Bharathi Kannamma: சந்தேகத்துக்கு முற்றுப்புள்ளி; மேட்ச் ஆகும் டி.என்.ஏ: முடிவுக்கு வரும் பாரதி கண்ணம்மா சீரியல்?
மிகவும் விறுவிறுப்பாக நகரும் விஜய் டிவியின் 'பாரதி கண்ணம்மா' தொடரில் பாரதிக்கு DNA ரிசல்ட் குறித்த உண்மை தெரிய வரும் நிலையில் சஸ்பென்ஸை உடைக்கும் இன்றைய நாளின் ப்ரோமோ தற்போது வெளியாகியுள்ளது.
விஜய் டிவியின் மிகவும் பிரபலமான தொடரான பாரதி கண்ணம்மா இறுதி கட்டத்தை நெருங்கிவிட்டது. பலரும் எதிர்பார்த்த DNA ரிசல்ட் ஒரு வழியாக வந்து விட்டது. மிகவும் விறுவிறுப்பாக இருக்க போகும் இன்றைய நாளின் ப்ரோமோ வெளியாகி சின்னத்திரை ரசிகர்களை சந்தோஷப்படுத்தியுள்ளது.
சுவாரஸ்யமான நிகழ்வுகள் :
பாரதி கண்ணம்மா தொடர் பல வருடங்களாக பல திருப்பங்களுடன் மிகவும் சுவாரஸ்யமாக நகர்ந்து வருகிறது. பாரதியும் கண்ணம்மாவும் திருமணம் குறித்து இருந்த சஸ்பென்ஸை விடவும் அவர்கள் பிரிந்த பிறகும் குழந்தை பிறந்த பிறகும் நடந்த நிகழ்வுகள் தான் இந்த தொடரை விறுவிறுப்பாக நகர்த்தி வருகிறது. பாரதிக்கு என்றைக்கு உண்மை தெரிய வந்து கண்ணம்மாவுடனும் குழந்தைகளுடனும் சேருவார் என்ற படபடப்பு பார்வையாளர்களையும் தொற்றிக்கொண்டது.
சில வாரங்களுக்கு முன்னர் தான் பாரதிக்கு ஞானோதயம் ஏற்பட்டு DNA டெஸ்ட் செய்ய முடுவு எடுத்தார். ஆனால் வழக்கம் போல அந்த ரிசல்ட் வருவதில் தாமதம் ஏற்பட்டது. இதனை சரமாரியாக இணையத்தில் ரசிகர்கள் கிண்டல் செய்தனர். காரணம் 3 ஆண்டுகளை நெருங்கி விட்ட பாரதி கண்ணம்மா சீரியலே அந்த ஒரு DNA டெஸ்ட் ரிசல்டை மையப்படுத்தி தான் உள்ளது.
DNA Matched 🔥 பாரதி கண்ணம்மா - திங்கள் முதல் சனி இரவு 9 மணிக்கு நம்ம விஜய் டிவில.. #BarathiKannamma #VijayTelevision pic.twitter.com/w4NYL9Kqe1
— Vijay Television (@vijaytelevision) November 28, 2022
இந்த வார கதைக்களம் :
இந்த இடைப்பட்ட நேரத்தில் வெண்பாவுடன் திருமண ஏற்பாடு, ஹேமா பாரதியை பிரிந்து செல்வது, ஹேமா காணாமல் போவது என கதைக்களம் வேறு வழியாக நகர்ந்து வந்தது. ஆனால் பல நாட்களாக எதிர்பார்த்த DNA ரிசல்ட் ஒரு வழியாக வந்து பாரதிக்கு உண்மை தெரிந்து விட்டது என்பது தான் இந்த வாரத்தின் கதைக்களம். லட்சுமி மற்றும் ஹேமாவின் DNA சாம்பிள்கள் பாரதியோடு பக்காவாக மேட்ச் ஆகிவிட்டதாக டாக்டர் தெரிவித்ததும் நிலைகுலைந்து போகிறார் பாரதி. இத்தனை ஆண்டுகளாக கண்ணம்மாவை சந்தேகப்பட்டு அவளை வார்த்தைகளால் புண்படுத்தி குழந்தைகளை பிரிந்து அவர்களை ஒதுக்கி வைத்ததை நினைத்து மிகவும் மனவேதனை அடைகிறார் பாரதி.
ரசிகர்களின் மைண்ட் வாய்ஸ் :
ஒரு டாக்டராக இருப்பினும் சந்தேகம் வந்தவுடன் DNA டெஸ்ட் எடுக்காமல் இத்தனை ஆண்டுகளாக கதையை ஓட்டினார் பாரதி கண்ணம்மா சீரியலின் இயக்குனர். லாஜிக்காக பார்த்தால் இது கொஞ்சம் ஓவர் தான் என்றாலும் சீரியலை ஓட்ட கதை வேண்டும் அல்லவா அது தான் கிளைமாக்ஸ் காட்சி வர இத்தனை ஆண்டுகள் ஆகிவிட்டது. இப்பவாவது பாரதிக்கு உண்மை தெரிந்ததே என்பது தான் பாரதி கண்ணம்மா சீரியல் ரசிகர்களின் மைண்ட் வாய்ஸ்.
அடுத்து ஹேமாவை காப்பாற்றுவது, பாரதி மனைவி குழந்தைகளுடன் சேர்வது என கிளைமாக்ஸ் காட்சிகள் களைகட்ட போகிறது. அதுவரையில் நாமும் பொறுத்து இருந்து பார்க்கலாம்.