Ethir neechal August 2 promo: சக்திக்கும் ஜனனிக்கும் லவ் செட்டாயிடுச்சு... ஜீவானந்தத்தை போட்டுத் தள்ள குணசேகரன் பிளான்... எதிர்நீச்சலில் இன்று!
* ஜீவனந்தத்தை முன்னாள் என்கவுண்ட்டர் ஸ்பெஷலிஸ்ட் மூலம் போட்டு தள்ள பிளான் செய்த குணசேகரன்* ஜனனிக்கு பெண் போலீஸ் அதிகாரி செய்த உதவிஇன்றைய எதிர்நீச்சல் எபிசோட் ப்ரோமோ
சன் டிவியில் ஒளிபரப்பாகும் எதிர் நீச்சல் தொடரின் நேற்றைய எபிசோடில் குணசேகரன் மற்றும் கதிர் ஊருக்குச் செல்ல தயராகி விட்டார்கள். “நல்லபடியாக குணமாகி திரும்பி வருவாய்” என விசாலாட்சி அம்மா சொல்லி அனுப்புகிறாள். ஞானம் மற்றும் கரிகாலன் இருவரும் நாங்களும் வருகிறோம் என சொன்னவர்களை கூட “தேவை இல்லை நீங்கள் இங்கே இருந்து வீட்டைப் பார்த்துக் கொள்ளுங்கள்” என சொல்லி விட்டு கிளம்புகிறார்கள்.
மறுபக்கம் ஜனனி மற்றும் சக்தி, ஜீவானந்தம் பற்றிய தகவல்களைத் தெரிந்து கொள்வதற்காக பெண் போலீஸ் அதிகாரி ஒருவரை சந்திக்கிறார்கள். அவரிடத்தில் நடந்த விஷயங்கள் அனைத்தையும் சொல்லி உதவி கேட்கிறார்கள். அவரும் உதவி செய்வதாக சொல்கிறார். ஏற்கெனவே ஜீவனாந்ததால் பாதிக்கப்பட்ட ஒருவரின் நம்பரை ஜனனிக்கு கொடுக்கிறார்.
குணசேகரன் கதிரிடம் காரை சென்னை பக்கம் திருப்பச் சொல்லி சொல்கிறார். எதற்கு எனத் தெரியாமல் குழப்பத்தில் இருந்த கதிரிடம், சென்னையில் தனது நண்பன் ஒருவன் இருப்பதாகவும் அவர் முன்னாள் என்கவுண்ட்டர் ஸ்பெஷலிஸ்ட் போலீஸ் அதிகாரி என்றும், அவர் மூலமாக ஜீவானந்தம் கதையை முடிப்பதற்காக பிளான் செய்துள்ளதாகவும் தெரிவிக்கிறார்.
ஐஸ்வர்யாவின் பள்ளியில் நடனம் கற்று தருவதாக சொன்ன ஆசிரியர் வராததால் ரேணுகா அவர்களுக்கு நடனம் சொல்லி தருவதாக கூறுகிறாள். அத்துடன் நேற்றைய எபிசோட் முடிவுக்கு வருகிறது. அதன் தொடர்ச்சியாக இன்றைய எபிசோடுக்கான ப்ரோமோ தற்போது வெளியாகியுள்ளது.
ஜீவானந்தத்தால் பாதிக்கப்பட்ட ஒருவரின் நம்பரை பெண் போலீஸ் அதிகாரி மூலம் பெற்றுக்கொண்ட ஜனனி ,அவரை நேரில் சந்தித்து பேசுவதற்காக வரச்சொல்கிறார். வந்த அந்த நபர் குணசேகரன் குறித்து ஏதோ ஒரு விஷயத்தை சொல்கிறார். அதற்கு டென்ஷனான சக்தி "அவங்களுக்கும் இந்த விஷயத்துக்கும் எந்த சம்பந்தமும் கிடையாது. குணசேகரன் தம்பி இது" என ஜனனியை பார்த்து இழுக்கிறார். ஜனனி உடனே "அவரோட மனைவி" என சொன்னதும் இதை சற்றும் எதிர்பார்க்காத சக்தி ஒருவரை ஒருவர் பார்த்துக்கொள்கிறார்கள்.
சென்னை சென்ற குணசேகரன் மற்றும் கதிர் பேசிக்கொண்டு இருக்கிறார்கள். "பட்டுவுக்கும் இவங்களுக்கும் என்ன அண்ணன் சம்பந்தம். ஒரு வேலை உறவா இருப்பானோ" என கதிர் குணசேகரனிடம் சொல்ல, உடனே அவர் "உறவுவோ அல்லது கருவோ அது கதையை முடிக்கணும்"என்கிறார். இது தான் இன்றைய எபிசோடுக்கான ஹிண்ட்.
புதிது புதிதாக கதாபாத்திரங்களில் என்ட்ரி எதிர் நீச்சலில் இருந்துகொண்டே இருக்கும் நிலையில், சீரியலை இது மேலும் பரபரப்பாக்குகிறது. ஜீவானந்தத்தை எதிர்க்க ஒவ்வொருவரும் வெவ்வேறு வழிகளில் முயற்சி செய்கிறார்கள். இனி என்ன நடக்கப்போகிறது என்பதை எதிர்நோக்கி ரசிகர்கள் காத்திருக்கிறார்கள்.