மேலும் அறிய

Ethirneechal: கரிகாலனுக்கும் கதிருக்கும் இடையே முற்றும் கைகலப்பு: பெரிதாக்க வரும் உமையாள்: எதிர்நீச்சல் அப்டேட்!  

Ethirneechal : கல்யாணம் பற்றி மீண்டும் பேசி பிரச்சினையை கரிகாலன் ஊதிவிட, ஆவேசமடையும் கதிர். குணசேகரன் எடுத்த முடிவால் ஆடிப்போன குடும்பம் - எதிர்நீச்சலில் இன்று என்ன நடக்கிறது?

சன் டிவியில் ஒளிபரப்பாகும் எதிர்நீச்சல் (Ethirneechal) தொடரில் இத்தனை நாட்களாக தர்ஷினியைக் கடத்தி வைத்திருந்த கதைக்களம் மிகவும் விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி வந்தது. தற்போது தர்ஷினி குணசேகரன் பாதுகாப்பில் இருக்க வேண்டும் என்ற நீதிபதியின் உத்தரவை கையில் வைத்துக் கொண்டு யாருமே தர்ஷினியை நெருங்க விடாமல் வைத்துக் கொண்டு இருக்கிறார் குணசேகரன்.  

அந்த வகையில் எதிர்நீச்சல் தொடரின் இன்றைய (மார்ச் 19) எபிசோடுக்கான ப்ரோமோ வெளியாகியுள்ளது.

Ethirneechal: கரிகாலனுக்கும் கதிருக்கும் இடையே முற்றும் கைகலப்பு: பெரிதாக்க வரும் உமையாள்: எதிர்நீச்சல் அப்டேட்!  

“தர்ஷினியை ஒரு இடத்தில் அடைத்து வைத்து இருக்காமல் அவள் பாதுகாப்பாக தான் இருக்கிறாள் என்பதை அவள் உணர வேண்டும் அதனால் அவளை சகஜமாக இருக்கப் பழகுங்கள்” என மருத்துவர் சொன்னதால் தர்ஷினியை கீழே அழைத்து வந்து டைனிங் ஹாலில் உட்கார வைக்கிறார்கள். தாராவும் ஐஸ்வர்யாவும் தர்ஷினியைப் பார்த்ததும் சந்தோஷத்தில் அருகில் வந்து நின்று கொள்ள, விசாலாட்சி அம்மா அவர்களிடம் "தள்ளி நில்லுங்கடி. ஏண்டி முட்டிகிட்டு நிக்குறீங்க" என சொன்னதும் கதிர் அவர்களை ஓரமாக அழைத்துச் செல்கிறான். அதை கேட்டுக் ஆவேசமடைந்த நந்தினி "பிள்ளைங்க தானே அதுங்க... ஏதோ பாசத்துல வந்து நிக்குதுங்க" என சொல்கிறாள்.  

குணசேகரன் வீட்டுக்கு ஆச்சியின் மகள் உமையாளும் பேரன் கிருஷ்ணாசாமியும் வருகிறார்கள். அவர்களை ஈஸ்வரியும் தர்ஷினியும் அதிர்ச்சியுடன் பார்க்கிறார்கள். அவர்கள் வீட்டுக்குள் போனதும் அவர்கள்  பின்னாலேயே என்ன விஷயம் எனப் பார்ப்பதற்கு சக்தி செல்கிறான். கரிகாலன் வழக்கம் போல கல்யாணம் பற்றி பேசி பிரச்சினையை ஆரம்பிக்கிறான். ஞானம் கரிகாலனை அறைய, ஆவேசமான கரிகாலன் குணசேகரனிடம் சென்று "உனக்கு யார் முக்கியம் நானா? இவனா?" என கதிரைக் காட்டி கேட்க கரிகாலன் கழுத்தைப் பிடித்து சண்டை போடுகிறான் கதிர்.

Ethirneechal: கரிகாலனுக்கும் கதிருக்கும் இடையே முற்றும் கைகலப்பு: பெரிதாக்க வரும் உமையாள்: எதிர்நீச்சல் அப்டேட்!  

"இந்த சல்லி பயல இப்பவே அடிச்சு வெளியே துரத்துங்க" என கதிர் குணசேகரனிடம் சொல்ல "முடியாதுடா அவன் இங்க தான் இருப்பான். இந்தக் கல்யாணம் நடக்கும்டா" என சொன்னதும் தர்ஷினி பயத்தில் விம்முகிறாள். அவளை விசாலாட்சி கட்டியணைத்து ஆசுவாசப்படுத்துகிறார். ஈஸ்வரி வீட்டுக்குள் நடக்கும் அனைத்தையும் பார்த்து அதிர்ச்சி அடைகிறாள். இது தான் இன்றைய எதிர்நீச்சல் எபிசோடுக்கான ஹிண்ட்.

உமையாள் குணசேகரன் வீட்டுக்குள் என்ட்ரி கொடுப்பதன் நோக்கம் என்னவாக இருக்கும்? இப்போது தான் ஆச்சி ஜனனியைப் பற்றி புரிந்து கொண்டு இருக்கிறார். கூடிய விரைவில் ஜனனியை தன்னுடைய பேத்தியாக ஏற்றுக்கொள்ளும் மனப்பக்குவத்தை கடவுள் கொடுக்க வேண்டும் என வேண்டிக் கொள்கிறார். மீண்டும் ஆச்சியின் மனசை உமையாள் மாற்றிவிடுவாரா? தர்ஷினி எப்போது சகஜ நிலைக்குத் திரும்புவாள்? குணசேகரனின் சாயம் எப்போது வெளுக்கும்? ஜீவானந்தம் நிலை என்ன ? இப்படி பல கேள்விகளுக்கும் வரும் எபிசோட்களில் விடை கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Mega Job Fair: 20 ஆயிரம் காலியிடங்கள்; சென்னையில் மாபெரும் தனியார் வேலைவாய்ப்பு முகாம்- கலந்துகொள்வது எப்படி?
Mega Job Fair: 20 ஆயிரம் காலியிடங்கள்; சென்னையில் மாபெரும் தனியார் வேலைவாய்ப்பு முகாம்- கலந்துகொள்வது எப்படி?
அரசுக்கு சொந்தமான ஹோட்டலை விலை பேசிய விக்னேஷ் சிவன்;  அதிர்ச்சி அடைந்த அமைச்சர்
அரசுக்கு சொந்தமான ஹோட்டலை விலை பேசிய விக்னேஷ் சிவன்; அதிர்ச்சி அடைந்த அமைச்சர்
Allu Arjun Arrest : அல்லு அர்ஜுனை கைது செய்த தெலங்கானா போலீஸ் - காரணம் என்ன?
Allu Arjun Arrest : அல்லு அர்ஜுனை கைது செய்த தெலங்கானா போலீஸ் - காரணம் என்ன?
ராக்கெட் வேகத்தில் சென்ற பங்குகள்;2024-ல் பங்குச்சந்தையில் ஆதிக்கம் செலுத்திய டாப்- 10 நிறுவனங்கள்!
ராக்கெட் வேகத்தில் சென்ற பங்குகள்;2024-ல் பங்குச்சந்தையில் ஆதிக்கம் செலுத்திய டாப்- 10 நிறுவனங்கள்!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Allu Arjun Arrested: கைது செய்த போலீஸ்.. மனைவிக்கு முத்தமிட்ட அல்லு அர்ஜூன்..EMOTIONAL வீடியோ!Thadi Balaji Tatoo:  “நெஞ்சில் குடியேறிய விஜய்! TATOO போட்டதுக்கு திட்டுவார்”கதறி அழுத தாடி பாலாஜிMK Azhagiri Rejoin DMK: மு.க.அழகிரி RETURNS.. 2026-ல் 200 தொகுதிகள் TARGET ஸ்டாலினின் MASTER PLANOne Nation One Election:  ”ஒரே நாடு, ஒரே தேர்தல்”அமைச்சரவை அனுமதி.. எதிர்கட்சிகள் பக்கா PLAN

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Mega Job Fair: 20 ஆயிரம் காலியிடங்கள்; சென்னையில் மாபெரும் தனியார் வேலைவாய்ப்பு முகாம்- கலந்துகொள்வது எப்படி?
Mega Job Fair: 20 ஆயிரம் காலியிடங்கள்; சென்னையில் மாபெரும் தனியார் வேலைவாய்ப்பு முகாம்- கலந்துகொள்வது எப்படி?
அரசுக்கு சொந்தமான ஹோட்டலை விலை பேசிய விக்னேஷ் சிவன்;  அதிர்ச்சி அடைந்த அமைச்சர்
அரசுக்கு சொந்தமான ஹோட்டலை விலை பேசிய விக்னேஷ் சிவன்; அதிர்ச்சி அடைந்த அமைச்சர்
Allu Arjun Arrest : அல்லு அர்ஜுனை கைது செய்த தெலங்கானா போலீஸ் - காரணம் என்ன?
Allu Arjun Arrest : அல்லு அர்ஜுனை கைது செய்த தெலங்கானா போலீஸ் - காரணம் என்ன?
ராக்கெட் வேகத்தில் சென்ற பங்குகள்;2024-ல் பங்குச்சந்தையில் ஆதிக்கம் செலுத்திய டாப்- 10 நிறுவனங்கள்!
ராக்கெட் வேகத்தில் சென்ற பங்குகள்;2024-ல் பங்குச்சந்தையில் ஆதிக்கம் செலுத்திய டாப்- 10 நிறுவனங்கள்!
" சாகுற வரை என்கூட இருப்பாரு..." நெஞ்சில் விஜய் டாட்டூ போட்ட தாடி பாலாஜி...
Gukesh Prize Money : ஆத்தாடி இத்தனை கோடியா! தமிழர் குகேஷுக்கு 5 கோடி பரிசு.. முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு
Gukesh Prize Money : ஆத்தாடி இத்தனை கோடியா! தமிழர் குகேஷுக்கு 5 கோடி பரிசு.. முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு
TNPSC Group Results: அம்மாடியோவ்.. அசுரப் பாய்ச்சலில் டிஎன்பிஎஸ்சி- குரூப் தேர்வுகளை வெளியிட இத்தனை நாட்கள்தானா?
TNPSC Group Results: அம்மாடியோவ்.. அசுரப் பாய்ச்சலில் டிஎன்பிஎஸ்சி- குரூப் தேர்வுகளை வெளியிட இத்தனை நாட்கள்தானா?
Chess Champ Gukesh: தமிழரா? தெலுங்கரா? செஸ் சாம்பியன் குகேஷ் யாருக்கு சொந்தம்? உரிமை கொண்டாடும் முதலமைச்சர்கள்
Chess Champ Gukesh: தமிழரா? தெலுங்கரா? செஸ் சாம்பியன் குகேஷ் யாருக்கு சொந்தம்? உரிமை கொண்டாடும் முதலமைச்சர்கள்
Embed widget