Ethirneechal August 7 : எப்படி ஒரு ஃப்ராடுத்தனம்.. ரேணுகாவின் சம்பவம்... கரிகாலனுக்கு வந்த டவுட்டு என்ன? எதிர்நீச்சல் ப்ரோமோ
Ethir neechal August 7 promo:* குணசேகரன் நடவடிக்கையில் சந்தேகம் தெரிந்ததால் நக்கல் அடிக்கும் ரேணுகா* கரிகாலனுக்கு ஏற்பட்ட சந்தேகம்
சன் டிவியில் ஒளிபரப்பாகும் எதிர் நீச்சல் (Ethir neechal) சீரியலின் முந்தைய எபிசோடில் குணசேகரனும் கதிரும் சென்னையில் முன்னாள் என்கவுண்டர் ஸ்பெஷலிஸ்ட் வளவனை வைத்து ஜீவானந்தம் கதையை முடிக்க பக்காவாக பிளான் செய்து விட்டார்கள்.
ஈஸ்வரி ஜீவானந்தத்திடம் போன் மூலம் பேசுகிறாள். நீங்கள் குணசேகரன் மனைவி என்பதற்காக நான் பேசவில்லை, ஈஸ்வரி என்ற அந்த பெயர் எனக்கு மிகவும் பரிச்சயமான பெயராக இருந்தது அதனால்தான் நான் பேசினேன். இனிமேல் நீங்கள் என்னை தொடர்புகொள்ள முயற்சிக்க வேண்டாம் என கூறி ஈஸ்வரிக்கு ஷாக் கொடுக்கிறார்.
ஆதிரை அருணை சந்தித்து புரிய வைக்க முயற்சிக்கிறாள். ஆனால் அருண் ஆதிரை என்ற பெண் இனி என்னுடைய வாழ்க்கையில் இல்லை எனச் சொல்லி அனுப்பி விடுகிறான். கரிகாலன் எவ்வளவு கெஞ்சியும் அவனை ஏற்றுக்கொள்ள முடியாது என பிடிவாதமாக இருக்கிறாள் ஆதிரை. விசாலாட்சி அம்மா இனி உன் வாழ்க்கை கரிகாலனுடன்தான். நீ முடியாது என அடம்பிடித்தால் உன்னை நானே கொன்னு புதைச்சுருவேன் என சொல்லிவிட்டார்.
அதன் தொடர்ச்சியாக இன்றைய எதிர் நீச்சல் (Ethir neechal) எபிசோடுக்கான ப்ரோமோ தற்போது வெளியாகியுள்ளது.
நக்கல் செய்த ரேணுகா :
குணசேகரன் மற்றும் கதிர் வீடு திரும்பி விட்டார்கள். அனைவரும் டைனிங் ஹாலில் இருக்கும்போது ரேணுகா ஏதோ நக்கலாக சொல்ல ஞானம் "பேச்சு எல்லாம் ரொம்ப ஓவரா இருக்கு" என்கிறான். அதற்கு குணசேகரன் "ஏம்பா... அது ரொம்ப நாளா அப்படித்தானே பா போய்கிட்டு இருக்கு" என மேலும் ஏத்திவிடுகிறார்.
அப்படியும் அடங்காத ரேணுகா "பக்கவாதம் வந்த இப்படி யாரையும் நான் இது வரைக்கும் பார்த்ததேயில்லை. இது பக்காவான பக்கவாதமால்ல இருக்கு" என நக்கல் செய்ய நந்தினி சிரிக்கிறாள். அவள் அப்படி சொன்னதை கேட்டு அங்கிருந்த அனைவருக்கும் அதிர்ச்சியாக இருக்கிறது.
குணசேகரன் ஆக்டிங் :
ஜீவானந்தம் பற்றி தகவல்களை சேகரிக்க சக்தியும் ஜனனியும் அலைந்து திரிந்து வீடு திரும்புகிறார்கள். ஞானமும், குணசேகரனும் வீட்டுக்கு வெளிய வெட்டவெளியில் உட்கார்ந்து பேசிக்கொண்டு இருக்கிறார்கள். அப்போது குணசேகரன் "எப்படி கணீர் கணீர் என பேசுவேன் நான். இப்போ பேச்சே குளறி குளறி தான் வருகிறது" என்கிறார். ஞானம் அவரை எதற்கும் கவலைப்பட வேண்டாம் என நான் போய் தண்ணீர் எடுத்து வருகிறேன் என செல்கிறான். ஞானம் சென்றபின் குணசேகரன் கைகளை தூக்கி நெட்டை உடைத்து கொள்கிறார்.
பிறகு கதிரும் வந்து அவர்களுடன் சேர்ந்துகொண்டதும் கரிகாலன் ஏதோ கேட்பதற்காக குணசேகரனிடம் வருகிறான். "மாமா எனக்கு ஒரு டவுட்டு " என்கிறான். அதை கேட்டதும் குணசேகரனும் கதிரும் அதிர்ச்சி ஏற்படுகிறது. இதுதான் இன்றைய எதிர் நீச்சல் எபிசோடுக்கான ஹிண்ட்.
அப்படி கரிகாலனுக்கு என்ன சந்தேகம் இருக்கும்? ஜனனிக்கு, ஜீவானந்தம் பற்றி ஏதாவது ஒரு துப்பு கிடைத்திருக்குமா? அடுத்து என்ன நடக்கப் போகிறது என்பதற்கான எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் மேலோங்கியுள்ளது.