Ethir neechal July 24 episode: ஆடிட்டர் கொடுத்த ஐடியாவை கச்சிதமாக முடித்த குணசேகரன்... வலையில் சிக்கிய நந்தினி... எதிர் நீச்சல் இன்றைய எபிசோட்
* அப்பத்தாவிடம் தன்னமிக்கை இழந்து கதறும் ஜனனி* குணசேகரனுக்கு ஆடிட்டர் கொடுத்த யோசனை* சவால் விடும் குணசேகரன்நேற்றைய எதிர் நீச்சல் எபிசோட்
சன் டிவியில் ஒளிபரப்பாகும் எதிர் நீச்சல் தொடர் தற்போது மிகவும் ஸ்வாரஸ்யமான கட்டத்தை எட்டியுள்ளது. குணசேகரனை, ஜீவானந்தம் ஆட்கள் குண்டுக்கட்டாக கம்பெனியை விட்டு வெளியே கொண்டு வந்து வீசி விட்டார்கள். அதனால் மிகவும் ஆவேசமாக காவல் நிலையத்தில் சென்று புகார் அளிக்க போன இடத்தில் இவர்களுக்கு முன்னர் ஜீவானந்தம் புகார் கொடுத்து விட்டார். இன்ஸ்பெக்டரும் குணசேகரனை இந்த விஷயத்தை பொறுமையாக புத்திசாலித்தனத்துடன் கையாளுங்கள் என அட்வைஸ் கொடுத்து அனுப்பி விடுகிறார். இதனால் எதுவுமே செய்யமுடியாமல் விரக்தியில் இருக்கிறார்கள் குணசேகரன் மற்றும் அவரின் தம்பிகள்.
அதன் தொடர்ச்சியாக நேற்றைய எபிசோடில் வீட்டில் இருக்கும் அனைவரிடமும் அப்பத்தாவின் சொத்து முழுவதையும் ஜீவானந்தம் ஆக்கிரமித்தது குறித்து சொல்லிவிட்டு அப்பத்தாவின் ரூமுக்கு செல்கிறாள் ஜனனி. அப்பத்தாவை பார்த்து "நாம தோத்து போயிட்டோம் அப்பத்தா. நீங்க என்ன எல்லாம் செய்யணும் என நினைச்சீங்க அது எதுவுமே இனி நடக்காது. அந்த ஜீவானந்தம் மிகவும் மோசமான ஆளு" என சொல்லி உடைந்து அளிக்கிறாள் ஜனனி. அவளை சக்தி சமாதானப்படுத்துகிறான். "நாம தோத்து போகல இப்ப தான் நமக்கு என்ன விஷயம் என தெரிய வந்து இருக்கு. இதை வைத்து அடுத்து என்ன பண்ணலாம் என யோசிக்கலாம். நீ இப்படி உடைஞ்சு போகாதே" என கூறுகிறான். ஜனனிக்கு கொஞ்சம் தன்னம்பிக்கை வருகிறது.
கோயில் வாசலில் குணசேகரன் உட்காந்து புலம்பி கொண்டு இருக்கிறார். ஆடிட்டர் டீ வாங்கி வந்து கொடுத்ததை தட்டி விடுகிறார். வடக்கு பக்கம் இருக்கும் ஆட்களை எல்லாம் வர சொல்லி கதிரை போன் செய்ய சொல்கிறார் குணசேகரன். "ஆத்திரத்துல எதுவும் பண்ணாதீங்க. எதுவும் செய்றதுக்கு முன்னாடி யோசிச்சு செய்யுங்க என ஆடிட்டர் அட்வைஸ் கொடுக்கிறார். ஜீவானந்தம் உங்களை பற்றி முழுமையாக தெரிந்து கொண்டு தான் காய் நகர்த்தியுள்ளார். அதனால் நீங்கள் எப்படி யோசிப்பீங்க உங்களோட அடுத்த மூவ் என்னவாக இருக்கும் என எல்லாத்தையும் யோசிச்சு தான் செய்து இருக்கான்".
"இந்த பிரச்சனையில் இருந்து தப்பிக்கணும்னா உங்க அப்பத்தா எழுந்து வந்து உண்மையை சொல்லி நிரூபிக்க வேண்டும். இல்லை என்றால் உங்கள் வீட்டு பொம்பிளைகளை வைத்து இந்த காரியத்தை சாதிக்க முயற்சி செய்யுங்க" என்கிறார் ஆடிட்டர். "செய்யுறேன் ஜனனியால போன சொத்து அவளாலேயே திரும்பி வர வைக்குறேன். வரவைச்சு காமிக்கிறேன்" என சபதமிடுகிறார் குணசேகரன்.
தள்ளாடிக்கொண்டே வீட்டுக்கு வந்து இறங்கிய குணசேகரனை பார்த்து வீட்டில் இருந்தவர்கள் அதிர்ச்சி அடைகிறார்கள். "நான் கட்டின இந்த கனவு கோட்டை என்னை விட்டு போயிடுமா என பயமா இருக்கு" என புலம்புகிறார். கைத்தாங்கலாக அவரை உள்ளே அழைத்து செல்கிறார்கள். குணசேகரன் ஜனனியை பார்த்து, "அந்த ஜீவானந்தம் வரும் வரைக்கும் நீ என்னை எப்படி எல்லாம் பேசுனா. அவனே சொல்லிட்டான் உனக்கும் அவனுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என நானும் உன்னை நம்புகிறேன். ஆனா அப்பத்தாவோட கையெழுத்து அவன்கிட்ட எப்படி போச்சு". ஒருவேளை அப்பத்தாவையும் துப்பாக்கியை மிரட்டி கையெழுத்து வாங்கி இருப்பானோ. அப்பவே அப்பத்தா உண்மையை சொல்லியிருந்தா அவனிடம் சொத்து போகாமல் பார்த்து இருந்து இருக்கலாம்.
"மீதி 60% ஷேர் உங்க பேர்ல தானே இருக்கு பிறகு என்ன" என நந்தினி கேட்கிறாள். "ஒண்ணுமே கிடையாது. இருக்கறதுலே அதிகமான ஷேர் அப்பத்தாவுடையது தான் அதை அவன் எடுத்துக்கிட்டேன். இனி அவங்க தான் மெஜாரிட்டி ஷேர் ஹோல்டர்ஸ் நம்ம மைனாரிட்டி தான். இனிமேல் அவன் வைச்சது தான் சட்டம். இந்த சொத்து நம்ம கையை விட்டு போக கூடாது. அப்பத்தாவுக்கு சேர வேண்டிய 40% ஷேரையும் நான் கொடுத்துடுறேன். எவனோ தெருவுல போறவனுக்கு போறத விட அப்பத்தாவுக்கு கொடுக்கலாம். நீங்க தான் மா ஏதாவது பண்ணனும் என்கிறார்.
நந்தினி சற்றும் யோசிக்காமல் நாங்க பண்றோம் மாமா. ஆதிரை விஷயத்துல தான் நாங்க முடிக்கமுடியாம போயிடுச்சு. இதை பண்ணறோம் என சொன்னதாம் குணசேகரன் முகத்தில் தான் நினைத்ததை சாதித்த ஆணவம் தெரிகிறது. அத்துடன் நேற்றைய எபிசோட் முடிவுக்கு வந்தது.