Ethirneechal : ஜீவாவை கல்யாணம் பண்ணியிருப்பேன்.. பொட்டில் அடித்த ஈஸ்வரி.. ஆடிப்போன ஆதி குணசேகரன்
ஈஸ்வரியை சபையில் வைத்து அசிங்கப்படுத்திய குணசேகரனுக்கு தகுந்த பதிலடி கொடுத்த ஈஸ்வரி. நேற்று எதிர் நீச்சலில் நடந்த காரசாரமான வாக்குவாதம்!
சன் டிவியில் ஒளிபரப்பாகும் எதிர் நீச்சல் (Ethir neechal) தொடரின் நேற்றைய எபிசோடில் ரேணுகா ஈஸ்வரியின் அப்பா வந்து ஜீவானந்தம் அவரின் வீட்டுக்கு வந்தது பற்றியும், பெண் கேட்டதைப் பற்றியும் யதார்த்தமாகப் பேச, குணசேகரன் அதை பிடிச்சுக்கிட்டு இடிச்ச புளிபோல வாசலில் போய் உட்கார்ந்து இருக்கிறார் என்பதைப் பற்றி போன் மூலம் ஈஸ்வரியிடம் சொல்கிறாள். ஈஸ்வரி, “நான் எல்லாத்துக்கும் தயாராக தான் இருக்கிறேன், நான் பார்த்துக் கொள்கிறேன்” என தைரியமாக சொல்கிறாள்.
ஈஸ்வரியும் ஜனனியும் வீட்டுக்கு வருகிறார்கள். குணசேகரன் அவளை முறைத்தபடி உட்கார்ந்து கொண்டு இருக்கிறார். அனைவரும் குணசேகரன் செய்யும் ட்ராமாவை பார்க்க வருகிறார்கள். "என்ன உன்னோட கள்ளக்காதலனை பார்த்துட்டு வரியா?" என்கிறார். ஈஸ்வரி மிகவும் தைரியமாக "இன்னொரு வார்த்தை அநாகரீகமாக பேசினா அவ்வளவுதான்" என்கிறாள்.
"அந்த தாடி காரனுக்கும் உனக்கும் என்ன சம்பந்தம். உன்னை பொண்ணு கேட்டானாமே" என்கிறார். "ஆமா வந்தாரு பொண்ணு கேட்டாரு. அவரோட இணைச்சுகிட்டாதான் சம்பந்தம் இருக்கு என அர்த்தம். அவர் பேரு கூட எனக்கு தெரியாது" என்கிறாள் ஈஸ்வரி.
"நான் எதுக்கு உன்கிட்ட சொல்லணும். நீங்க சந்தித்த பொண்ணுங்களை பத்தி எல்லாம் என்கிட்டே சொன்னீங்களா? சாருபாலாவை உங்களுக்கு புடிச்சு இருக்குனு தேடி தேடி போய் பொண்ணு கேட்டீங்க. அவங்க எஸ்.கே.ஆர கல்யாணம் பண்ணிகிட்டாங்க. நான் தான் தப்பு பண்ணிட்டேன். ரொம்ப பெரிய தப்பு பண்ணிட்டேன். உங்கள கல்யாணம் பண்ணிக்க முடியாதுன்னு சொல்லி இருக்கணும் " என்கிறாள்.
"அப்படி சொல்லாத.. அவன் வந்து பொண்ணு கேட்ட உடனே அவனோட ஓடி போய் இருக்கணும். அப்போ உன்னோட வாழ்க்கை அமோகமா இருந்து இருக்கும். அப்படி சொல்லு. எனக்கு எதுக்கு கட்டி கொடுத்தான். சொத்துக்கு பேராசை பட்டுத்தானே கல்யாணம் பண்ணி கொடுத்தான்" என வாய் கூசாமல் பேசுகிறார் குணசேகரன்.
"எங்க அப்பா கிட்ட எப்படி வந்து பொண்ணு கேட்டாரு. எங்க அப்பா காலில் விழுந்து தானே என்னை பொண்ணு கேட்டாரு" என விசாலாட்சியிடம் நியாயம் கேட்கிறாள் ஈஸ்வரி. "என்ன அந்த ஜீவானந்தம் பய சொல்லி அனுப்புனானா? அவன் அடிச்சு தொரத்திவிட்டா நான் உனக்கு வாழ்க்கை கொடுக்குறேன்னு சொன்னானா?" என அசிங்கமாக பேசுகிறார். கதிரும் "ஆமாமா சொல்லி இருப்பான். ஏற்கெனவே பொண்டாட்டி செத்து போயிட்டா. அங்க அத்துவிட்டு வான்னு சொல்லி இருப்பான்" என சொல்கிறான் கதிர்.
அநாகரீகம் பேசிய கதிரை "ஏய் வாய மூடு. இது எங்களோட விஷயம். இதில் நீ தலையிட உனக்கு எந்த ரைட்ஸூம் கிடையாது" என மூக்கை உடைகிறாள் ஈஸ்வரி. "அன்னைக்கு உங்க அப்பா வீட்டுக்கு ஜீவானந்தம் வந்து பேசினதை ஏன் சொல்லலை" என்கிறார். "நான் ஏன் சொல்லணும். என்னோட தனிப்பட்ட விஷயத்தை சொல்லணும்னு எந்த அவசியமும் இல்லை" என்கிறாள் ஈஸ்வரி. அவளுக்கு சப்போர்ட்டாக ஜனனி பேசுகிறாள்.
குணசேகரன் "இங்க நடக்குற கூத்த எல்லாம் பார்த்துகிட்டு தானே இருக்கீங்க. படிச்சவன்னு அவ பேச்சை கேட்டுகிட்டு ஆடுனீங்க. இப்போ அவ நடத்தை கெட்டவன்னு தெரிஞ்சுடுச்சா" என தர்ஷன் தர்ஷினியிடம் சொல்கிறார். அதைக் கேட்டு ஈஸ்வரி அவர் கையை பிடித்து தள்ளிவிட்டு "என்ன மனுஷன்யா நீ... குழந்தைங்க கிட்ட என்ன பேசற" என எதிர்த்து நிற்கிறார்கள். "எதுக்கு போய் அந்த ஜீவானந்தத்தை பார்த்த சொல்லுடி" என்கிறார்.
தர்ஷனை போய் நியாயம் கேட்க சொல்கிறார். "உங்க அப்பா சரி சொல்லி இருந்தா?" எனக் கேட்க "சரின்னு சொல்லி இருந்த கல்யாணம் பண்ணி இருப்பேன். முன்ன பின்ன தெரியாத உங்களை பண்ணிக்க சொன்னாரு பண்ணிக்கிட்டேன். அவர் சொல்லி இருந்த நான் ஜீவானந்தத்தை கல்யாணம் பண்ணி இருப்பேன். இது தானே உண்மை. இதை சொல்ல நான் ஏன் கூச்சப்படணும்?" என்கிறாள்.
"உனக்கு நாளைக்கு ஒரு முடிவு கட்றேன். அது வரைக்கும் சுதந்திரமா இரு" என சொல்லிவிட்டு செல்கிறார். அனைவரும் ஈஸ்வரியை சமாதானம் செய்கிறார்கள். ஈஸ்வரியிடம் "நீங்க பேசினது தான் சரி" எனக்கு ஆதரவு தெரிவிக்கிறார்கள். "பிள்ளைகள் சாப்பிட வரவில்லை. இந்த பாலை கொண்டு போய் கொடுப்பதுபோல ஒரு இரண்டு வார்த்தை பேசுங்கள்" என சொல்லி அனுப்பி விடுகிறார்கள். அங்கே தர்ஷனும் தர்ஷினியும் கோபத்தில் உட்கார்ந்து கொண்டு இருக்கிறார்கள். அத்துடன் நேற்றைய எதிர் நீச்சல் (Ethir neechal) எபிசோட் முடிவுக்கு வந்தது.