Meenakshi Ponnunga: சக்தியை திருமணம் செய்ய சங்கிலி போடும் திட்டம்..மீனாட்சி பொண்ணுங்க சீரியலின் இன்றைய அப்டேட்
சங்கிலியும் புஷ்பாவும் திட்டம் போட்டு வெற்றியை உள்ளே வைக்க முடிவு செய்கிறார்கள். அப்போது தான் சங்கிலி சக்தி கல்யாணம் நிம்மதியாக நடத்த முடியும் என்று கணக்கு நினைக்கிறார்கள்.
மீனாட்சி பொண்ணுங்க சீரியலில் சங்கிலியும் புஷ்பாவும் வெற்றியை ஜெயிலில் தள்ள திட்டம் போடும் காட்சிகள் இன்றைய எபிசோடில் இடம் பெறுகிறது.
தமிழ் தொலைக்காட்சியில் முன்னணியில் உள்ள ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் மீனாட்சி பொண்ணுங்க. இந்த சீரியலில் மீனாட்சியாக அர்ச்சனா நடிக்கிறார். இவருக்கு யமுனா, சக்தி, துர்கா ஆகிய மூன்று மகள்கள். தங்களை விட்டுச் சென்ற கணவருக்கு எதிராக மீனாட்சியும், தந்தைக்கு எதிராக அவரது மகள்களும் வாழ்ந்து காட்டுவதே இந்த சீரியலின் கதைச் சுருக்கமாகும்.
View this post on Instagram
நேற்றைய எபிசோடில் சங்கிலியை திருமணம் செய்ய சக்தி சம்மதிக்கிறாள். இதனை வெற்றி தன்னுடைய நண்பனிடம் சொல்லி ஃபீல் பண்ணுகிறான். மேலும் சக்தி திருமணம் செய்ய சம்மதம் சொன்னாள் என்று மீனாட்சியிடம் சாந்தா விஷயத்தை சொல்கிறாள். இதைக்கேட்டதும் சக்தியிடம் கோபமடையும் மீனாட்சி வீட்டை விட்டு வெளியேறும் காட்சிகள் இடம் பெற்றது. இனி இன்றைய எபிசோடில் என்ன நடந்தது என பார்க்கலாம்.
சங்கிலியும் புஷ்பாவும் திட்டம் போட்டு வெற்றியை உள்ளே வைக்க முடிவு செய்கிறார்கள். அப்போது தான் சங்கிலி சக்தி கல்யாணம் நிம்மதியாக நடத்த முடியும் என்று கணக்கு நினைக்கிறார்கள். அடுத்ததாக ரங்கநாயகி வீட்டில் நல்ல காரியம் நடந்து கொண்டிருக்கும் போது அங்கே வரும் போலீஸ் வெற்றியைத் தேடுகிறது. உடனே அவர்களை தடுக்க தள்ளுமுள்ளு நடக்கும் நிலையில் ரங்கநாயகி போலீசை அடித்துவிடுகிறார். இதனால் ரங்கநாயகியைக் கைது செய்து போலீஸ் அழைத்து செல்கிறது.
View this post on Instagram
இந்த பக்கம் கார்த்திக்கை பார்த்து பேச போக யமுனா முயற்சிக்கிறார். இதை அவரது அம்மா அப்பாவை பார்த்து யமுனாவுக்கு அவர்கள் அறிவுரை சொல்லி அனுப்புகிறார்கள். இதற்கிடையில் ரங்கநாயகி கைதான நிலையில் சரண்யா கர்ப்பமாக இருப்பது அவளுக்கு தெரிந்து அவள் அசோக்கிடம் சொல்ல முடிவெடுக்கும் காட்சிகள் இன்றைய எபிசோடில் இடம் பெறுகிறது.