Maari: மாரி குற்றவாளி இல்லை என நிரூபிக்க நினைக்கும் விக்ரம்... இன்றைய மாரி எபிசோடின் ஹைலைட் இதோ..!
டம்மி பணம் என தெரியாமல் பணத்தை எடுத்துக் கொண்டு மாரியும் பிரியாவும் அந்த ரவுடியை பார்க்க போகின்றனர்.
மாரி சீரியலில் பிரியா வேகமாக சென்று மாரியை அசிங்கப்படுத்தும் நோக்கில் சூர்யாவிடம் நடந்த விஷயத்தை கூறும் காட்சிகள் இன்றைய எபிசோடில் இடம் பெறுகிறது.
தமிழ் தொலைக்காட்சியில் முன்னணியில் உள்ள ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் இரவு 8 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் மாரி. இன்றைய எபிசோடில் டம்மி பணம் என தெரியாமல் பணத்தை எடுத்துக் கொண்டு மாரியும் பிரியாவும் அந்த ரவுடியை பார்க்க போகின்றனர்.
View this post on Instagram
இவர்களுடன் ஸ்ரீஜாவும் செல்கிறார். அந்த ரவுடியிடம் பணத்தை கொடுத்து வீடியோ கேட்கிறார்கள். பணத்தை பிரித்துப் பார்க்க அது டம்மி பணமாக இருப்பதை பார்த்து ரவுடி கோவப்பட்டு பிரியாவை கழுத்தை நெறித்து சாகடிக்க பார்க்கிறார். அப்போது மாரி அவனை அடிக்க ரவுடி இறந்து போகிறார். இதை தெரிந்து கொண்ட ஸ்ரீஜா போலீசுக்கு போன் செய்து விஷயத்தை சொல்ல போலீஸ் அங்கு வருவதை கண்டு மாரி அதிர்ச்சி அடைகிறாள்.
போலீஸ் வந்து மாரியை கைது செய்து அழைத்துச் செல்ல ஸ்ரீஜா வீட்டிக்கு சென்று அனைவரிடமும் மாரி குடும்ப மானத்தை வாங்கி விட்டாள் என சொல்கிறார். இதுதான் சமயம் என போலீஸ் கைது செய்து விட்டது என்று மாரியை அசிங்கப்படுத்த பிரியா வேகமாக சென்று சூர்யாவிடம் நடந்த விஷயத்தை கூறுகிறாள்.
View this post on Instagram
உடனே ஹாசினி தன் அண்ணன் விக்ரமிடம் நடந்த விஷயத்தை கூற விக்ரம் இறந்த ரவுடியின் பெற்றோரை தொடர்பு கொண்டு விசாரிக்கிறார். அவன் இறக்கவில்லை ஹாஸ்பிடலில் உயிருடன் இருக்கிறான் என்ற விஷயத்தை தெரிந்து கொள்கிறார். பின்னர் விக்ரம் போலீஸ் ஸ்டேஷனுக்கு ரவுடியின் அப்பா அம்மாவை அழைத்து வருகிறார். சூர்யாவும் அங்கு வர இருவரும் அங்கு விஷயத்தை சொல்லி மாரி நல்லவள் என தெரிவித்து வெளியே கொண்டு வரும் காட்சிகள் இன்றைய எபிசோடு நிறைவடைகிறது.