என் புருஷனுக்கு எப்போ வேலை கிடைக்கும் - அப்பாவை கேள்வியால் துளைத்த மீனா! பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 அப்டேட்!
பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலில் இன்றைய 518ஆவது எபிசோடில் தன்னுடைய வீட்டிற்கு வந்த மீனா தனது அப்பாவிடம் வேலை எப்போது கிடைக்கும் என்று கேள்வி கேட்டுள்ளார்.

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலில் இப்போது தான் பூகம்பம் வந்து ஓய்ந்திருக்கிறது. ரூ.10 லட்சத்தை வைத்து 2, 3 எபிசோடுகள் கடந்து விட்டது. நடக்காத கல்யாணத்திற்கு ரூ.10 லட்சம் செலவு எல்லாம் கொஞ்சம் அதிகம் தான் தான் என்றாலும்... குருவி போல் சேர்த்து வைத்த பணத்தை எல்லாம், பாண்டியன் தன்னுடைய அக்கா - மாமாவிடம் கொடுக்கும் சூழ்நிலை ஏற்பட்டது.
செந்தில், பாண்டியன் பேங்கில் போடச்சொன்ன பணத்தை... தந்தைக்கே தெரியாமல் அரசு வேலை வாங்க வேண்டும் என்கிற ஆசையில் மாமனாரிடம் கொடுத்து விட்டார். இந்த விஷயத்தில் செந்தில் சிக்குவாரா? என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் கடைசி நேரத்தில் வந்து மீனா கணவரை காப்பாற்றினார். மீனாவுக்கு இந்த படம் எப்படி கிடைத்தது என கதிர் கேட்க தன்னுடைய அப்படிவம் இருந்து வாங்கி வந்து கொடுத்ததாக கூறினார்.
ஆனால் செந்திலிடம் மட்டும், இந்த படம் லோன் போட்டு வாங்கியதாகவும். வட்டி தான் கொஞ்சம் அதிகம் என கூற... செந்தில் அந்த வட்டியை தானே வருவதாக கூறினார். என்பதை ஏற்கனவே பார்த்தோம். இந்த நிலையில் இன்றைய 518ஆவது எபிசோடில், மீனா தனது அப்பாவை பார்க்க வீட்டிற்கு வந்துள்ளார். அப்போது அவர் தனது அம்மாவை சந்தித்து பேசிவிட்டு, கடைசியாக அப்பாவிடம் பேசினார்.
அப்போது, எப்போ என் கணவருக்கு வேலை கிடைக்கும் என கேட்கிறார். அதற்கு உன்னுடைய கணவர் விஷயமாகத்தான் நான் ஒருவரை சந்தித்துவிட்டு வந்திருக்கிறேன். இன்னும் ஒரிரு நாட்கள் வெயிட் பண்ண சொல்லி இருக்கிறார். எனவே கொஞ்சம் வெயிட் பண்ணுவோம் என கூறுகிறார்.
பல பேர் ஒரு வருடத்திற்கு முன்பே பணத்தை கொடுத்துவிட்டு வேலைக்காக காத்துக் கொண்டிருக்கிறார்கள். எந்த வேலையாக இருந்தாலும் உடனே கிடைத்துவிடாது. கொஞ்சம் பொறுமையாக இருக்க வேண்டும் என்று அறிவுரை வழங்கினார். கடைசியாக, இல்லையென்றால் அந்த பணத்தை நான் கொடுத்துவிடுகிறேன் என்று சொல்லிவிட்டு செல்கிறார். இதை கேட்டு மீனாவும் கொஞ்சம் நிம்மதியடைகிறார். மீனாவின் தந்தை சொன்னது போல் செந்திலுக்கு அரசு வேலை வாங்கி தருவாரா? இல்லையா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.





















