Karthigai Deepam: டாக்டருக்கு மாயா செய்த சதி! சாமுண்டீஸ்வரிக்கு நர்ஸ் தந்த ஷாக் - கார்த்திகை தீபத்தில் இன்று
கார்த்திகை தீபம் சீரியலில் டாக்டருக்கு எதிராக மாயா சதி செய்ய என்ன நடக்கப்போகிறது? என்பதை கீழே விரிவாக காணலாம்.
தமிழ் சின்னத்திரையில் பிரபலமான தொலைக்காட்சி ஜீ தமிழ். இந்த தொலைக்காட்சியில் திங்கள் முதல் சனி வரை தினமும் இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் கார்த்திகை தீபம்.
இந்த சீரியலின் நேற்றைய எபிசோடில் சாமுண்டீஸ்வரி வீட்டு பந்தக்கால் நடும் நிகழ்ச்சிக்கு டாக்டர் வருவதாக ஷாக் கொடுத்த நிலையில், இன்று நடக்க போவது என்ன? என்பது குறித்து பார்க்கலாம் வாங்க.
டாக்டரைத் தடுக்க வரும் மாயா:
அதாவது, மாயா டாக்டர் வருவதை தடுத்து நிறுத்துவதற்காக கிளம்பி வருகிறாள். இங்கே டாக்டர் கிளம்பி கொண்டிருக்க மாயா டாக்டர் காரில் குளோரோபார்மை வைத்து விடுகிறாள். இதனால் டாக்டர் வரும் போது மயங்கி விடுவார் அதன்மூலமாக தடுத்து நிறுத்தி விடலாம் என திட்டம் போடுகிறாள்.
மாயாவை அழைக்கும் சாமுண்டீஸ்வரி:
அடுத்து மாயா சாமுண்டீஸ்வரிக்கு வீட்டிற்கு வந்து விட இங்கே டாக்டருக்கு காத்திருந்து பிறகு, சரி பந்தக்கால் நட்டுவிடலாம் என முடிவு செய்கிறாள். மாயா ஒதுங்கி நிற்க சாமுண்டேஸ்வரி நீ விதவை என்பதால் ஒதுங்கி எல்லாம் நிற்க வேண்டாம் என்று சொல்கிறாள்.
மேலும் எனக்கு அந்த மாதிரி மூட நம்பிக்கைகளில் உடன்பாடில்லை என சொல்லி, மாயாவை பந்தக்கால் நட அழைக்கிறாள். நிகழ்ச்சியும் நல்லபடியாக நடந்து முடிய மறுபக்கம் மாயாவின் திட்டத்தின் படி டாக்டர் வந்த கார் விபத்தில் சிக்குகிறது.
நர்ஸ் சொன்ன தகவலால் அதிர்ச்சியில் சாமுண்டீஸ்வரி:
சாமுண்டீஸ்வரி டாக்டருக்கு போன் செய்ய போன் எடுக்காத நிலையில் அடுத்து நர்ஸ் போனை எடுத்து அவங்களுக்கு ஆக்சிடென்ட் ஆகி விட்டது என்ற விஷயத்தை சொல்ல சாமுண்டீஸ்வரி ஷாக் ஆகிறாள்.
இப்படியான நிலையில் அடுத்து நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய கார்த்திகை தீபம் சீரியலை உங்கள் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காண தவறாதீர்கள்.