Maari: மாரி சொன்னபடி நேரில் வந்த தேவி.. கடைசியில் தாராவுக்கு காத்திருந்த அதிர்ச்சி..! இன்றைய மாரி எபிஸோட்..
தமிழ் தொலைக்காட்சியில் முன்னணியில் உள்ள ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் இரவு 8 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் மாரி.
மாரி சீரியலில், மாரி செய்த பூஜையால் தேவி அம்மா வருகை தந்து அனைவரின் முன்பும் தோன்றுவாரா என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடத்தில் எழுந்துள்ளது.
தமிழ் தொலைக்காட்சியில் முன்னணியில் உள்ள ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் இரவு 8 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் மாரி. இன்றைய எபிசோடில் மாரி பூஜை செய்து முடிக்க காற்று வேகமாக அடிக்கிறது.அப்போது தேவி அம்மா தோன்றி படிக்கட்டில் இறங்கி வருவதை அனைவரும் கண்ணாடியில் பார்க்கின்றனர். தேவி கண்ணாடியில் அருகே வர வர சங்கரபாண்டி துப்பாக்கியால் கண்ணாடியில் சுட அது நொறுங்கி விழுகிறது
இதனால் கண்ணாடியில் தேவி தெரியாமல் போகிறார். உடனே தாரா நீ செய்த பூஜையால் தேவியம்மா வர விருப்பம் இல்லாமல் கண்ணாடியை உடைத்து விட்டார் என்று மாரி மீது பழி போடுகிறார். மேலும் நீ சொன்ன விஷயத்தில் தோற்று விட்டாய் உடனே வீட்டை விட்டு வெளியேறு என்று மாரியை வெளியே அனுப்பும் நேரத்தில், தான் தேவி அம்மாவை பார்த்ததாக சூர்யா நான் சொல்ல அனைவருக்கும் அதிர்ச்சியடைகின்றனர்.
View this post on Instagram
தாரா பொய் சொல்லாதே என்று சொல்ல, இல்ல தேவி அம்மா வந்தாங்க நான் பார்த்தேன் என்று சூர்யா உறுதியாய் கூறுகிறார். இதனை தாரா நம்ப மறுக்கிறாள். இறுதியில் தாரா தேவி அம்மா வந்ததாகவே வச்சிக்கிடுவோம். என்ன பொறுத்தவரைக்கும் தேவி அம்மா இங்கே எல்லார் கண்ணுக்கும் வரல. ஒன்னு மாரி இந்த வீட்டை விட்டு வெளியே போகணும். இல்லனா நீ ஜாஸ்மினை திருமணம் பண்ணிக்கணும் என்ன உன் முடிவு? என கேள்வியெழுப்புகிறார். இதனையடுத்து சூர்யா கல்யாணத்துக்கு சம்மதம் சொல்ல, தாரா எனக்கு இது போதும். மாரி இனி இந்த வீட்டில் இரு என்று சொல்லிவிட்டு போகிறார்.
இதனைத் தொடர்ந்து தாரா ரூமில் ஜாஸ்மின் சங்கர பாண்டியிடம் நீங்க மட்டும் கண்ணாடியில் சுடாம இருந்தா கண்டிப்பா மாரி வீட்டை விட்டு வெளியே போயிருப்பா என கோபப்படுகிறார். தேவி வந்ததை அரவிந்த் உறுதியாக சொல்லி தன் செல்போனில் ரெக்கார்ட் செய்த காட்டுகிறார்.
உடனே தாரா நல்ல வேலை சங்கரபாண்டிய துப்பாக்கியால் சுட சொன்னது நல்லதா போச்சு என்று சொல்கிறாள். இந்த பக்கம் சூர்யா பீல் செய்தபடி இருக்க, மாரி வந்து தேவி அம்மா வந்தாங்க உங்க கண்ணுக்கு தெரிஞ்சதா என்று கேட்க ஆமா என்று அவர் கூறுகிறார். ஆனால் தேவி அம்மா படம் முன்பு என்னை மன்னிச்சிருங்கமா, நான் உங்களைப் பார்க்கல. ஆனால் மாரியை காப்பாத்தறதுக்கு எனக்கு வழி தெரியல என மனமுருகும் காட்சிகள் இடம் பெறுகிறது.