Karthigai Deepam Aug 26: பல்ப் வாங்கிய ஐஸ்வர்யா.. கார்த்திக் கொடுத்த பேரதிர்ச்சி - கார்த்திகை தீபம் இன்றைய எபிசோட் அப்டேட்
Karthigai Deepam August 26: கார்த்திகை தீபம் சீரியலின் இன்றைய எபிசோடில் என்ன நடந்தது?
ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் சனி வரை தினமும் இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் கார்த்திகை தீபம். இந்த சீரியலின் நேற்றைய எபிசோடில் கார்த்திக் தர்மலிங்கத்திடம் அவரது பணத்தை திருப்பி கொடுத்த நிலையில் இன்று நடக்க போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க.
அதாவது, நல்லவங்க கஷ்டப்பட்ட பணம் எதுவும் ஆகாது என்று சொல்ல ஐஸ்வர்யா இதை கேட்டு அதிர்ச்சி அடைகிறாள், உடனே அவள் ரூமுக்கு சென்று தர்மலிங்கத்திடம் இருந்து கொள்ளையடித்த பேக்கை எடுத்து திறந்து பார்க்க அதற்குள் மொத்தமும் சல்லி கற்களாக இருக்க அதிர்ச்சி அடைகிறாள்.
இந்த நேரம் மாஸாக என்ட்ரி கொடுக்கும் கார்த்திக் என்ன அண்ணி எல்லாம் கல்லா இருக்கா? அதை அப்படியே தூக்கி உங்க தலையில் கொட்டிக்கங்க.. அப்பயாவது உங்களுக்கு புத்தி வருதான்னு பார்க்கலாம் என்று சொல்கிறார். திரும்ப திரும்ப இப்படியே பண்ணிட்டு இருந்தீங்க உங்க நிலைமை ரொம்ப மோசமாகிடும் என்று எச்சரித்து விட்டு செல்ல ஐஸ்வர்யா இது எப்படி நடந்தது என்று யோசிக்கிறாள்.
இதனை தொடர்ந்து தீபா சிவா எப்படி உண்மையை சொன்னாரு என்று யோசித்து கொண்டிருக்க கார்த்திக் அதற்கான காரணத்தை உங்ககிட்ட நான் இப்போ சொல்ல மாட்டேன், நேரம் வரும் போது சொல்றேன் என்று சொல்கிறான். பிறகு தீபாவிடம் தர்மலிங்கம் நாளைக்கு தாலி பிரித்து போடும் பங்க்ஷன், நாளையில் இருந்து உனக்கு இந்த வீட்டில ஒரு அங்கீகாரம் கிடைக்கும், எனக்கு சந்தோசமாக இருக்கு என்று பேசுகிறார்.
மறுபக்கம் ஐஸ்வர்யா அபிராமிக்கு பால் எடுத்து சென்று கொடுத்து சீர் செய்ய தர்மலிங்கம் குடும்பம் ஒத்த ரூபாய் கூட செலவு செய்யல, மொத்தமும் கார்த்திக் தான் செலவு செய்திருக்கான் என்று சொல்ல அபிராமி உச்சகட்ட கோபம் அடைகிறாள்.
மறுநாள் தீபா பங்க்ஷனுக்கு தயாராக அதை பார்த்த ஐஸ்வர்யா நிச்சயம் இதை நான் நடக்க விட மாட்டேன் என்று வன்மமாக திட்டம் போடுகிறாள். இப்படியான நிலையில் இன்றைய கார்த்திகை தீபம் எபிசோட் நிறைவடைகிறது.