Ethir Neechal June 29th Update : தப்பு பண்ணிட்டீங்களே குணசேகரன்... வீட்டை விட்டு வெளியேறும் சக்தி ஜனனி... இன்றைய எதிர் நீச்சல் ஹிண்ட்
வீட்டை விட்டு வெளியேறும் சக்தி - ஜனனி, குணசேகரனுக்கு ஷாக் கொடுத்த ஆடிட்டர், இன்றைய எதிர் நீச்சல் எபிசோட் அப்டேட் வெளியாகியுள்ளது
சன் டிவியில் இரவு 9.30 மணிக்கு ஒளிபரப்பாகும் எதிர் நீச்சல் தொடர் மிகவும் விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி வருகிறது. ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு சஸ்பென்ஸ். அந்த வகையில் நேற்றைய எபிசோடில் கடும் கோபத்தில், ஜனினிக்காகவும் சக்திக்காகவும் காத்திருந்த குணசேகரன் அவர்களை என்ன செய்யப்போகிறார் என்பதை தெரிந்து கொள்ள ஆவலாக இருந்தனர் ரசிகர்கள். ஆனால் நடந்தது நேர்மாறாக இருந்தது.
விசாலாட்சி அம்மாவை பார்த்து என்னை அசிங்கப்படுத்துவதற்காக இத்தனை நாள் காத்திருந்தாயா என்கிறார். நான் போய் என் மகளை பார்த்து விட்டு வருகிறேன் என விசாலாட்சி கிளம்ப அவரை தடுத்த குணசேகரன், இந்த வீட்டை விட்டு எனது அனுமதி இல்லாமல் யாரும் வெளியே செல்ல கூடாது. இது என்னுடைய வீடு இங்கே நான் சொல்வதை தான் அனைவரும் கேட்க வேண்டும் என கட்டளையிடுகிறார்.
குணசேகரனை எதிர்த்து ஜனனி பேசியதால் கோபமான கதிர் அவளை அடிக்க கை ஓங்கி கொண்டு சென்றான். ”என்னோட பொண்டாட்டி மேல யாராவது கை வச்சா யாராக இருந்தாலும் அவ்வளவு தான் வெட்டி தள்ளி விடுவேன்” என கதிரை அறைந்து விடுகிறான். அவனை அடித்து தள்ளி சக்தி மாஸ் காட்டியது வீட்டில் இருந்த மற்ற பெண்களுக்கு மட்டுமல்ல எதிர் நீச்சல் ரசிகர்களுக்கும் மிகவும் குளுமையாக இருந்தது.
பொண்டாட்டியை பாதுகாப்பவன்தான் புருஷன் அவளை அடிமையாக வைத்து இருப்பவன் அல்ல என குணசேகரன் முகத்திரையை கிழித்தான். உங்களால் என்றுமே நல்லவனாக மாற முடியாது. அத்துடன் நேற்றைய எபிசோட் முடிவடைந்த நிலையில் இன்றைய எபிசோடுக்கான ப்ரோமோ தற்போது வெளியாகியுள்ளது.
ஜனனி இனி இங்கே இருக்க தேவையில்லை வா போலாம் என சக்தியை அழைக்கிறாள். ரேணுகாவும் நந்தினியும் கூட வாங்க நாம எல்லாருமே சேர்ந்து வெளியேறலாம் என சொல்ல, குணசேகரன் அவளும் இருக்கா இல்ல அவளையும் சேர்த்து கூட்டிக்கொண்டு போங்க என ஈஸ்வரியையும் கூட்டிக்கொண்டு போக சொல்கிறார்.
அடுத்ததாக ஆடிட்டர் குணசேகரனை சந்திப்பதற்காக வீட்டுக்கு வருகிறார். பட்டம்மாள் ஷேருக்கும் உங்கள் மருமகளுக்கும் ஏதோ பெரிய சம்பந்தம் இருக்கும் என நினைக்கிறேன் என்கிறார் ஆடிட்டர். அவர்களை இப்போ தான் வீட்டை விட்டு அனுப்பினேன் என குணசேகரன் சொல்ல, தப்பு பண்ணிட்டீங்களே குணசேகரன் என ஆடிட்டர் சொல்கிறார். இதை கேட்டு ஷாக்காகிறார் குணசேகரன். இதுதான் இன்றைய எதிர் நீச்சல் எபிசோடுக்கான ஹிண்ட்.
குணசேகரன் மறுபடியும் ஜனனியையும் சக்தியை வீட்டுக்கு அழைப்பாரா? ஜனனி சக்தி நிலை என்ன?