Ethirneechal July 20 promo : ஃபர்ஹானாவிடம் அடி வாங்கிய கதிர்... ஜனனியால் அரண்டுபோன குணசேகரன்... பரபரப்பான எதிர்நீச்சல் ப்ரோமோ
* கம்பெனிக்கு விரையும் குணசேகரன் * பட்டையை கிளப்பும் ஃபர்ஹானா * ஜனனியின் துணிச்சலான பேச்சு
சன் டிவியில் ஒளிபரப்பாகும் எதிர்நீச்சல் தொடரின் நேற்றைய எபிசோட் பரபரப்பில் உச்சகட்டம். ஜீவானந்தம் என்ற பெயரில் குணசேகரன் சொத்து ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது என்பதை ஆடிட்டர் மூலம் தெரிந்து மொத்த குடும்பமும் அதிர்ச்சி அடைகிறார்கள்.
மெடிக்கல் எக்விப்மென்ட் கம்பெனியை அவர்கள் ஆக்கரமித்துவிட்டதாகவும் குணசேகரன் வேலையாட்களை வெளியில் அனுப்பியது பற்றியும் சொல்லி ஷாக் கொடுக்கிறார். ஜீவானந்தம் என்ற பெயரை கேட்டு குழம்பிய ஜனனி, கோமாவில் இருக்கும் அப்பத்தாவை போய் எழுப்புகிறாள். உண்மையை சொல்லுங்கள் உங்களுக்கும் அந்த ஜீவானந்தத்துக்கும் என்ன சம்பந்தம். ஏன் அவர்கள் நம்முடைய சொத்தை ஆக்கிரமித்துள்ளனர். பதில் சொல்லுங்க அப்பத்தா என புலம்பி தள்ளுகிறார். இது அனைத்தும் குணசேகரன் டிராமாவாக தான் இருக்கும் என்பது ஈஸ்வரியின் வாதமாக இருக்கிறது. அத்துடன் நேற்றைய எபிசோட் முடிவுக்கு வந்தது.
பரபரப்பான அடுத்த கட்டத்தின் தொடர்ச்சி இன்று தொடர்கிறது. அதற்கான ப்ரோமோ வெளியாகியுள்ளது. இது அனைத்து குணசேகரன் போட்ட பிளான் தான். ஜீவானந்தம் மூலம் சொத்துக்களை ஆக்கிரமிக்க குணசேகரன் தான் டிராமா போடுகிறார் என ஈஸ்வரி சொன்னது ஒரு வேலை உண்மையாக இருக்குமோ என நம்பிய ஜனனி அப்படி அதுதான் உண்மை என்றால் இன்றைக்கு நானா? இல்லை அந்த குணசேகரனா? என பார்க்க போகிறேன். அவரை சும்மா விடப்போவதில்லை என்கிறாள்.
மெடிக்கல் எக்விப்மென்ட் கம்பெனிக்கு அனைவரும் செல்கிறார்கள் அங்கு ஜீவானந்தம் ஆட்கள் முழுவதுமாக ஆக்ரமித்துள்ளனர். ஃபர்ஹானாவிடம் கதிர் சத்தம் போட்டு கத்தி அநாகரீகமாக பேச அவனை "சார் இங்க கத்தி பேசக்கூடாது மரியாதையா பேசுங்க" என்கிறாள் ஃபர்ஹானா. உனக்கு எல்லாம் என்னடி மரியாதை என அடிக்க ஓங்கிய கதிரை தடுத்து அவனது கைகளை முறிக்கிறாள் ஃபர்ஹானா.
குணசேகரன் வாக்குவாதம் செய்து கொண்டு இருந்த சமயத்தில் வேகவேகமாக ஜனனியும், சக்தியும் கம்பெனிக்கு வருகிறார்கள். ஜனனிக்கு ஃபர்ஹானாவை பார்த்ததும் அன்றைக்கு சிசிடிவி பூட்டேஜில் வீட்டுக்கு வந்து அப்பத்தாவின் கைரேகையை எடுத்த நான்கு நபர்களின் முகம் ஞாபகம் வருகிறது. "நீங்க தானே அன்றைக்கு வீட்டுக்கு வந்து அப்பத்தாவின் கைரேகையை எடுத்தது? உங்க கூட வந்த ஆள் எங்க?" என ஃபர்ஹானாவிடம் கேட்கிறான் ஜனனி. இது தான் இன்றைய எதிர்நீச்சல் எபிசோடுக்கான ஹிண்ட்.
ஒவ்வொரு நாளும் ஏகப்பட்ட அதிரடி ட்விஸ்ட் கொடுத்து ரசிகர்களை கட்டிப்போட்டுள்ள எதிர் நீச்சல் சீரியலின் ஹைலைட் கட்டம்தான் தற்போது ஒளிபரப்பாகி வருகிறது. இந்த நிகழ்வுக்காக தான் ரசிகர்கள் பல நாட்களாக ஆவலுடன் காத்து கொண்டு இருந்தனர். இனி வரும் எபிசோட்களில் என்ன திருப்பங்கள் நடைபெற உள்ளது என்பதை பொறுத்து இருந்து பார்க்கலாம்.