Karthigai Deepam: கர்ப்பத்தை கலைக்கச் சென்ற ரோகிணி.. குழந்தையை காப்பாற்றுவானா கார்த்திக் - கார்த்திகை தீபத்தில் இன்று
Karthigai Deepam: கார்த்திகை தீபம் சீரியலில் இன்று என்ன நடக்கப்போகிறது? என்பதை கீழே விரிவாக காணலாம்.

தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் சனி வரை இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் கார்த்திகை தீபம். இந்த சீரியலில் சனிக்கிழமை எபிசோடில் சாமுண்டீஸ்வரிக்கு விபத்து ஏற்படுத்த சிவனாண்டி திட்டமிட்ட நிலையில், இன்று நடக்கப்போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க.
கர்ப்பத்தை கலைக்கச் சென்ற ரோகிணி:
அதாவது வெளியில் சென்ற சாமுண்டீஸ்வரி சிவனாண்டியின் திட்டத்தின் படி விபத்தில் சிக்கி தலையில் கட்டுடன் வீட்டுக்கு வர அனைவரும் அதிர்ச்சி அடைகின்றனர். சந்திரகலா சாமியார் சொன்ன மாதிரியே நடந்துடுச்சு.. எல்லாத்துக்கும் காரணம் இந்த குழந்தை தான் என ரோகிணியின் கர்ப்பம் குறித்து பேசுகிறாள்.
இதனால் ரோகிணி தனது அம்மாவை காப்பாற்றுவதற்காக குழந்தையை கலைக்க முடிவு எடுக்கிறாள். யாருக்கும் தெரியாமல் ஹாஸ்பிடலுக்கு சென்று குழந்தையை கலைக்க வேண்டும் என்று சொல்ல, டாக்டர் அந்த காலத்தை எல்லாம் தாண்டி விட்டதாக சொல்ல ரோகிணி தனது முடிவில் உறுதியாக இருக்க டாக்டரும் நாளைக்கு வர சொல்லி அப்பாயிண்ட்மெண்ட் கொடுக்கிறார்.
உண்மையை கண்டுபிடித்த கார்த்திக்:
அடுத்த நாள் கார்த்திக் மற்றும் மயில்வாகனம் ஆகியோர் விபத்து நடந்து இடத்துக்குச் சென்று பார்க்க, இது சிவனாண்டியின் திட்டம் தான் என கார்த்திக் கண்டு பிடிக்கிறான். ஜோசியரை அழைத்து வந்து உண்மையை சொல்ல வைத்தால் எல்லாம் சரியாகி விடும் என முடிவெடுகின்றனர்.
இங்கே ரோகினி குழந்தையின் போட்டோவை வைத்து கண் கலங்கி ஐ லவ் யூ என எழுதி இருந்ததை, ஐ மிஸ் யூ என மாற்றி எழுதுகிறாள். மேலும் கருவை கலைக்க ஹாஸ்பிடலுக்கு கிளம்புகிறாள். இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய கார்த்திகை தீபம் சீரியலை உங்கள் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காணத்தவறாதீர்கள்.























