றி சொல்லவும் ஜனனியும் சக்தியும் அதிர்ச்சி அடைகிறார்கள். பல பேரின் வாழ்க்கையை நாசமாக்கிய குணசேகரன் தண்டிக்கப்பட வேண்டியவர் என சக்தியே சொல்லவும் கொன்றவை அரெஸ்ட் வாரண்ட் போலீசுடன் குணசேகரனை கைது செய்ய அவருடைய வீட்டுக்குச் செல்கிறார்கள்.
கரிகாலன் ஆட்டம், பாட்டம் என குணசேகரன் பிறந்தநாளை ஞாபகப்படுத்தி கேக் வெட்டிக் கொண்டாடுகிறான். அந்த நேரத்தில் கொன்றவை வீட்டுக்கு வந்து குணசேகரனை அரெஸ்ட் செய்வது பற்றி சொல்ல அனைவரும் அதிர்ச்சி அடைகிறார்கள். இது தான் நேற்றைய எபிசோட் கதைக்களம்.
அதன் தொடர்ச்சியாக இன்றைய (மே 31) எதிர்நீச்சல் ப்ரோமோ வெளியாகியுள்ளது.
குணசேகரனை கைது செய்ய வந்த கொன்றவை "கிள்ளிவளவன் வாக்குமூலம் கொடுத்து இருக்கிறார். அது மட்டும் இல்ல தர்ஷினி கடத்தல் விஷயத்திலேயும் குதிர என்பவனை புடிச்சாச்சு" என சொல்லி கைது செய்து அழைத்து செல்கின்றனர் போலீஸ். விசாலாட்சி அம்மா தலையில் அடித்துக் கொண்டு அழுகிறார். அவரிடம் சென்ற ஜனனி "உங்க மகன் சொந்த ரத்தத்தையே கொலை பண்ணி இருக்காரு. அதுக்கு தண்டனை கிடைக்க வேண்டாமா?" எனக் கேட்க அது எதையுமே காதில் வாங்காத விசாலாட்சி அம்மா "ஏய் நிறுத்து. அவன் கொலை செய்ததை நீ கண்ணால பாத்தியா?" எனக் கேட்கிறார். இது அனைத்தையும் கதிர் பேய் அறைந்தது போல வெறித்துப் பார்த்து கொண்டு இருக்கிறான்.
"என்னோட பிள்ளையை வெளியே கூட்டிட்டு வரதுக்கு நானே போறேன்" என விசாலாட்சி அம்மா போலீஸ் ஸ்டேஷன் கிளம்ப "யாரும் போக வேண்டாம்" என சொல்லி கதிர் கிளம்புகிறான். அதைப் பார்த்து அனைவரும் அதிர்ச்சி அடைகிறார்கள். அவனுடைய கையைப் பிடித்து நந்தினி தடுக்கிறாள். இது தான் இன்றைய எதிர்நீச்சல் (Ethirneechal) எபிசோடுக்கான ஹிண்ட்.
சமீபத்திய பொழுதுபோக்கு செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் பொழுதுபோக்கு செய்திகளைத் (Tamil Entertainment News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
தமிழ்நாடு
கல்வி
அரசியல்
கிரிக்கெட்
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion