Ethir neechal August 23 episode : பல்டி அடித்த கதிர்... அப்பத்தாவை பார்க்கச்சென்ற ஜனனிக்கு ஷாக்.. எதிர்நீச்சலில் நேற்று
* நந்தினியை அசிங்கப்படுத்தி பல்டி அடித்த கதிர்* ஜீவானந்தம் பற்றி ஜனனி சொன்னதால் மற்றவர்கள் அதிர்ச்சி
சன் டிவியில் ஒளிபரப்பாகும் எதிர் நீச்சல் தொடரின் நேற்றைய எபிசோடில் நந்தினி குணசேகரன் அவளை அடிக்க கை ஓங்கியதை பற்றியும் அசிங்கமாக பேசியது பற்றி சொன்னதும் கதிர் கோபப்பட்டு குணசேகரனிடம் சென்று "அவளை என்ன சொன்னீங்க... அடிக்க போனீங்களா... பேசுறத கேட்டு கழுத்தை நெருச்சி கொன்னுருக்க வேண்டாம். பேசவிட்டு வேடிக்கை பாத்தீங்களா" என கேட்டதும் அனைவரும் தலையில் அடித்து கொள்கிறார்கள்.
நந்தினியை பார்த்து "அவன் என்னோட தம்பி. அவனை நீ என்ன செய்தாலும் மாற்ற முடியாது. போய் வேலையை பாரு" என சொல்லிவிட்டு செல்கிறார் குணசேகரன். இதை சற்றும் எதிர்பார்க்காத நந்தினி குணசேகரன் முன்னாள் அசிங்கப்பட்டு கலங்கி நிற்கிறாள். அவளை அனைவரும் சமாதானம் செய்கிறார்கள்.
கதிர் குணசேகரனிடம் கிள்ளிவளவனை பயங்கரமாக திட்டி கொண்டு இருக்கிறான். "ஜீவானந்தம் குடும்பத்தை நானே போட்டு தள்ளி இருப்பேன். இந்த கிழட்டு பய தான் என்னை இழுத்துட்டு வந்துட்டான்" என்கிறான் கதிர். அப்பத்தாவிடம் ஜீவானந்தத்திற்கு எதிராக கையெழுத்து வாங்கி அரெஸ்ட் வாரண்ட் கூட வாங்கியாச்சு. "முடியாது அண்ணன். அந்த தாடிகாரனை நான் என் கையாள கொல்லனும்" என்கிறான் கதிர். "இந்த வீட்டு பொம்பிளைகளை சும்மா விடக்கூடாது அடக்கி வைக்கணும்" என்கிறார் குணசேகரன்.
நந்தினி மிகவும் வருத்தப்பட்டு பேசிக்கொண்டு இருக்கிறாள். இந்த வீட்டை விட்டு போகமாட்டேன். இவர்களுக்கு நான் யார் என்பதை காட்டாமல் விடமாட்டேன் என்கிறாள். அப்போது ஜனனி வீட்டுக்கு வருகிறாள். அவன் கவுஞ்சியில் நடந்ததையே நினைத்து அழுது கொண்டு வருகிறாள். என்ன நடந்தது என புரியாமல் அனைவரும் எதற்கு அழுகிறாள் என கேட்கிறார்கள்.
"அங்க ஜீவானந்தம் மனைவியை என் கண்ணு முன்னாடியே சுட்டுட்டாங்க அக்கா" என சொல்லி நடந்த அனைத்தையும் சொல்கிறாள் ஜனனி. "என் கண்ணு முன்னாடியே ஒரு உயிர் போயிடுச்சு. என்னால எதுவும் செய்யமுடியல. அந்த குழந்தை அழுதது என்னோட காதுக்குள்ள கேட்டுகிட்டே இருக்கு. அந்த வெண்பா பாவம்" என சொல்கிறாள் ஜனனி. "யாரு சுட்டது என தெரியல. வெண்பாவை நான் பாத்துக்குறேன் நீ போன்னு என்ன அனுப்பிட்டாரு அக்கா. அவருக்கு இப்படி ஒரு பக்கம் இருக்கும்னு எனக்கு தெரியல. அவரோட அழகான குடும்பத்தை தன்னோட சமூக போராட்டம் பாதிச்சிட கூடாதுன்னு குடும்பத்தை வெளியுலகத்தை கட்டாமலேயே வைச்சு இருக்காரு. இரண்டு மூணு மாசத்துக்கு ஒரு முறை தான் ஊருக்கு போய் குடும்பத்தை பாப்பராம். பாலோ செய்து சுட்டு கொன்னுட்டாங்க" என ஜனனி சொல்லி அழுததும் ஈஸ்வரியால் அதை தாங்கிக்கொள்ள முடியாமல் அழுகிறாள்.
"ஜீவானந்தம் கெட்ட ஆளு இல்ல. அப்பத்தா எழுந்து பேசினா தான் எல்லாம் தெளிவா தெரியும்" என ஜனனி சொல்கிறாள். அப்பத்தா எழுந்ததை பற்றி நந்தினி சொன்னதும் ஜனனி அதிர்ச்சியாகிறாள். அவளிடம் நடந்த அனைத்தையும் பற்றி சொல்கிறார்கள். "அப்பத்தா சொன்னது போல அவங்களை காப்பாத்த தான் ஜீவானந்தம் சொத்தை தன் பெயரில் மாத்தி எழுதி இருக்காரு" என்கிறாள் நந்தினி. "இதுக்கு பின்னாடி ஏதோ ஒரு காரணம் இருக்கு. அது என்னனு அப்பதாகிட்ட நான் கேட்டா சொல்லுவாங்க" என சொல்லிவிட்டு அப்பத்தாவை பார்க்க வேகவேகமாக செல்கிறாள். அங்கு குணசேகரன் வாசலில் உட்கார்ந்து கொண்டு ஜனனியை பார்த்து முறைக்கிறார்.