Ethirneechal August 21 : ஏவி விட்டவனை சாம்பலாக்குவேன்! சவால் விட்ட ஜீவானந்தம்... கொந்தளித்த கதிர்... எதிர்நீச்சலில் நேற்று
Ethir neechal August 21 episode :*மனைவிக்கு இறுதி சடங்கு செய்த ஜீவானந்தம்* மனவருத்தத்தில் மன்னிப்பு கேட்ட ஜனனிநேற்றைய எதிர் நீச்சல் எபிசோட்
சன் டிவியில் ஒளிபரப்பாகும் எதிர்நீச்சல் (Ethir neechal) தொடரின் நேற்றைய எபிசோடில் ஜீவானந்தம் மனைவி கயல்விழி மீது குண்டு பட்டு ரத்த வெள்ளத்தில் செத்து கிடக்கிறாள். அதை பார்த்த ஜீவானந்தம், வெண்பா கதற ஜனனி அதிர்ச்சியில் செய்வதறியாது நிற்கிறாள்.
கதிரை வளவன் மற்றும் அவனது அடியாட்கள் வலுக்கட்டாயமாக இழுத்து வருகிறார். ஊர்மக்கள் பார்த்துவிட்டால் பிரச்சனையாகிவிடும் அவனை இன்னொரு நாள் பார்த்து கொள்ளலாம் என சொல்லி அழைத்து செல்கிறார்கள். கதிர் வளவனை பயங்கரமாக திட்டுகிறான். "முதல் நாளில் இருந்தே எனக்கு உன் மேல சந்தேகம்தான். அல்வா மாதிரி கிடைச்சவன ஒழுங்கா பார்த்து சுட தெரியல. நீ எல்லாம் ஒரு போலீஸ்காரனா?" என திட்டுகிறான். ஒரு வழியாக கதிரை ஜீப்புக்கு இழுத்து வந்து விடுகிறார்கள்.
ஜீவானந்தம், மனைவிக்கு செய்ய வேண்டிய இறுதி சடங்குகளை செய்து கொல்லி வைக்கிறார். மனைவி பேசிய விஷயங்கள் அனைத்தும் நினைவில் வந்து போகின்றன. கூடவே ஜனனியும் இருக்கிறாள். "சத்தியமா உங்களை இப்படி ஒரு நிலைமையில பார்ப்பேன் என நினைக்கலை. நான் என்னமோ நினச்சு வந்தேன் ஆனா இங்க என்னென்னமோ நடந்துடுச்சு" என சொல்லி மன்னிப்பு கேட்கிறாள் ஜனனி.
"உங்களுக்கும் அப்பத்தாவுக்கும் இருக்கும் உறவு பத்தி எனக்கு தெரியாது. ஆன நீங்க தப்பானவர் இல்ல என்பது புரியுது. நாங்க தான் உங்கள தப்பா நினைச்சுட்டோம். அன்னிக்கு ஆபிஸ்ல நீங்க நடந்துக்கிட்டதுக்கும் இப்போ நான் பார்த்ததுக்கும் எவ்வளவு வித்தியாசம். உங்களுக்கு இப்படி ஒரு அழகான குடும்பம் இருக்கும் என நான் நினைக்கல. நீங்க இவர்களுக்காக இருந்து இருக்கலாமே. எதுக்காக உங்களுக்கு இந்த போராட்டம்" என்கிறாள் ஜனனி.
"நான் யாருக்கும் புரிய வைக்க விரும்பவில்லை. வார்த்தைகளால் எல்லாத்தையும் புரிய வைக்க முடியாது. நீ நல்ல பொண்ணு உனக்கு எல்லாம் நல்லதாவே நடக்கும். யாருக்கும் நான் பயப்படவும் மாட்டேன், கட்டுப்படவும் மாட்டேன்" என்றார் ஜீவானந்தம்.
பிறகு தன்னுடைய மனைவியை சந்தித்தது பற்றியும் அவரின் திருமணம் பற்றியும் ஜனனியிடம் சொல்கிறார். "அவர்களை பாதுகாப்பாக வைத்து இருக்க வேண்டும் என்பதற்காக தான் இங்கே தனியாக வைத்து இருந்தேன். எனக்கு நிறைய எதிரிகள் இருக்கிறார்கள். யாரும் இதுவரையில் என்னுடைய குடும்பம் மீது கை வைத்து இல்லை. இது ஏதோ புது எதிரி. அவர்களை நான் விடமாட்டேன். ஏவி விட்டவன நான் விடமாட்டேன்" என்கிறார் ஜீவானந்தம்.
அப்பத்தாவை டாக்டரிடம் காட்டலாம் என விசாலாட்சி சொல்ல அதெல்லாம் ஒன்னும் தேவை இல்லை என குணசேகரன் சொல்கிறார். கரிகாலன் குணசேகரனுக்கு சப்போர்ட்டாக பேசுகிறான். "அப்பத்தாவை ஏன் ரூமுக்குள் போட்டு அடைச்சு வைச்சு இருக்கீங்க" என ரேணுகா கேட்க "உனக்கு இது தேவை இல்லாத விஷயம். உங்களுக்கு என்னை பத்தி தெரியாது" என சொல்கிறார். அத்துடன் இன்றைய எதிர் நீச்சல் (Ethir neechal )எபிசோட் முடிவுக்கு வந்தது.