Priyanka Nalkar: வேறு சேனலின் சீரியலில் நடிக்கும் ‘ரோஜா’ பிரியங்கா... ரசிகர்கள் அதிர்ச்சி
தங்கள் வாழ்க்கையோடு ஒப்பிட்டு கொள்ளும் அளவுக்கு அதன் கதைகள் இருப்பதால் ஆண்டுகள் பல ஆனாலும் அந்த சீரியல்கள் ஏற்படுத்திய தாக்கம் மட்டும் குறைவது இல்லை.
பிரபல சீரியல் நடிகை பிரியங்கா நல்கார் அடுத்து நடிக்கவுள்ள சீரியல் குறித்த அப்டேட் வெளியாகியுள்ள நிலையில், அவரது ரசிகர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
சின்னத்திரை சீரியல்களுக்கு ரசிகர்களை கவர்ந்திழுப்பதில் முக்கிய இடமுண்டு. தங்கள் வாழ்க்கையோடு ஒப்பிட்டு கொள்ளும் அளவுக்கு அதன் கதைகள் இருப்பதால் ஆண்டுகள் பல ஆனாலும் அந்த சீரியல்கள் ஏற்படுத்திய தாக்கம் மட்டும் குறைவது இல்லை. பக்கம் பக்கமாக பேசும் அளவுக்கு பசுமையான நினைவுகளை சீரியல்கள் உருவாக்கி வைத்துள்ள நிலையில், அது முடிவுக்கு வரும்போது ஏற்றுக்கொள்ளவே முடியாது. அப்படியான ஒரு சீரியல் தான் “ரோஜா”
ரசிகர்களை கவர்ந்த ரோஜா
சன் டிவியில் கடந்த நான்கரை ஆண்டுகளாக ஒளிபரப்பாகி வந்த ‘ரோஜா’ சீரியல் கடந்த டிசம்பர் மாதம் முடிவுக்கு வந்தது. இதில் அர்ஜூனாக சிபு சூர்யன், ரோஜாவாக பிரியங்கா நல்கார், வில்லி அனுவாக விஜே அக்ஷ்யா, காயத்ரி சாஸ்திரி , வடிவுக்கரசி ,ராஜேஷ் உள்ளிட்ட பலரும் நடித்திருந்தனர். அர்ஜூன், ரோஜா இடையிலான காதல் காட்சிகளுக்காகவே இந்த சீரியல் ரசிகர்களை பெரிதும் கவர்ந்தது.
View this post on Instagram
இந்த சீரியலின் கடைசி நாள் ஷூட்டிங் ஸ்பாட்டை பகிர்ந்த பிரியங்கா நல்கார், ஒரு வார்த்தை கூட தமிழ் தெரியாம இங்க வந்தா என்ன, நீங்க எல்லாரும் என்ன உங்க வீட்டு பொண்ணா ஏத்துகிட்டீங்க. இத்தனை வருஷத்துல நிறைய நிறைய அன்பும் பாசமும் எனக்கு நீங்க எல்லாரும் கொடுத்துருக்கீங்க. உங்களோட அன்புக்கு நான் என்ன செய்ய போறேன்னு தெரியல. இது முடிவில்லாதது! இன்னொரு புதிய ஆரம்பம்! விரைவில் உங்கள் அனைவரையும் சந்திக்கிறேன் என தெரிவித்திருந்தார்.
தெலுங்கு சின்னத்திரையைச் சேர்ந்த பிரியங்கா நல்காருக்கு தமிழில் அடுத்த பயணம் சன் டிவியில் தான் இருக்கும் என எதிர்பார்த்த ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சியாக வேறு சேனலின் சீரியலில் நடிக்க பிரியங்கா ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.
சீதா ராமன்
அதன்படி ஜீ தமிழில் விரைவில் ஒளிபரப்பாகவுள்ள “சீதா ராமன்” சீரியலில் தான் அவர் நடிக்கவுள்ளார். இந்த சீரியல் பிரைம் டைமில் ஒளிபரப்பாகவுள்ளதாக கூறப்படுகிறது. இதன் தொடக்க பூஜை புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகியுள்ளது. விரைவில் இந்த சீரியல் குறித்த அதிகாரப்பூர்வ அறீவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.