Ethirneechal Promo: கரிகாலனுக்கு உண்மை தெரிந்ததா? சாமியார் கொடுத்த ஷாக்... எதிர்நீச்சலில் பரபரப்பு!
Ethirneechal Sep 23 Promo: ஜீவானந்தம் பொண்ணு வெண்பாவை முதன்முறையாக சந்திக்கும் அப்பத்தா.. கதிருக்கும் ஞானத்துக்கும் ஷாக் கொடுத்த சாமியார்.. பரபரப்பான கட்டத்தில் எதிர்நீச்சல்!
சன் டிவியில் ஒளிபரப்பாகும் எதிர்நீச்சல் (Ethirneechal) தொடரின் நேற்றைய எபிசோடில் ரேணுகாவும் நந்தினியும் அவர்களின் மாமியார் இந்த ஜான்சி ராணியை விரட்டி விடாமல் வீட்டுக்குள் சேர்த்து வைத்துக் கொண்டது பற்றி பேசிக்கொண்டு இருக்கிறார்கள்.
அவளை சட்டை செய்யாமல் அப்பத்தா சொன்னது போல அடுத்தடுத்த கட்டத்துக்கு நகர்ந்து கொண்டே போக வேண்டும் என பேசிக்கொண்டு இருக்கிறார்கள். அதை அனைத்தையும் ஒட்டுக்கேட்டு கொண்டு இருந்த ஜான்சி ராணியும் கரிகாலனும் அதை விசாலாட்சி அம்மாவிடம் போட்டுக் கொடுக்கிறார்கள். ஜான்சி ராணி பேச்சைக் கேட்ட விசாலாட்சி அம்மா மருமகள்களை இத்தோடு அவர்கள் செய்யும் அனைத்தையும் நிறுத்த சொல்லி சொல்கிறார்.
குணசேரனை தேடிக் கண்டுபிடித்து தர சொல்லி ஜீவானந்தத்தின் உதவியைக் கேட்ட ஈஸ்வரி, வெண்பாவை தனது வீட்டுக்கு அழைத்து வருகிறாள். விசாலாட்சி அம்மாவிடம் பொய் சொல்லி சமாளித்து வெண்பாவை வீட்டில் சில நாட்கள் வைத்துக் கொள்ள சம்மதம் வாங்கிவிடுகிறாள் ஈஸ்வரி. இருந்தாலும் அவளை சந்தேகக் கண்ணுடன் பார்க்கிறார்கள் ஜான்சியும் கரிகாலனும்.
கெளதம், ஜீவானந்தம் மனைவியை கொன்றவனை பழி வழங்குவதற்காக சென்றுள்ள விஷயத்தை தோழரிடம் சொல்கிறார்கள். இதில் தலையிட வேண்டாம் என சொல்லியும் கெளதம் இப்படி செய்ததால் அவனை திட்டுகிறார் ஜீவானந்தம். அவனிடம் இருந்து ஏதாவது தகவல் வந்தால் உடனடியாக தன்னிடம் தெரிவிக்கும்படி சொல்கிறார்.
வெண்பாவுடன் அனைவரும் கிச்சனில் உட்கார்ந்து பேசிக்கொண்டு இருப்பதை கரிகாலன் ஜன்னல் வழியாக நின்று ஒட்டுக்கேட்கிறான். அத்துடன் நேற்றைய எதிர்நீச்சல் எபிசோட் முடிவுக்கு வந்தது.
அதன் தொடர்ச்சியாக இன்றைய எதிர்நீச்சல் எபிசோடுக்கான ப்ரோமோ வெளியாகியுள்ளது.
வீட்டுக்கு வந்த அப்பத்தா "ஈஸ்வரி யாரு மா இந்த குழந்தை?" என கேட்கிறார். அதற்கு நந்தினி "பிரெண்டோட பொண்ணு. அந்த பிரெண்டு நமக்கு எல்லாருக்கும் மியூச்சுவல் பிரெண்டு" என்கிறாள் "அப்படியா?" என அப்பத்தா கேட்க "அப்படித்தான் " என்கிறாள் நந்தினி. அப்பத்தா வெண்பாவை அழைத்து கொஞ்சுகிறார். இது அனைத்தையும் ஜன்னல் வழியாக நின்று ஒட்டுக்கேட்கிறான் கரிகாலன்.
கதிரும் ஞானமும் குணசேகரனை தேடுவதற்காக சென்றுள்ளனர். ஒரு இடத்தில் இறங்கி விசாரிக்கையில் அங்கே இருந்த சாமியார் ஒருவர் "தம்பிகளா என் கூட வாங்க" என்கிறார். அதைப் பொருட்படுத்தாத ஞானம், கதிரை காரில் ஏற சொல்கிறான். உடனே அந்த சாமியார் "கதிரு நில்லு" என்கிறார். அதிர்ச்சியடைந்த இருவரும் "யாரு பா நீ" என கேட்கிறான். "குணசேகரனை பார்க்கணுமா வேண்டாமா?" என சொன்னதும் இருவரும் ஷாக்காகிறார்கள். இது தான் இன்றைய எதிர்நீச்சல் எபிசோடுக்கான ஹிண்ட்.
யார் இந்த சாமியார்? அவருக்கு எப்படி குணசேகரன் பற்றி தெரிய வந்தது? ஒட்டுக் கேட்ட கரிகாலனுக்கு வெண்பா ஜீவானந்தத்தின் மகள் என்பது தெரிந்து விட்டதா? மிகவும் பரபரப்பாக நகரும் எதிர்நீச்சல் (Ethirneechal) கதைக்களத்தில் இன்று என்ன நடக்கப்போகிறது?