மேலும் அறிய
Advertisement
Siragadikka Aasai : ஏத்திவிடுறதே இந்த ரோகிணிக்கு வேலையா போச்சு... விஜயாவை மிரட்டிய ஸ்ருதி... சிறகடிக்க ஆசையில் இன்று
Siragadikka Aasai Today :கீழே கொட்டிய எண்ணெயில் வழுக்கி விழுந்த விஜயா ஆர்ப்பாட்ட செய்ய அவளை எதிர்த்து பேசுகிறாள் ஸ்ருதி. மீனாவுக்கு எதிராக விஜயாவை தூண்டி விடும் ரோகிணி. இன்று சிறகடிக்க ஆசையில் என்ன நடக்கிறது?
Siragadikka Aasai serial August 30 : விஜய் டிவியில் திங்கள் முதல் சனி வரை ஒளிபரப்பாகும் 'சிறகடிக்க ஆசை' சீரியலின் இன்றைய எபிசோடில் ஸ்ருதி விஜயாவை பயமுறுத்துவதற்காக பேய் போல ஆடியோ பிளே செய்து "இது என் வீடு. வீட்டை விட்டு வெளியே போ" என மிரட்ட விஜயா பயத்தில் அலறுகிறாள். மனோஜும் அந்த சத்தம் கேட்டு பயப்படுகிறான். இருவரும் ஒரே நேரத்தில் வெளியில் வர ஸ்ருதியும் மீனாவும் போய் ஒளிந்து கொள்கிறார்கள். மனோஜும் விஜயாவும் ஒருவரை ஒருவர் பார்த்து பயந்து போகிறார்கள். அவர்கள் இருவரும் பயப்படுவதை பார்த்த மீனா போதும் ஸ்ருதி என லைட்டை போட்டு உண்மையை சொல்கிறாள். அதற்கும் மீனா தான் காரணம் என விஜயா மீனாவை திட்டி தீர்க்கிறார். இது என்னோட ஐடியா என ஸ்ருதி சொன்னாலும் அதை கேட்காமல் மீனாவை தான் திட்டுகிறாள் விஜயா.
அடுத்த நாள் காலை முத்து மிகவும் டயர்டா வீட்டுக்கு வருகிறான். அவனுக்கு எண்ணெய் காசி எடுத்து வரேன் என சொல்லி செல்கிறாள் மீனா. மறுபக்கம் ரவியுடன் சண்டை போட்ட ஸ்ருதி வேகமாக வெளியில் வர எண்ணெயுடன் வந்த மீனா மீது மோதி எண்ணெய் கீழே கொட்டிவிடுகிறது. மீனா அதை துடைப்பதற்குள் விஜயா வந்து அதில் வழுக்கி விழுந்து விடுகிறாள். மீனா வந்து விஜயாவின் கையை பிடிக்க இருவரும் கீழே விழுகிறார்கள். விஜயாவை கொல்ல பிளான் போட்டு தான் மீனா இப்படி செய்தால் என மீண்டும் அவள் மீதே பழி வருகிறது. விஜயா கையை பிடித்து தூக்கிவிடுறேன் என சொன்ன மனோஜும் வழுக்கி கீழே விழுகிறான்.
என்னால் தான் எண்ணெய் கீழே கொட்டியது என ஸ்ருதி எவ்வளவு சொல்லியும் அதை விஜயா ஏற்றுக்கொள்வதாக இல்லை. இது அனைத்துக்கும் மீனா தான் காரணம் என மீண்டும் மீண்டும் சொல்ல கோபமான ஸ்ருதி விஜயாவிடம் சத்தம் போட்டு பேசுகிறாள். மீனா தான் ஸ்ருதியை ஏத்தி விட்டு இப்படி எல்லாம் செய்கிறாள் என விஜயாவை மேலும் ஏத்தி விடுகிறாள் ரோகிணி. அதையே நினைத்து கொண்டு இருக்கும் விஜயாவுக்கு மீனா மீது இருக்கும் கோபம் மேலும் அதிகமாகிறது. இது தான் சிறகடிக்க ஆசை எபிசோட் கதைக்களம்.
சமீபத்திய பொழுதுபோக்கு செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் பொழுதுபோக்கு செய்திகளைத் (Tamil Entertainment News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
பொழுதுபோக்கு
தமிழ்நாடு
இந்தியா
இந்தியா
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion