Ethir neechal July 22: இப்போ மட்டும் ஏன் பொங்குற? குண்டுக்கட்டாக தூக்கி வெளியே தள்ளப்பட்ட குணசேகரன்... நேற்றைய எதிர்நீச்சல்
* ஜீவானந்தம் டீமில் கௌதமை பார்த்து ஜனனி அதிர்ச்சி* குண்டுக்கட்டாக வெளியே தூக்கி செல்லப்பட்ட குணசேகரன்* நியாயம் கேட்க போன ஜானகியின் விஷயங்களை புட்டுப்புட்டு வைத்த ஜீவானந்தம்எதிர்நீச்சல் நேற்று
சன் டிவியில் ஒளிபரப்பாகும் எதிர் நீச்சல் தொடரின் நேற்றைய எபிசோடில் மிகவும் பரபரப்பான கட்டம். அப்பத்தாவின் 40% ஷேருக்கு இனிமேல் சொந்தக்காரர் ஜீவானந்தம் என்பதை சொன்னதும் அதிர்ச்சி அடைகிறார் குணசேகரன். துப்பாக்கியை காட்டி ஜீவானந்தம் மிரட்டிவிட்டு எங்களுடைய பங்கு போக உனக்கு மிஞ்சி இருக்குற சொத்தின் விவரம் பற்றி நீ தெரிஞ்சுக்க வேணும்னா 10 நிமிஷம் டைம் தரேன் அதுக்குள்ள ஒரு முடிவு எடுத்துக்கிட்டு வா. இல்லை என்றால் தெரியாமலேயே செத்து போ என சொல்கிறார் ஜீவானந்தம். யாரும் எதிர்பார்க்காத வகையில் குணசேகரன் ஜீவானந்தத்தை தேடி வெளியில் வருகிறார். அவரை பின்தொடர்ந்து மற்றவர்களும் வருகிறார்கள்.
ஜீவானந்தம் சொத்து விவரம் பற்றி சொல்ல ஒருவரை போன் மூலம் வரச்சொல்லி சொல்கிறார். அந்த நபர் வேறு யாரும் இல்லை ஜனனி நண்பன் கௌதம் தான். கெளதம் அங்கு வருவதை பார்த்து அதிர்ச்சி அடைகிறார்கள் ஜனனி மற்றும் சக்தி. "நீ இங்க என்ன பண்ற கெளதம். உனக்கும் இவங்களும் என்ன சம்பந்தம்?" என ஜனனி கேட்கிறாள். சக்தி வந்து கெளதம் கழுத்தை பிடித்து "இதற்காக தான் எங்களை ஒதுக்கி போங்கனு சொன்னியா. நான் இவங்களோட கூட்டணின்னு சொல்லி இருக்கலாமே" என கேட்கிறான். சக்தியை தடுத்து நிறுத்திய ஜீவானந்தம் "ஜனனி ஒரு தனி நபர் அவங்களும் எங்களுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. கெளதம் ஜனனியோட பிரெண்ட் அதை தாண்டி அவங்க ரெண்டு பேருக்கும் இந்த விஷயத்தில் வேறு எந்த சம்பந்தமும் இல்லை" என்கிறார்.
கௌதம் நான் உங்களுக்கு சேர வேண்டிய சொத்து விவகாரம் பற்றி சொல்கிறேன் என சொல்கிறான். உங்களுடைய 28 சொத்தில் 23 சொத்தில் எங்களுக்கு பங்கு இருக்கிறது என சொல்லி அதை பற்றி விலாவரியாக ஒவ்வொன்றாக சொல்கிறான். கடுப்பில் கேட்டு கொண்டு இருந்த குணசேகரன் இதில் வீடு ஒன்னு இருக்கு என்றதும் கெளதம் "அதுவும் லிஸ்ட்ல இருக்கு " என்கிறான். சீறி எழுந்த குணசேகரன் என்னோட வீட்ல கை வைப்பீங்களா வாங்க டா பாக்கலாம். எல்லாரையும் குழி தோண்டி புதைச்சுடுவேன் என சொல்லி இது என்னோட கம்பெனி. ஆம்பளையா இருந்த என் மேல கை வைங்க பார்க்கலாம் என அப்படியே உட்கார்ந்து கொள்கிறார். ஜீவானந்தம் இது எங்களுடைய இடம் வெளியே போ என சொல்லியும் குணசேகரன் அசையவில்லை. என்னோட ஸ்டைலில் சொல்கிறேன் என சொல்லி அடியாட்களை வைத்து வெளியே தூக்கி கொண்டு போய் விட சொல்கிறார். அவர்களுக்கு குண்டுக்கட்டாக குணசேகரனை சுமந்து சென்று கேட்டுக்கு வெளியே விட்டு விடுகிறார்கள். சிலை போல குணசேகரன் நிற்க கதிரும் ஞானமும் கதறி அழுகிறார்கள்.
ஜனனியால் பொறுத்து கொள்ள முடியாமல் ஜீவானந்தம் பின்னாலேயே நியாயம் கேட்க செல்கிறாள். இது உங்களுக்கு அசிங்கமா இல்லையா என கேட்கிறாள். ஜீவானந்தம், குணசேகரன் வீட்டில் ஜனனிக்கு நடந்த ஒவ்வொரு கொடுமையையும் அவமானத்தையும் விலாவரியாக சொல்லி அப்போ எல்லாம் பொங்கி எழாத நீ இப்போ மட்டும் ஏன் பொங்குற என கேட்கிறார். சக்தியை பார்த்து "பொண்டாட்டிய அவ இவ என உன்னோட அண்ணன் பேசும் போது அமைதியாக வேடிக்கை பார்த்துகிட்டு இருந்துட்டு இப்போ ஏன் உனக்கு கோபம் வருது. அப்பத்தா சொத்து இனி எங்களுடையது . அதுக்காக போராடுறத விட்டுட்டு வேற வேலைய பாரு" என சொல்லிவிட்டு செல்கிறார் ஜீவானந்தம்.
கெளதம் சட்டையை பிடித்து ஜனனி "நீ செய்த இந்த துரோகத்தை நான் மறக்கவே மாட்டேன். உன்னை நிச்சயமாக இதற்கு வருத்தப்பட வைப்பேன்" என்கிறாள். காரில் சென்று கொண்டு இருக்கும் குணசேகரன் நேராக காவல் நிலையத்திற்கு செல்ல சொல்கிறார். என்னையே கழுத்தை பிடித்து வெளியே தள்ளி விட்ட அவனை நான் என்ன செய்ய போகிறேன் பாரு. ரத்தம் பார்த்து ரொம்ப நாளாச்சு என கோபத்தில் கத்துகிறார். அத்துடன் நேற்றைய எபிசோட் முடிவுக்கு வந்தது.