Ethir neechal September 13 promo: 'ஆதி குணசேகரனாக' மாரிமுத்துவின் கடைசி எபிசோட் இன்று...! இனி அந்த கம்பீரத்தை எங்கே பார்ப்பது..?
Ethir neechal September 13 Promo: இன்று எதிர் நீச்சலில் ஆதி குணசேகரனாக மறைந்த நடிகர் மாரிமுத்துவின் கடைசி எபிசோட் என்பதால் ரசிகர்கள் மிகுந்த சோகத்தில் உள்ளனர்.
சன் டிவியில் ஒளிபரப்பாகும் எதிர் நீச்சல் (Ethir neechal) தொடரின் நேற்றைய எபிசோடில் நந்தினி சமைத்து எடுத்து கொண்டு போன உணவுகளை வயிறார ரசித்து சாப்பிட்டு நந்தினியை பாராட்டுகிறார்கள் ஹோமில் உள்ள முதியவர்கள். அதை கேட்டு நந்தினியின் மனது குளிர்ந்து விடுகிறது.
குணசேகரனுக்கு சந்தேகம்:
அனைவரும் கேசரி, வடை, சாம்பார் என அனைத்தும் மிகவும் அருமையாக இருக்கிறது என சொல்லி பாராட்டுகிறார்கள். இந்த கம்யூனிட்யை நடத்தி வருபவர் நந்தினிக்கு அட்வான்ஸ் பணத்தை கொடுக்கவும் சந்தோஷத்தின் உச்சத்தில் இருக்கிறாள் நந்தினி. இவை அனைத்தும் ஜனனியால் சாத்தியமானது என அவளுக்கு நன்றி கூறுகிறாள்.
மறுபக்கம் ரேணுகாவை தேடி ஐஸ்வர்யாவின் ஸ்கூல் டீச்சர் இரண்டு பிள்ளைகளை கூட்டிக் கொண்டு வருகிறார். அவரை பார்த்ததும் கரிகாலன் நோண்டி நோண்டி கேள்வி கேட்கிறான். எதையோ சொல்லி சமாளித்து அவர்களை மேலே அழைத்து செல்கிறாள் ரேணுகா. குணசேகரனின் சந்தேகம் இரட்டிப்பாகிறது.
டவுட்:
"இவளுங்க எல்லாம் எதையுமே சாதாரணமா செய்வது இல்லை. பெருசா ஏதோ வெடி வைக்கப்போறாங்க" என சொல்ல கரிகாலன் "இந்த வீட்ல உங்களுக்கு எதிரே நிறைய சதி வேலை நடக்குது. அது மட்டும் நல்லா தெரியுது" என ஏத்திவிடுகிறான். "இருக்க குழப்பம் பத்தாதுன்னு நீ வேற குழப்பி விடுறீயா?" என கரிகாலனை விசாலாட்சி அம்மா திட்டுகிறார். அவனும் "எனக்கு உங்க மேல தான் டவுட்" என்கிறான்.
நந்தினி தன்னுடைய அம்மாவை பார்த்து நலம் விசாரித்துவிட்டு கொஞ்ச பணம் கொடுத்திட்டு வரலாம் என சொல்ல ஜனனியும் சக்தியும் நந்தினியை அவளுடைய அம்மா வீட்டுக்கு அழைத்து செல்கிறார்கள். அத்துடன் நேற்றைய எதிர் நீச்சல் எபிசோட் முடிவுக்கு வந்தது.
அதன் தொடர்ச்சியாக இன்றைய எதிர் நீச்சல் எபிசோடுக்கான ப்ரோமோ வெளியாகியுள்ளது.
உடல் நலம் சரியில்லாமல் இருக்கும் அம்மாவை பார்க்க நந்தினி அவளுடைய அம்மா வீட்டுக்கு செல்கிறாள். நந்தினியை பார்த்ததும் அவளின் அம்மா மிகவும் சந்தோஷப்படுகிறார்.
கரிகாலன் மேலே ரூமுக்கு சென்று ரேணுகாவை பார்க்க வந்தவர்கள் என்ன செய்கிறார்கள் என்பதை தெரிந்து கொள்வதற்காக ரூமுக்கு வெளியே நிற்கிறான். அவனை பார்த்த ரேணுகா "வேவு பார்க்க சொல்லி உன்னை அனுப்பிவிட்டங்களா? என்கிட்டே இந்த மாதிரி வேலையெல்லாம் வைச்சுகிட்டன்னு வச்சுக்கவே மொகரையில மூக்கு வாய் கண்ணு காது எதுவுமே இருக்காது பார்த்துக்கோ மரியாதையா ஓடிப்போயிடு" என மிரட்டி கரிகாலனை விரட்டி விடுகிறாள்.
கீழே வந்த கரிகாலனிடம் "கரிகால எனக்கும் சந்தேகமா தான் டா இருக்கு, இவங்க முன்னாடி எல்லாம் புள்ளையை விட்டுக் கொடுக்கிறது உனக்கு வேலையா போச்சு இல்ல" என விசாலாட்சி அம்மாவிடம் கேட்கிறார் கரிகாலன். இதுதான் இன்றைய எதிர் நீச்சல் (Ethir neechal) எபிசோடுக்கான ஹிண்ட்.
கடைசி எபிசோட்:
இன்றைய எபிசோட் தான் மறைந்த நடிகர் மாரிமுத்து குணசேகரனாக கடைசியாக நடித்த எபிசோட். இந்த கடைசி எபிசோடில் கேட்ட அவரின் காந்த குரல் தான் இறுதியானது. அந்த கதாபாத்திரத்தில் அவருக்கு பதிலாக வேறு யார் வந்தாலும் அவரின் வெற்றிடத்தை நிரப்பவே முடியாது. இது தான் நடிகர் மாரிமுத்துவின் இறுதி எபிசோட் இனி அவர் எதிர் நீச்சலில் இல்லை என்பது இந்த சீரியலின் தீவிரமான ரசிகர்களுக்கு மிகுந்த மனவேதனையை கொடுத்துள்ளது.