Siragadikka Aasai August 9 : ரோகிணி கேட்ட கேள்வி.. ஆடிப்போன மனோஜ்.. சிறகடிக்க ஆசையில் இன்று..
Siragadikka Aasai Today :குழந்தை விஷயத்தில் மனோஜுக்கும் ரோகிணிக்கும் இடையே ஏற்பட்ட மோதலால் கொந்தளித்த விஜயா என்ன கேட்டார் தெரியுமா ? இன்றைய சிறகடிக்க ஆசையில்.
விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் 'சிறகடிக்க ஆசை' சீரியலின் இன்றைய (ஆகஸ்ட் 9) எபிசோடில் மீனா ரோகிணிக்காகவும் தான் ஸ்வீட் செய்தேன் என சொன்னதும் அனைவரும் ஷாக்காகிறார்கள். என்ன விஷயம் என புரியாமல் ரோகிணியிடம் என்ன என விசாரிக்க "மீனா எதை பத்தி பேசுறாங்க என எனக்கே தெரியல ஆண்ட்டி" என ரோகிணியும் குழப்பத்தில் கேட்கிறாள்.
"மீனா : நீங்க அம்மாவாக போறீங்க என எனக்கு தெரியும். குழந்தை பொறக்குற ஹாஸ்பிடலுக்கு அதுக்கு தானே செக் அப் பண்ணப்போனீங்க?" என சொன்னதும் அனைவரும் சந்தோஷத்தில் வாழ்த்துக்களை சொல்கிறார்கள்.
"விஜயா : என்ன ரோகிணி இப்படி ஒரு நல்ல விஷயத்தை நீ என்கிட்டே சொல்லி இருக்கணும் இல்ல. மீனா சொல்லி தான் எனக்கு தெரியனுமா? இந்த விஷயத்தை முழுசா சந்தோஷ படுத்த கூட முடியல" என வருத்தப்பட்டு பேசுகிறாள்.
"ரோகிணி : அப்படி எல்லாம் ஒன்னும் இல்ல ஆண்ட்டி. நான் சும்மா ஜெனரல் செக் அப்புக்காக தான் போனேன். கல்யாணம் ஆகி ஒரு வருஷம் ஆகுதே இன்னும் கன்சீவ் ஆகலேயே என செக் பண்ண போனேன். அவ்வளவு தான்.
எதுவுமே தெரியாம நீங்க எப்படி மீனா எல்லார் முன்னாடியும் இப்படி பேசுவீங்க. எல்லாத்துக்கும் ஒரு லிமிட் இருக்கு. முதல்ல இதை என்கிட்டே தானே நீங்க கேட்டு தெரிஞ்சு இருக்கணும்" என மீனாவை திட்டுகிறாள் ரோகிணி. கூட சேர்ந்து விஜயாவும் எந்த விஷயத்துல விளையாடுறதுனு ஒரு விவஸ்தையே இல்லையா என்கிறார். ரூமுக்கு சென்ற மனோஜிடம் ரோகிணி குழந்தை பற்றி தான் கனவு காண்பதாக சொல்கிறாள். உனக்கு அது போல எந்த கனவும் இல்லையா மனோஜ் என கேட்க ஆவணி எனக்கு பெரிய பிசினஸ்மேன் ஆகணும். அது தான் என்னுடைய கனவு என்கிறான்.
"ரோகிணி : நம்ம இரண்டு பெரும் சேர்ந்து ஹாஸ்பிடல் போய் செக் பண்ணிக்கலாமா?
மனோஜ் : அதெல்லாம் தேவையில்லை. நமக்கு என்ன வயசா ஆயிடுச்சு?
ரோகிணி : இல்லை கல்யாணம் நடந்து ஒரு வருஷம் ஆகுதுல. இதுவரைக்கும் எந்த குட் நியூஸ் இல்ல. அது தான்.
மனோஜ் : எனக்கு எந்த பிரச்சினையும் இல்ல. நீ வேணும்னா போய் செக் பண்ணிக்கோ " என கோபப்படுகிறான்.
அதை கேட்டு கடுப்பான ரோகிணி "அது எப்படி இவ்வளவு உறுதியா சொல்லுற. கல்யாணத்துக்கு முன்னாடி ஜீவா கூட ரிலேஷன்ஷிப்பில் இருந்தியே அப்போ அவ கன்சீவ் ஆனாளா?" என அதிரடியாக ரோகிணி கேட்க டென்ஷனான மனோஜ் "இதையே நான் உன்கிட்ட திருப்பி கேட்டா. கல்யாணத்துக்கு முன்னாடி நீ கன்சீவ் ஆனியா? கல்யாணம் பண்ணிகிட்டியான்னு கேட்டா உனக்கு கோபம் வராதா" என கேட்கிறான்.
அதிர்ச்சி அடைந்த ரோகிணி அழுது ஆர்ப்பாட்டம் செய்து "எப்படி உன்னோட பொண்டாட்டியை பார்த்து இப்படி ஒரு கேள்வி கேட்க தோணுது. என்னோட மூஞ்சியில் முழிக்காத" என்கிறாள்.
பின்னர் மனோஜ் வந்து சம்மதம் செய்கிறான். ரோகிணி அவள் கேட்டது தப்பு தான் என மன்னிப்பு கேட்கிறாள். மனோஜ் என்னை கொஞ்சம் தனியா விடு என ஹாலில் போய் உட்கார்ந்து கொள்கிறான். அப்போது விஜயா வந்து மனோஜிடம் ஏன் டல்லாக இருக்க என விசாரிக்கிறான். மனோஜ் நடந்ததை பற்றி சொன்னதும் டென்ஷனான விஜயா நேரடியாக ரோகிணியிடம் சண்டை போட போகிறாள்.
"விஜயா : நீ நல்ல பொண்ணு பக்குவமான பொண்ணு என நினச்சேன். எப்படி நீ மனோஜை பார்த்து அப்படி ஒரு கேள்வி கேட்கலாம். நான் என்ன என்னோட பிள்ளையை அப்படியா வளர்த்து வைச்சு இருக்கேன். அவன் எதையாவது உன்கிட்ட இருந்து மறச்சானா. இதையா நாங்க உன்கிட்ட கேட்டா?
நீ நான் பார்த்து கூட்டிட்டு வந்த மருமகள். மனோஜுக்கு அப்புறம் இந்த வீட்ல எனக்கு உன்னை தான் ரொம்ப பிடிக்கும். எனக்கு அப்புறம் எல்லாமே நீ தான் என நினச்சேன். மனோஜ் உன்கிட்ட நல்லா தானே நடந்துக்குறான். அந்த முத்து மாதிரி குடிச்சுட்டு வரானா? அவனை இப்படி கேட்டு இருக்க? என விஜயா ரோகிணியிடம் கடுமையாக பேச அதை கேட்டு ரோகிணி அதிர்ச்சி அடைகிறாள். இது தான் இன்றைய சிறகடிக்க ஆசை எபிசோட் கதைக்களம்.