மேலும் அறிய
Advertisement
Ethirneechal July 26 : அய்யய்யோ..! குணசேகரனுக்கு நெஞ்சு வலி... அலறித்துடிக்கும் குடும்பம்... எதிர்நீச்சல் அப்டேட் இதோ..
*பயந்து பதறிய குணசேகரனுக்கு ஆறுதலாக கதிர் கரிகாலன்*ஆடிட்டர் வந்து கொடுத்த அதிர்ச்சியால் குணசேகரனும் நெஞ்சு வலிநேற்றைய எதிர் நீச்சல் எபிசோட் இதோ...!
சன் டிவியில் ஒளிபரப்பாகும் எதிர் நீச்சல் சீரியலில் முதல் நாள் எபிசோடில் குணசேகரனை, ஜீவானந்தம் துப்பாக்கியால் சுடுவது போல தூக்கத்தில் கனவு கண்டு மிரண்டு போய் அலறி அடித்து கொண்டு எழுந்து காட்டு கத்து கத்துகிறார். அவரின் கதறல் சத்தத்தை கேட்டு வீட்டில் இருந்த அனைவரும் அவரை சமாதானம் செய்கிறார்கள். அதன் தொடர்ச்சியாக நேற்றைய எபிசோடில் என்ன நடந்தது என்பதை பார்க்கலாம்.
அனைவரும் அங்கிருந்து கிளம்ப சொல்லிவிட்டு கதிரையும் கரிகாலனையும் இரண்டு பக்கமும் காவலுக்காக உட்கார சொல்கிறார். அந்த ஜீவானந்தம் வந்தால் உள்ளே விட வேண்டாம் என்றும் அப்படி அவன் மீறி வந்தால் அவனிடம் இருந்து துப்பாக்கியை வாங்கி விடுங்கள் என்றும் புலம்பி கொண்டே இருக்கிறார். குணசேகரனை படுக்க வைத்து மாத்திரை கொடுத்து தூங்க வைக்கிறார்கள். அடுத்த நாள் காலை குணசேகரன், கதிர் மற்றும் கரிகாலன் பேசி கொண்டு இருக்கிறார்கள்.
ஈஸ்வரியும் ரேணுகாவும் சமையல் வேலையை பார்த்து கொண்டு இருக்க நந்தினி ஏதோ பலத்த யோசனையில் இருக்கிறாள். அவளிடம் "என்னடி ஆச்சு?" என ரேணுகா கேட்க "நேத்து மூத்தவர் செய்த கூத்தை நினைத்து எனக்கு அடிவயிற்றில் இருந்து சிரிப்பு சிரிப்பாக வந்தது" என சொல்லி சொல்லி அடக்கமுடியாமல் சிரிக்கிறாள். ஈஸ்வரி "அவர் மிகவும் மோசமான ஆள் தான் என்பது எல்லாருக்கும் தெரியும். ஆனால் இது சிரிக்க வேண்டிய விஷயம் இல்ல. அந்த ஜீவானந்தத்தை எப்படி எதிர்க்கிறது பற்றி யோசி" என்கிறாள்.
அந்த நேரத்தில் ஆடிட்டர் வீட்டுக்கு வருகிறார். மாடியில் இருக்கும் குணசேகரனை சந்திக்க செல்கிறார். ஆடிட்டரை பார்த்ததும் ஏதாவது முக்கியமான விஷயமாக தான் இருக்கும் என வீட்டு மருமகள்களும் மாடிக்கு செல்கிறார்கள். ஆடிட்டரை பார்த்து குணசேகரன் உங்க முழியே சரியில்லை என்ன விஷயம் சொல்ல வந்தீங்களா அதை சீக்கிரம் சொல்லுங்க என திரும்ப திரும்ப கேட்கறார். ஆனால் ஆடிட்டர் தயங்கி தயங்கி ஆரம்பிக்கிறார். அந்த 40% ஷேர்... என இழுக்கிறார். என்ன அந்த லிஸ்ட்ல வேற என்னத்த சேர்த்துக்கொண்டான். திண்டுக்கல் பேக்ட்ரியா என கேட்கிறார் குணசேகரன். இல்ல சார் அந்த வீடு... என ஆடிட்டர் சொல்ல எது அந்த பழைய வீடா? என கேட்க இல்ல சார் இந்த வீடு... என ஆடிட்டர் சொன்னதும் அதிர்ச்சியில் நெஞ்சை பிடித்துக்கொண்டு கீழே விழுந்து விடுகிறார்.
அவரை பார்த்து அனைவரும் கதறுகிறார்கள். கதிர் முரட்டுத்தனமாக அவரை தூக்கி கொண்டு திருப்பி போடுகிறான். அனைவரும் பார்த்து மெதுவா செய் என்றாலும் கேட்காமல் அவரை கரிகாலன் உதவியோடு தோளில் சுமந்து கொண்டு மருத்துவமனைக்கு அழைத்து சொல்வதற்காக கீழே வந்து பார்த்தால் கார் எதுவும் இல்லை. ஆட்டோவும் கிடைக்காததால் சக்தி தன்னுடைய பைக்கில் கூட்டி செல்கிறேன் என எடுத்து வர அவனிடம் இருந்து சாவியை பிடுங்கி அவனே பைக்கை எடுத்து வந்து குணசேகரனை நடுவில் உட்கார வைத்து கரிகாலனை பின்னாடி வைத்து அழைத்து செல்கிறான். போகும் வழியில் குணசேகரன் தலை தொங்கிய படி மூச்சு விட சிரமப்பட்டு கொண்டு இருக்கிறார். நான் இருக்கேன் அண்ணன் நீங்க பயப்படாதீங்க உங்களுக்கு ஒன்னும் ஆகாது என கதிர் ஒரு பக்கமும் கரிகாலன் ஒரு பக்கமும் நம்பிக்கை கொடுக்கிறார்கள். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு அவசர அவசரமாக அவருக்கு முதல் உதவி செய்யப்படுகிறது. அத்துடன் நேற்றைய எபிசோட் முடிவுக்கு வருகிறது.
சமீபத்திய பொழுதுபோக்கு செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் பொழுதுபோக்கு செய்திகளைத் (Tamil Entertainment News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
தமிழ்நாடு
இந்தியா
தமிழ்நாடு
சென்னை
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion