மேலும் அறிய

Ethir Neechal June 19th: எரிமலையாக வெடிக்கும் குணசேகரன்... கார்னர் செய்யப்பட்ட விசாலாட்சி... பரபரப்பான கட்டத்தில் நேற்றைய எதிர்நீச்சல் எபிசோட்  

Ethir Neechal June 19th: ஆதிரையும் ஜனனி டீமும் எஸ்கேப் ஆனதை யூகித்த குணசேகரன் கேள்விகளால் ஈஸ்வரியையும், விசலாட்சி அம்மாவையும் துளைக்கிறார். நேற்று எதிரீச்சல் சீரியலில் என்ன நடந்தது? 

சன் டிவியில் ஒளிபரப்பாகும் 'எதிர் நீச்சல்' சீரியல் மிகவும் பரபரப்பான கட்டத்தில் உள்ளது. அடுத்து என்ன நடக்கப்போகிறது என சஸ்பென்ஸுடன் தன தினசரி எபிசோட் முடிவுக்கு வருகிறது. அந்த வகையில் நேற்றைய எதிர்நீச்சல் எபிசோடில் என்ன நடந்தது என்பதை பற்றி பார்க்கலாம்.

Ethir Neechal June 19th:  எரிமலையாக வெடிக்கும் குணசேகரன்... கார்னர் செய்யப்பட்ட விசாலாட்சி... பரபரப்பான கட்டத்தில் நேற்றைய எதிர்நீச்சல் எபிசோட்  

கோயிலுக்கு போனவர்கள் யாரும் திரும்பவில்லை என்பதால் கடுங்கோபத்தில் மண்டபத்தில் வானத்துக்கும் பூமிக்கும் குதித்து கொண்டு இருக்கிறார் குணசேகரன். கதிருக்கு போன் போட சொல்லி ஞானத்திடம் சொல்கிறார். போனை எடுத்த கதிர் அவர்கள் அங்கே இன்னும் வரவில்லையா என கேட்க அப்போ நீ எங்கடா போன. உன்ன நம்பி தானே அனுப்பி வைத்தோம் என கதிரிடம் கோபமாக கத்தி விட்டு ஜனனி டீமுக்கு போன் போட சொல்லி ஈஸ்வரியிடம் சொல்கிறார்கள். ஈஸ்வரி ஜனனி நம்பருக்கு போன் செய்கிறாள். போன் ரிங் போகிறது அப்போது திருதிருவென முழித்த ஈஸ்வரியை பார்த்து குணசேகரன் என்ன எடுத்தாங்களா இல்லையா என கேட்கிறார். அந்த நேரம் பார்த்து ஜனனி ஞானம் மாமா நம்பரில் இருந்து போன் வருகிறது அங்க என நடக்கிறது என தெரிந்து கொள்ளலாம் என அட்டென்ட் பண்ணவும் ஈஸ்வரி உடனே போன் கட்டாகி விட்டது என சொல்கிறாள். ஆனால் ஈஸ்வரி சொல்வதை குணசேகரன் நம்பவில்லை. கட்டின புருஷனையே ஏமாத்துறியா என கேட்கிறார். 

ஈஸ்வரியிடம் இருந்து விசாலாட்சி பக்கம் கோபம் திரும்புகிறது. சொல்லு மா உன்னோட மருமகள்கள் எங்க போய் இருகாங்க என உனக்கு தெரியும். நீ தானே மெயின் சுவிட்ச். நடிக்காத மா. உன்னால என்கிட்ட நடிக்க முடியாது. நான் கண்டுபிடித்துவிடுவேன் என மிரட்டுகிறார். 

மறுபக்கம் கரிகாலன் ரோடு ரோடாக  சுற்றி திரிகிறான். ஒரு ஜூஸ் கடையில் இருக்கும் தண்ணீரை எடுத்து குதித்து விட்டு போன் சார்ஜ் போட கொடுக்கிறான். மோர் வாங்கி குடித்துவிட்டு புலம்பி கொண்டு இருக்கிறான். அப்போது கதிர் கரிகாலனுக்கு போன் போட கரிகாரன் கதிரிடம் ஏறு ஏறு என ஏறுகிறான். உங்க வீட்ல இருக்க பொம்பளைங்க மாதிரி நான் எங்கேயும் பார்த்து இல்லை. என்னோட அம்மாவோட மோசமானவளுங்க. என்ன கண் மூடிக்கிட்டு 108 தடவ சாமிய கூப்பிடு என சொல்லி விட்டு எஸ்கேப் ஆயிட்டாங்க. எப்படியோ கண்டுபிடிச்சும் இரண்டாவது தடவ பாத்ரூம் போறோம் என சொல்லிவிட்டு  என்னோட கண்ணு முன்னாடியே ஓடி போய் கார்ல ஏறி தப்பிச்சுட்டாங்க என சொல்லி தான் இருக்கும் இடத்தின்  லொகேஷனையும் அனுப்புகிறான். 

Ethir Neechal June 19th:  எரிமலையாக வெடிக்கும் குணசேகரன்... கார்னர் செய்யப்பட்ட விசாலாட்சி... பரபரப்பான கட்டத்தில் நேற்றைய எதிர்நீச்சல் எபிசோட்  
கொடைக்கானல் ஜங்ஷன் வந்த அருண் மட்டும் கெளதம் இன்னும் கொஞ்ச நேரத்தில் பெருமாள் மலை ஜங்ஷன் வந்து விடும். அங்கு செக் போஸ்ட் இருக்கும். லோக்கல் போலீஸ் இருந்தா ஒன்னும் பிரச்சனை இல்லை. வேற யாராவது இருந்தா பார்த்துக் கொள்ளலாம். அதை தாண்டியதும் வத்தலகுண்டு போற ரோடு வந்துவிடும். அதை கிராஸ் பண்ணிவிட்டால் பிரச்சனை எதுவும் இல்லை. கொடைக்கானலை விட்டு  இறங்கியதும் ஜனனிக்கு இன்பார்ம் பண்ணலாம் என பேசிக்கொள்கிறார்கள். 

கரிகாலன் சொன்ன ஜங்ஷன் வந்த கதிரிடம் மீண்டும் கோபமாக கத்துகிறான் கரிகாலன். அவங்க என்னை மட்டும் ஏமாற்றவில்லை, உன்னையும் ஏமாற்றி இருக்கிறார்கள் என்றால் அவர்கள் பிளான் போட்டு தான் இதை எல்லாம் செய்து இருக்கிறார்கள். அந்த அருண் பையனும் இங்க தான் எங்கேயோ இருக்கிறான். ஆதிரைக்கும்  அவனுக்கும் கல்யாணம் பண்ணியிருப்பாங்க. நம்ம இரண்டு பெரும் மண்டபத்துக்கு போய் குணசேகரன் மாமா கிட்ட சொல்லலாம். அவரோட டெக்னிக் தான் சரிப்படும் என கரிகாலன் சொல்கிறான். வலுக்கட்டாயமாக திட்டி கரிகாலனை காரில் அழைத்து செல்கிறான் கதிர். 

காரில் போய் கொண்டு இருக்கும் ஆதிரை, ஜானகியிடம் இன்னும் ஒரு முறை ஈஸ்வரி அண்ணிக்கு போன் செய்து பார்க்குமாறு கேட்கிறாள். ஆனால் ஜனனி வேண்டாம் அவங்கள இப்போ கார்னர் பண்ணி வைச்சு இருப்பாங்க அதனால் தான் அவங்கோலாட போனில் இருந்து கால் பண்ணாமல் ஞானம் மாமா நம்பரில் இருந்து போன் பண்ணி இருந்தாங்க. ஈஸ்வரி அக்கா கேட்டு இருந்தாங்க என்றால் அப்போ நிச்சயமாக அத்தையையும் கேட்டு இருப்பாங்க. அதனால தான் அவங்க கிட்ட கோயில் என்று மட்டும் சொன்னேன் எந்த கோயில் என சொல்லல. நந்தினி உடனே ஆதிரையிடம் நீ கல்யாணம் முடிஞ்சு இன்னும் இரண்டு மணிநேரத்தில் செட்டிலாகி விடுவாய் எங்களோட நிலைமை தான் பயமா இருக்கு. எல்லாம் நல்ல படியா இருக்கும் என ஜனனி சொல்கிறாள். 

அங்கு மண்டபத்தில் குணசேகரன் முகத்தில் கோபம் கொந்தளிக்கிறது. எல்லாரும் அவரிடம் பொண்ணு எப்ப வரும் என கேட்கிறார்கள். உடனே ஜான்சி ராணி அவரும் ஏமாந்து போய் தான் இங்க நிற்கிறார். இந்த அம்மா இங்க உட்கார்ந்து இருக்கு பாருங்க டிராமா போட்டு அவங்கள இது தான் அனுப்பி வைச்சுது. இது கிட்ட கேளுங்க என சொல்கிறாள் ஜான்சி ராணி. குணசேகரன் உண்மையா சொல்லு மா உனக்கும் ஈஸ்வரிக்கும் மட்டும் தான் என்ன நடந்தது என்பது தெரியும். உண்மையை சொல்லு மா என்கிறார். அத்துடன் நேற்றைய எபிசோட் முடிவடைந்தது. 

நாளை விசலாட்சி அம்மா எல்லா உண்மையை சொல்கிறாரா? கல்யாணம் முடிந்து விடுகிறதா? கரிகாலனும் கதிரும் ஆதிரை, ஜனனி டீமை கண்டுபிடித்து விடுகிறார்களா? இதற்கு விடை வரும் எபிசோட்களில் தெரியவரும். 

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Tiruvannamalai Deepam:  ‘அண்ணாமலையாருக்கு அரோகரா’ திருவண்ணாமலையில் ஏற்றப்பட்டது மகாதீபம்.. பரவசத்தில் பக்தர்கள்
‘அண்ணாமலையாருக்கு அரோகரா’ திருவண்ணாமலையில் ஏற்றப்பட்டது மகாதீபம்.. பரவசத்தில் பக்தர்கள்
Tiruvannamalai Deepam 2024 LIVE: திருவண்ணாமலையில் ஏற்றப்பட்டது மகாதீபம்... ஜோதியாய் காட்சியளிக்கும் அண்ணாமலையார்..!
திருவண்ணாமலையில் ஏற்றப்பட்டது மகாதீபம்... ஜோதியாய் காட்சியளிக்கும் அண்ணாமலையார்..!
Mega Job Fair: 20 ஆயிரம் காலியிடங்கள்; சென்னையில் மாபெரும் தனியார் வேலைவாய்ப்பு முகாம்- கலந்துகொள்வது எப்படி?
Mega Job Fair: 20 ஆயிரம் காலியிடங்கள்; சென்னையில் மாபெரும் தனியார் வேலைவாய்ப்பு முகாம்- கலந்துகொள்வது எப்படி?
அரசுக்கு சொந்தமான ஹோட்டலை விலை பேசிய விக்னேஷ் சிவன்;  அதிர்ச்சி அடைந்த அமைச்சர்
அரசுக்கு சொந்தமான ஹோட்டலை விலை பேசிய விக்னேஷ் சிவன்; அதிர்ச்சி அடைந்த அமைச்சர்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Jagdeep Dhankhar: PARLIAMENT - ல் முதல்முறை... மிரளவைத்த கார்கே! சிக்கலில் ஜக்தீப் தன்கர்!Allu Arjun Arrested: கைது செய்த போலீஸ்.. மனைவிக்கு முத்தமிட்ட அல்லு அர்ஜூன்..EMOTIONAL வீடியோ!Thadi Balaji Tatoo:  “நெஞ்சில் குடியேறிய விஜய்! TATOO போட்டதுக்கு திட்டுவார்”கதறி அழுத தாடி பாலாஜிMK Azhagiri Rejoin DMK: மு.க.அழகிரி RETURNS.. 2026-ல் 200 தொகுதிகள் TARGET ஸ்டாலினின் MASTER PLAN

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Tiruvannamalai Deepam:  ‘அண்ணாமலையாருக்கு அரோகரா’ திருவண்ணாமலையில் ஏற்றப்பட்டது மகாதீபம்.. பரவசத்தில் பக்தர்கள்
‘அண்ணாமலையாருக்கு அரோகரா’ திருவண்ணாமலையில் ஏற்றப்பட்டது மகாதீபம்.. பரவசத்தில் பக்தர்கள்
Tiruvannamalai Deepam 2024 LIVE: திருவண்ணாமலையில் ஏற்றப்பட்டது மகாதீபம்... ஜோதியாய் காட்சியளிக்கும் அண்ணாமலையார்..!
திருவண்ணாமலையில் ஏற்றப்பட்டது மகாதீபம்... ஜோதியாய் காட்சியளிக்கும் அண்ணாமலையார்..!
Mega Job Fair: 20 ஆயிரம் காலியிடங்கள்; சென்னையில் மாபெரும் தனியார் வேலைவாய்ப்பு முகாம்- கலந்துகொள்வது எப்படி?
Mega Job Fair: 20 ஆயிரம் காலியிடங்கள்; சென்னையில் மாபெரும் தனியார் வேலைவாய்ப்பு முகாம்- கலந்துகொள்வது எப்படி?
அரசுக்கு சொந்தமான ஹோட்டலை விலை பேசிய விக்னேஷ் சிவன்;  அதிர்ச்சி அடைந்த அமைச்சர்
அரசுக்கு சொந்தமான ஹோட்டலை விலை பேசிய விக்னேஷ் சிவன்; அதிர்ச்சி அடைந்த அமைச்சர்
Allu Arjun Arrest : அல்லு அர்ஜுனை கைது செய்த தெலங்கானா போலீஸ் - காரணம் என்ன?
Allu Arjun Arrest : அல்லு அர்ஜுனை கைது செய்த தெலங்கானா போலீஸ் - காரணம் என்ன?
ராக்கெட் வேகத்தில் சென்ற பங்குகள்;2024-ல் பங்குச்சந்தையில் ஆதிக்கம் செலுத்திய டாப்- 10 நிறுவனங்கள்!
ராக்கெட் வேகத்தில் சென்ற பங்குகள்;2024-ல் பங்குச்சந்தையில் ஆதிக்கம் செலுத்திய டாப்- 10 நிறுவனங்கள்!
" சாகுற வரை என்கூட இருப்பாரு..." நெஞ்சில் விஜய் டாட்டூ போட்ட தாடி பாலாஜி...
Gukesh Prize Money : ஆத்தாடி இத்தனை கோடியா! தமிழர் குகேஷுக்கு 5 கோடி பரிசு.. முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு
Gukesh Prize Money : ஆத்தாடி இத்தனை கோடியா! தமிழர் குகேஷுக்கு 5 கோடி பரிசு.. முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு
Embed widget