Ethir neechal August 10 promo: ஈஸ்வரியை நிலைகுலைய வைத்த ஜீவானந்தம்... ரேணுகாவுக்கு வந்த புது பிரச்சினை..!
சன் தொலைக்காட்சியின் பிரபலமான எதிர்நீச்சல் சீரியலில் இன்று ஈஸ்வரி மற்றும் ரேணுகா எதிர்கொள்ள புதிய பிரச்சினைகள் குறித்த ப்ரோமாவால் மேலும் பரபரப்பு ரசிகர்களுக்கு எகிறியுள்ளது.
சன் டிவியில் ஒளிபரப்பாகும் எதிர் நீச்சல் தொடரின் நேற்றைய எபிசோடில் வக்கீல் மற்றும் ஆடிட்டர் குணசேகரன் வீட்டுக்கு வந்து ஜீவானந்தத்தை எப்படி எதிர்த்து சொத்தை மீட்கலாம் என்பது குறித்து பேசி கொண்டு இருக்கிறார்கள். அவர்கள் என்ன பேசுகிறார்கள் என்பதை தெரிந்து கொள்வதற்காக நந்தினி காபி எடுத்து கொண்டு போவது போல் ஒட்டு கேட்க போகிறாள். அதை கரிகாலன் பார்த்து போட்டு கொடுக்க நந்தினி கீழே வந்து புலம்புகிறாள்.
அதிர்ச்சி அடையும் ஈஸ்வரி:
குணசேகரனால் ஜீவானந்தத்தை சந்திக்காமல் எதையுமே செய்ய முடியாது. சக்தி தகவல் விசாரித்து வந்ததும் ஜீவானந்தத்தை போய் சந்தித்து அவனின் நோக்கம் பற்றி தெரிந்து கொள்ள போவதாக கூறுகிறாள். ஈஸ்வரி தன்னுடைய அப்பாவுடன் பேசி கொண்டு இருக்கும் போது கார் ஒன்று வருகிறது. அதில் ஜீவானந்தம் வந்து இறங்கியதை பார்த்து அதிர்ச்சி அடைகிறாள் ஈஸ்வரி. அத்துடன் நேற்றைய எபிசோட் முடிவுக்கு வந்தது.
அதன் தொடர்ச்சியாக இன்றைய எதிர் நீச்சல் எபிசோடுக்கான ப்ரோமோ தற்போது வெளியாகியுள்ளது.
ரேணுகா ஆன்லைன் மூலம் டான்ஸ் சொல்லி தருவதற்காக ஜனனி வீட்டுக்கு சென்று அனைத்தையும் தயாராக வைத்து இருக்கிறாள். அவளுடன் ஜனனி, நந்தினி மற்றும் ஐஸ்வர்யா இருக்கிறார்கள். ரேணுகா ஆரம்பிக்க போகும் நேரம் பார்த்து ஞானமும் கதிரும், ஜனனி இருக்கும் அவுட் ஹவுஸ் வெளியே வந்து காச்சு மூச்சு என கத்தி ரேணுகாவை வெளியே வர சொல்கிறார்கள். கிளாஸ் ஆரம்பிக்க போவதால் ரேணுகாவால் வெளியே வரமுடியாதல் ஜனனியும் நந்தினியும் வெளியே வந்து என்ன வேணும் உங்களுக்கு? என கேட்கிறாள். "5 கோடி பணம் வேணும் போய் எடுத்துட்டு வா போ" என நக்கலாக கதிர் சொல்ல, என்ன சொத்தெல்லாம் போக போதுன்னு தெரிஞ்சுபோச்சா இவ கிட்ட வந்து கடன் கேட்டு நிக்குறீங்க" என சரியான பதிலடி கொடுக்கிறாள் நந்தினி. அவளை அடிக்க கை ஓங்குகிறான் கதிர்.
ஜீவானந்தம் யார் என இதுவரையில் பார்க்காத ஈஸ்வரிக்கு காரில் வந்து இறங்கியது ஜீவானந்தம் தான் என்பது தெரியவில்லை. குணசேகரனின் சொத்து அபகரிப்பு குறித்து பேசுகையில் "நீங்க பண்றது எரிச்சலா இருக்குங்க" என ஜீவானந்தத்திடம் சொல்கிறாள். "ஈஸ்வரிக்கு இந்த மாதிரி கோவம் எல்லாம் வராதே" என்கிறார் ஜீவானந்தம். அதை கேட்ட ஈஸ்வரிக்கு ஒண்ணுமே புரியாமல் பார்க்கிறாள்.
பின்னர் பழைய காதல் பற்றி ஈஸ்வரியிடம் சொல்லி. உங்க அப்பா குணசேகரனுக்கு உங்களை கல்யாணம் பண்ணி வைச்சுட்டாரு. அதற்கு பிறகு அந்த பையனை நினைச்சு இருக்க வாய்ப்பில்லை. அவன் பெயர் ஜீவானந்தம்" என சொல்லிவிட்டு கிளம்புகிறார். அதை கேட்ட ஈஸ்வரிக்கு பயங்கர ஷாக்காக இருக்கிறது.
அழும் ஈஸ்வரி:
தன்னுடைய இளம் வயதில் ஒரு பையன் மீது ஈஸ்வரிக்கு ஈர்ப்பு ஏற்பட்டது. அவனுக்கும் அதே உணர்வு இருந்ததால் ஈஸ்வரியின் அப்பாவிடம் போய் பெண்கேட்கிறான். அவர் அந்த பையனை அவமானப்படுத்தி அனுப்பிவிடுகிறார். அன்று ஈஸ்வரியை திருமணம் செய்து கொள்ள வேண்டும் என விரும்பிய அந்த ஜீவா தான் ஜீவானந்தம்.
ஜீவானந்தம் பேசி சென்ற பிறகு மனமுடைந்து அழுகிறாள் ஈஸ்வரி. இதுதான் இன்றைய எதிர் நீச்சல் எபிசோடுக்கான ஹிண்ட்.
ஈஸ்வரிக்கு ஜீவானந்தம் பற்றின பழைய கதை தெரிந்து அவள் அடுத்ததாக என்ன செய்ய போகிறாள்? கணவரின் சொத்துக்காக போராடுவாளா? பறித்தது பழைய காதலன் என்பதை யாரிடம் சொல்ல போகிறாள்? ரேணுகாவல் வெற்றிகரமாக டான்ஸ் கிளாஸை ஆன்லைனில் எடுக்க முடிந்ததா? இன்றைய எதிர் நீச்சலில் பல ஸ்வாரஸ்யங்கள் உள்ளன. காணத்தவறாதீர்...