Ethirneechal : 'வந்தா சொத்தோட வாங்க’ : புலம்பிய குணசேகரன்.. ஜனனி போட்ட புது ப்ளான்.. எதிர்நீச்சல் நேற்று
* ஜீவானந்தத்தை சந்திக்க ஏற்பாடு செய்வதாக வாக்களித்த கெளதம் * வந்தால் சொத்தோடு தான் வரவேண்டும் என குணசேகரன் அடாவடி
சன் டிவியில் ஒளிபரப்பாகும் எதிர் நீச்சல் தொடரின் நேற்றைய எபிசோடில் ஈஸ்வரி அழைத்ததால் கெளதம் அவர்கள் சொன்ன இடத்திற்கு வருகிறான். கௌதமிடம் 'என்னை இறந்து போன உன்னுடைய அக்காவாக நினைப்பது உண்மைதானே. அப்போ ஜீவானந்தம் யார்? அவருடைய நோக்கம் என்ன?' என ஈஸ்வரி கேட்கிறாள். அவர் சமுகத்தோட தத்துவம், என்னை பொறுத்தவரையில் நல்லவர். "மக்களோட சந்தோஷத்துக்காக போராடுறவர்" என்கிறான் கௌதம்.
"ஜீவாவுக்கும், அப்பத்தாவின் சொத்துக்கும் என்ன சம்பந்தம் என ஈஸ்வரி கேட்கிறாள். அது எனக்கு தெரியாது. நான் இப்போ தான் அந்த அமைப்பில் சேர்ந்தேன். அதில் எனக்கு தெரியாத பல விஷயங்கள் உள்ளது அதில் ஒன்றுதான் அப்பத்தாவின் சொத்துக்கும் ஜீவாவுக்கும் இருக்கும் தொடர்பு. அது பற்றி எனக்கு தெரியாது" என்கிறான் கௌதம்.
"நான் அவரை நேரில் சந்தித்து பேச வேண்டும். சமூகத்திற்கு நல்லது நினைக்கும் ஜீவானந்தம் அவருடைய கொள்கையால் எங்களோட வாழ்க்கை எங்க குழந்தைகளோட எதிர்காலம் எல்லாமே பாதிக்குது. அதை பற்றி அவர் யோசிக்கமாட்டாரா? அதற்கு நீதான் ஏற்பாடு செய்ய வேண்டும்" என்கிறாள் ஈஸ்வரி. "முயற்சி செய்கிறேன் ஆனால் ஆனா உடனே நடக்காது. அவர் யாரையும் உடனே சந்திக்க மாட்டார், யோசித்து தான் சொல்வார். நானே அவரை பல நாட்களுக்கு பிறகு தான் சந்தித்தேன்" என்கிறான் கெளதம். சரி அதை சீக்கிரம் இந்த அக்காவுக்காக செய் என ஈஸ்வரி கேட்கிறாள்.
மருத்துவமனையில் குணசேகரன் எதுவும் சாப்பிட மாட்டேன் என அடம் பிடிக்கிறார். பிரச்சனை முடியும் வரையில் வாயில் பச்சைத்தண்ணி கூட படாது என்கிறார். பொம்பளைகளை நம்பி பேச்சுவார்த்தை செய்யுற அளவுக்கு ஆகிவிட்டேன் என்கிறார் குணசேகரன். ஜனனி, ஈஸ்வரி, நந்தினி மற்றும் சக்தி அங்கே வருகிறார்கள். "என்ன ஆச்சு?" என நந்தினி கரிகாலனிடம் கேட்கிறாள். "மாமாவுக்கு பக்கவாதம் வந்து ஒரு பக்கம் விளங்காமல் போய்விட்டது" என்கிறான். "என்னடா இவ்வளவு சாதாரணமா சொல்லற?" என நந்தினி கேட்கிறாள். அதற்கு கரிகாலன் "உயிர் போகல இல்ல அதை நினச்சு சந்தோஷப்படுங்க" என்கிறான்.
"போன காரியம் என்ன ஆனது? ஜீவானந்தத்திடம் பார்த்து பேசுனீங்களா?" என கேட்கிறார் குணசேகரன். அவரை பார்க்க முடியவில்லை. ஊருக்கு போய்விட்டார் என சொல்கிறார்கள் என நந்தினி சொல்கிறாள். அதை நம்பாத குணசேகரன் வந்த சொத்தோட வாங்க இல்லனா வெளியே கிளம்புங்க என விரட்டி விடுகிறார். நந்தினி குணசேகரனை உத்து உத்து பார்த்து கொண்டு இருக்கிறாள். என்னமா? என கேட்கிறார். இல்லை எந்த பக்கம் பிரச்சனை என பார்க்கிறேன் என சொல்கிறாள். விரட்டி அடிக்கவே அவர்கள் வீட்டுக்கு திரும்பி விட்டார்கள்.
வீட்டுக்கு வந்தவர்கள் அவர் நடிக்கிறாரா என தோணுது. "இதை நாம் ஃபேஸ் பண்ணிதான் ஆகவேண்டும். ஜீவாவை நேரடியாக பார்ப்பதால் என்ன ஆக போகிறது. நமக்கு உதவியாக இருக்க ஒரு வழக்கறிஞர் தேவை. அவரை எப்படி தேடி கண்டுபிடிக்க போகிறோம்" என பேசிக்கொண்டு இருக்கிறார்கள். அந்த சமயத்தில் ஜனனிக்கு ஒரு ராங் கால் வருகிறது. அதில் சாப்பாடு ஆர்டர் செய்து எவ்வளவு நேரம் ஆகிறது ஏன் இன்னும் எடுத்து வரவில்லை என ஒருவர் கத்துகிறார்.
பின்னர் அனைவரும் சாப்பிட்டு கொண்டே பேசிக்கொண்டு இருக்கிறார்கள். நந்தினி நன்றாக சமைக்கிறாள் என அனைவரும் பாராட்டுகிறார்கள். "இவருக்கு கை இப்படி ஆயிடுச்சே எப்படி சாப்பிடுவாரு?"என நந்தினி கேட்க "அவருக்கு கை இல்லனா என்ன இணைந்த கைகள் தான் அத்தனை இருக்கே அவர்கள் எல்லாரும் ஊட்டிவிடுவார்கள்" என கேலி செய்கிறார்கள்.
அந்த நேரத்தில் மீண்டும் ஜனனிக்கு அதே நம்பரில் இருந்து போன் வருகிறது. மீண்டும் அதே நபர் சாப்பாடு வரவில்லை என கத்துகிறார். ஜனனி சொல்ல வருவதை காதில் வாங்கவே இல்லை. உடனே ஜனனிக்கு ஒரு ஐடியா வருகிறது. உடனே சரி சார் உங்களோட அட்ரஸ் கொஞ்சம் திரும்பவும் சொல்லுங்க என கேட்கிறாள். ”பத்தே நிமிடத்தில் உங்களுக்கு சாப்பாடு வந்து விடும்” என சொல்லிவிட்டு நந்தினியை தோசை சுட சொல்கிறாள். அத்துடன் நேற்றைய எபிசோட் முடிவுக்கு வந்தது.