Karthigai Deepam Episode : அடுத்தடுத்து சிக்கும் நட்சத்திரா.. கார்த்திக் எடுக்கும் முடிவு என்ன? கார்த்திகை தீபம் இன்றைய எபிசோட் அப்டேட்
கார்த்திகை தீபம் சீரியலின் இன்றைய எபிசோடில் நட்சத்திராவுக்கு அதிர்ச்சி காத்திருக்கிறது.
ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் பிரபலமான 'கார்த்திகை தீபம்' சீரியலின் இன்றைய எபிசோடில் என்ன நடக்கிறது.
இந்த சீரியலின் நேற்றைய எபிசோடில் போலீஸ் மூர்த்தி, மகேஷ் மற்றும் அம்மாவாக நடித்த மூவரையும் கைது செய்த நிலையில் எல்லோரும் உண்மைகளை ஒப்புக்கொள்ள கார்த்திக் எங்க போனாலும் நீங்க இந்த உண்மையை வந்து சொல்லணும் என சொல்லி கிளம்புகிறான்.
மேலும் கார்த்திக்கு இது அனைத்தும் நட்சத்திராவின் வேலை எனவும் தெரிய வருகிறது. அடுத்து நட்சத்திராவை கைது செய்துவிடலாம் என்று போலீஸ் சொல்ல அதற்கான தகுந்த ஆதாரங்கள் கிடைக்க வேண்டும் என கூறுகிறார் கார்த்திக். இதை கண்காணித்த உளவாளி நட்சத்திராவிற்கு தகவல் கொடுக்கிறான்.
அதன் பிறகு கார்த்திக் டாக்டரை சென்று சந்தித்து பேச இருவரும் ஒன்றாக பேசிக் கொள்வதை பார்க்கும் வார்டு பாய் நட்சத்திராவிற்கு தகவல் கொடுக்கிறான். இதனால் நட்சத்திரா உச்சகட்ட அதிர்ச்சி அடைகிறாள்.
அடுத்து கண் விழிக்கும் கதிர் கார்த்தியுடன் நட்சத்திரா நல்லவ கிடையாது அவ உங்க சொத்த அடைவதற்காக உங்களை கல்யாணம் பண்ணிக்க வந்து இருக்கா என்ற உண்மைகளை போட்டு உடைக்கிறார். மேலும் இந்த விஷயத்தை நான் எங்கு வேண்டுமானாலும் வந்து சொல்வேன் என்றும் உறுதி அளிக்கிறான்.
இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய கார்த்திகை தீபம் சீரியலை உங்கள் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காணத்தவறாதீர்கள்.