மேலும் அறிய

Ethirneechal July 27: குணசேகரனுக்கு நேர்ந்த சோகம்... அதிர்ச்சியில் உறைந்த தம்பிகள்..எதிர்நீச்சல் நேற்று 

* டேஞ்சரில் குணசேகரன் உடல் நிலை டாக்டர் கொடுத்த அதிர்ச்சி தகவல் * ஜீவானந்தத்திடம் நியாயம் கேட்க சென்ற ஈஸ்வரி * ஊசி போட்டு கொல்ல சொல்லும் குணசேகரன் நேற்றைய எதிர்நீச்சல் எபிசோட் 

சன் டிவியில் ஒளிபரப்பாகும் எதிர் நீச்சல் தொடரின் நேற்றைய எபிசோடில் குணசேகரன் நிலைமை மிகவும் மோசமாகி பரபரப்பை ஏற்படுத்தியது. 

நெஞ்சுவலியால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட குணசேகரன் ஐசியூவில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. வெளியே கதிரும் மிகவும் படபடப்பாக இருக்கிறான். கரிகாலன் வாயை மூடிக்கொண்டு சும்மா இருக்காமல் எதையாவது பேசி கதிரை மேலும் டென்ஷனாக்கி கொண்டு இருக்கிறான். டாக்டர் அவருக்கு இதற்கு முன்னர் இது போல வந்துள்ளதா அல்லது வேறு ஏதாவது பிரச்சனை இருக்கிறதா என்பதை கேட்டு தெரிந்து கொள்கிறார். அந்த நேரத்தில் ஆடிட்டர் வந்து இறங்குகிறார். 

Ethirneechal July 27: குணசேகரனுக்கு நேர்ந்த சோகம்... அதிர்ச்சியில் உறைந்த தம்பிகள்..எதிர்நீச்சல் நேற்று 

ஆடிட்டரை பார்த்த கதிர் டென்ஷனாக "இங்க எதுக்குயா வந்த. நீ வந்தாலே அணுகுண்டை தான் போடுற?" என கரிகாலன் சொன்னதும்  "என்னை ஏன் காரணம் சொல்றீங்க? அந்த ஜீவானந்தம் என இழுத்ததும்... கதிர் அவரை அடிக்க கை ஓங்குகிறான். அந்த திருட்டு பயல கொலை செய்யாம விடமாட்டேன் என கதிர் கத்துகிறான். ஹாஸ்பிடலில் இப்படி கத்தினால் வேறு ஏதாவது பிரச்சனை வரும் என ஆடிட்டர் அவனை சமாதானம் செய்கிறார்.  

அந்த நேரம் பார்த்து சக்தி, ஜனனி, ஈஸ்வரி மற்றும் நந்தினி அங்கே வரவும் மிகவும் கோபமான கதிர் மரியாதையா எல்லாரும் இங்க இருந்து கிளம்புங்க. இங்க நடக்குறதை எல்லாம் போய் அந்த திருட்டு பய கிட்ட போட்டு கொடுத்துட்டு இருக்கீங்க என அவர்கள் மீது பழி போடுகிறான். வெளியே போ என அனைவரையும் விரட்ட ஈஸ்வரி அக்கா அவரோட பொண்டாட்டி அவங்களை நீ எப்படி வெளிய போ என சொல்லலாம் என நந்தினி கேட்கிறாள். தாலிய கட்டிக்கிட்டு இரண்டு பிள்ளையை பெத்துக்கிட்ட உடனே பொண்டாட்டியா? என கேவலமாக பேச போக, ஜனனி "உங்க அண்ணன் என்னிக்காவது அவங்க மேல அன்ப காட்டி இருக்காரா? எதுக்கு எடுத்தாலும் அடிக்க கை ஓங்கிறது. அடிமையா தானே வைச்சு இருந்தாரு" என பேசிக்கொண்டே போக பெரிய சண்டையாக மாறுகிறது.

உள்ளே இருந்து நர்ஸ் வந்து சத்தம் போடுறத பார்த்துட்டு ”எல்லாரும் இங்க இருந்து கிளம்புங்க” என போக சொல்கிறார். கதிர் அனைவரையும் விரட்டி விடுகிறான். 

கீழே வந்த ஈஸ்வரி நான் போய் ஜீவானந்தத்திடம் பேச போகிறேன். ”அவருக்காகவோ அப்பத்தாவுக்காக இல்லாட்டியும் நியாயம் என்ற ஒன்று இருக்கா இல்லையா அதுக்காவது நா போய் பேசப்போகிறேன்.” என்றார். “ஆமா அக்கா அவருடைய உழைப்பை திருடியது மிக பெரிய குற்றம்” என ஜனனி சொல்கிறாள். பின்னர் மூவரும் நாங்கள் பேசி விட்டு வருகிறோம் என சொல்லி சக்தியை ஹாஸ்பிடலிலேயே இருக்க சொல்லிவிட்டு செல்கிறார்கள். அந்த நேரத்தில் கரிகாலன் வர அவனிடம் நந்தினி ஜீவானந்தத்தை சந்தித்து சொத்தை வாங்கி வர போவதாக சொல்லி விட்டு செல்கிறார்கள். 

Ethirneechal July 27: குணசேகரனுக்கு நேர்ந்த சோகம்... அதிர்ச்சியில் உறைந்த தம்பிகள்..எதிர்நீச்சல் நேற்று 

ஞானமும் அங்கு வந்த அண்ணன் நிலையை பற்றி கேட்டறிந்து ஆடிட்டரை திட்டுகிறான். அந்த நேரம் பார்த்து டாக்டர் வந்து அவருக்கு அதிர்ச்சியில் மூளையில் பாதிப்பு ஏற்பட்டு வலது பக்கம் செயல் இழந்துவிட்டது. அவரின் வலது கை கால் செயலிழந்து விட்டது. ஆனால் அது எந்த அளவில் இருக்கிறது என்பதை அவர் கண் விழித்த பிறகு தான் தெரியவரும் என சொன்னதும் அனைவரும் அதிர்ச்சி அடைகிறார்கள். 

குணசேகரன் கண் விழித்ததும் நர்ஸ் வந்து அவர்களை சத்தம் போடாமல் பார்க்க சொல்கிறார். உள்ளே சென்றவர்கள் குணசேகரன் நிலையை பார்த்து மிகவும் வேதனை படுகிறார்கள். குணசேகரன் கண் முழித்ததும் என்னப்பா ஆச்சு எனக்கு. ஹாஸ்பிடல் வர வரைக்கும் தான் ஞாபகம் இருக்கிறது. அப்புறம் என்ன நடந்தது? டாக்டர் என்ன சொன்னார் என கேட்கிறார். யாரும் பதில் சொல்லாமல் கலங்குகிறார்கள். ”என்னோட வலது கையும், காலும் மரத்துப் போன மாதிரி இருக்கு ஊசி போட்டதால் அப்படி இருக்கா.. ” என்றதும் ஞானம் ஒரு இரண்டு வாரத்துக்கு அப்படி இருக்கும் அப்புறம் சரியாகி விடும் என்கிறான். ”அப்போ என்னோட வலது கை இனிமே விளங்காதா? அவ்வளவு தானா நான் இனிமே எப்படி சாப்பிடுவேன், நாலு பேரை பார்த்த எப்படி கை கொடுப்பேன். இனிமேல் என்னை எல்லாரும் ஒத்த கை குணசேகரன்னு தான் கூப்பிடுவாங்க. மானம் மரியாதை எல்லாம் போச்சு இப்போ கையும் போச்சு, டாக்டர் கிட்ட சொல்லி ஊசி போட்டு என்ன கொன்னுட சொல்லுங்க பா” என சொன்னதும் அனைவரும் கதறுகிறார்கள்.

அத்துடன் நேற்றைய எபிசோட் முடிவுக்கு வந்தது. 

இதையும் படிங்க..

DD Returns Review: சிரிப்பு சரவெடி.. பேய் கதையில் மீண்டும் வென்ற சந்தானம்.. டிடி ரிட்டர்ன்ஸ் படத்தின் விமர்சனம் இதோ..!

LGM Movie Review: தோனியின் முதல் தயாரிப்பு.. எல்.ஜி.எம் படம் சூப்பரா? ... சுமாரா? .. முழு விமர்சனம் இதோ..!

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Tungsten Mining: பணிந்ததா மத்திய அரசு?:  டங்ஸ்டன் சுரங்க இடத்தை மறு ஆய்வு செய்ய பரிந்துரை.!
பணிந்ததா மத்திய அரசு?: டங்ஸ்டன் சுரங்க இடத்தை மறு ஆய்வு செய்ய பரிந்துரை.!
அண்டார்டிகா சிகரத்தில் ஏறி சாதனை படைத்த முதல் தமிழ் பெண் - குவியும் பாராட்டு
அண்டார்டிகா சிகரத்தில் ஏறி சாதனை படைத்த முதல் தமிழ் பெண் - குவியும் பாராட்டு
"செந்தில்பாலாஜி என் வீட்டிற்கு வந்து, என் அம்மா கையில் சாப்பிட்டுள்ளார்": அண்ணாமலை பரபர பேட்டி.!
SET: டிஆர்பி மூலமே மாநில ஆசிரியர் தகுதித் தேர்வு; உறுதியாகச் சொன்ன அமைச்சர் செழியன்- இதுதான் காரணம்!
SET: டிஆர்பி மூலமே மாநில ஆசிரியர் தகுதித் தேர்வு; உறுதியாகச் சொன்ன அமைச்சர் செழியன்- இதுதான் காரணம்!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

ADMK TVK Alliance | ’’அதிமுக தவெக கூட்டணி! நிச்சயம் ஆட்சியை பிடிக்கும்’’ பற்ற வைத்த அமீர் | AmeerAnnamalai vs Senthil Balaji: டார்கெட் செந்தில்பாலாஜி!அண்ணாமலை பலே ப்ளான்.. OK - சொன்ன மோடி!Vijayadharani Join TVK: தவெகவில் இணையும் விஜயதரணி? பாஜகவிற்கு TATA.. ஸ்கெட்ச் போட்ட விஜய்!TVK Vijay | தவெக-வின் அடுத்த சம்பவம்! 2025-ல் காத்திருக்கும் TWIST இறங்கி அடிக்கும் விஜய்! | Bussy

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Tungsten Mining: பணிந்ததா மத்திய அரசு?:  டங்ஸ்டன் சுரங்க இடத்தை மறு ஆய்வு செய்ய பரிந்துரை.!
பணிந்ததா மத்திய அரசு?: டங்ஸ்டன் சுரங்க இடத்தை மறு ஆய்வு செய்ய பரிந்துரை.!
அண்டார்டிகா சிகரத்தில் ஏறி சாதனை படைத்த முதல் தமிழ் பெண் - குவியும் பாராட்டு
அண்டார்டிகா சிகரத்தில் ஏறி சாதனை படைத்த முதல் தமிழ் பெண் - குவியும் பாராட்டு
"செந்தில்பாலாஜி என் வீட்டிற்கு வந்து, என் அம்மா கையில் சாப்பிட்டுள்ளார்": அண்ணாமலை பரபர பேட்டி.!
SET: டிஆர்பி மூலமே மாநில ஆசிரியர் தகுதித் தேர்வு; உறுதியாகச் சொன்ன அமைச்சர் செழியன்- இதுதான் காரணம்!
SET: டிஆர்பி மூலமே மாநில ஆசிரியர் தகுதித் தேர்வு; உறுதியாகச் சொன்ன அமைச்சர் செழியன்- இதுதான் காரணம்!
80 பவுன் நகை கொள்ளை வழக்கை விசாரிக்க லஞ்சம் பெற்றதாக போலீசார் மீது வழக்கு பதிவு!
80 பவுன் நகை கொள்ளை வழக்கை விசாரிக்க லஞ்சம் பெற்றதாக போலீசார் மீது வழக்கு பதிவு!
DMK Vs ADMK: திமுக, அதிமுகவினரிடையே இடையே கடும் மோதல்... சேலம் மாநகராட்சியில் பரபரப்பு
DMK Vs ADMK: திமுக, அதிமுகவினரிடையே இடையே கடும் மோதல்... சேலம் மாநகராட்சியில் பரபரப்பு
No Detention Policy: பள்ளிகளில் ஆல் பாஸ் முறை ரத்து ஏன்?- புள்ளிவிவரங்களைப் புட்டுப்புட்டு வைத்த அண்ணாமலை
No Detention Policy: பள்ளிகளில் ஆல் பாஸ் முறை ரத்து ஏன்?- புள்ளிவிவரங்களைப் புட்டுப்புட்டு வைத்த அண்ணாமலை
திமுகவிற்கு ஆதரவு.. அன்புமணி அதிரடி அறிவிப்பு.. முதலமைச்சருக்கு செக்
திமுகவிற்கு ஆதரவு.. அன்புமணி அதிரடி அறிவிப்பு.. முதலமைச்சருக்கு செக்
Embed widget