Ethirneechal serial: சம்பந்திகளை அவமானப்படுத்தும் குணசேகரன்... குழப்பத்தை ஏற்படுத்தும் ஞானம்... இன்றைய எதிர்நீச்சல்
Ethirneechal : புதிதாக ஞானம் சொன்ன பிளான் என்ன? அதற்கு குடும்பத்தின் ரியாக்ஷன் என்ன? வீட்டுக்கு வந்த சம்பந்திகளை அவமானப்படுத்துகிறார் குணசேகரன். இன்றைய எதிர்நீச்சலில் என்ன நடக்கிறது.
சன் டிவியில் ஒளிபரப்பாகும் எதிர்நீச்சல் (Ethirneechal) தொடரின் இன்றைய (மே 1 ) எபிசோடுக்கான ப்ரோமோ வெளியாகியுள்ளது.
வீட்டில் உள்ள அனைவரும் ஏதோ விஷயம் பற்றி கூடி கூடி பேசி கொள்கிறார்கள். "நீங்க எதை பற்றியும் பேச வேண்டாம். எல்லாரும் கொஞ்சம் அமைதியா இருந்தா போதும். மனுஷனை அவன் போக்குல போக விடுங்க" என ஞானம் பயங்கரமாக சத்தம் போடுகிறான். அவர்கள் போடும் கூச்சலை உள்ளே இருந்து வேடிக்கை பார்த்து கொண்டு இருக்கிறார் குணசேகரன்.
"நேற்று கூட்டம் கூட்டமாக சேர்ந்து கொண்டு நம்மை முழுங்குற மாதிரி பார்த்தாங்க. இப்போ அவனுங்ககுள்ளேயே அடிச்சுக்குறாங்க" என நக்கலாக விசாலாட்சி அம்மாவிடம் சொல்கிறார் குணசேகரன். அருகில் தர்ஷனும் இதை கேட்டு நக்கலாக சிரிக்கிறான்.
நந்தினி மற்றும் ஈஸ்வரியின் அப்பா இருவரும் வீட்டுக்கு வருகிறார்கள். "மொய் விருந்து வச்சு காது குத்தலாம் என முடிவு செய்து இருக்கிறேன்" என நந்தினி அப்பா சொல்ல "உங்களுக்கு காசு தேவைப்படுது அதுக்கு வசூல் வேட்டை செய்ய தயாராகிட்டீங்க. அதை நேரடியா சொல்லிட்டு போக வேண்டியது தானே" என அவரை கேவலமாக குணசேகரன் நேருக்கு நேர் பேச அனைவரும் கடுப்பாகிறார்கள். இது தான் இன்றைய எதிர்நீச்சல் எபிசோடுக்கான ஹிண்ட்.
நேற்றைய (ஏப்ரல் 30) எபிசோடில் குணசேகரன் அனைவரிடமும் மன்னிப்பு கேட்கிறார். "சாதிக்க வேண்டிய உங்கள் அனைவரையும் கல்யாணம் செய்து வீட்டுக்குள் அடைத்து வைத்துவிட்டேன். என்னுடைய தாழ்வு மனப்பான்மையால் உங்கள் அனைவரையும் அடக்கி வைக்க வேண்டும் என முட்டாள்தனமாக நடந்து கொண்டேன். தம்பிகள் புத்திசாலிகளாக இருந்தால் என்னை சரிச்சுவிடுவார்கள் என முட்டாள்களாக வளர்த்தேன்" என பக்கம் பக்கமாக டயலாக் பேசி மன்னிப்பு கேட்கிறார்.
"வீட்டை விட்டு கிளம்ப அனைவரும் தயாராகிவிட்டீர்கள். நான் உங்களை தடுக்க மாட்டேன். உங்கள் விஷயத்தில் தலையிடவும் மாட்டேன். அதற்கு எனக்கு எந்த உரிமையும் கிடையாது. வெளியில போய் செய்ய போற சாதனையை இந்த வீட்டுக்குள்ள இருந்தே செய்யுங்க. நீங்க சாதிப்பதை என்னுடைய கண்ணு முன்னாடியே செய்யுங்க. அதற்கு பிறகு நான் என்னுடைய முடிவை சொல்கிறேன்" என் புதுசாக ஏதோ பிளான் போடுகிறார்.
"நீங்க திருந்தவே மாட்டீங்களா... எங்களோட வெற்றி நாங்க முன்னேறி போறது தான். உங்களை தோற்கடிப்பது கிடையாது" என ஜனனி சொல்கிறாள். "ஒரு வேளை நாளை நீங்க தோற்றுப்போனால் அது உங்க கையாலாகாததனம் என்பதை ஒத்துக் கொள்வீர்களா. என்ன செய்வீங்க என தெரியாது ஆனா சாதிச்சு காட்டிட்டு இந்த வீட்டை விட்டு கிளம்புங்க" என புதுசா ட்விஸ்ட் வைக்கிறார்.
தர்ஷினியை அவளுடைய கோச்சிடம் அழைத்து செல்கிறார் ஜீவானந்தம். "தர்ஷினி பெயரை ரொம்ப கஷ்டப்பட்டு லிஸ்டில் சேர்த்துள்ளேன். கவுன்சில் தான் முடிவு செய்ய வேண்டும். என்னால் முடிந்த உதவிகளை செய்துவிட்டேன்" என கோச் சொல்கிறார்.
ஜனனி அனைவரையும் ஊக்கப்படுத்தும் வகையில் பேசுகிறாள். நாம முடங்கி போனதற்கு குணசேகரன் மட்டும் தான் காரணம் கிடையாது. இந்த வீட்டை விட்டு வெளியில் செல்லும் போது சாதித்து காட்டி விட்டு தான் செல்ல வேண்டும் என்கிறாள் ஜனனி. அனைவரும் அதற்கு உடன்படுகிறார்கள். இது தான் நேற்றைய எதிர்நீச்சல் (Ethirneechal) எபிசோட் கதைக்களம்.