Bhagyalakshmi Serial: பாக்கியலட்சுமி சீரியலில் இருந்து ராதிகா விலகலா?... பதறிய படக்குழு... உண்மை இதுதான்..!
பாக்கியலட்சுமி சீரியலில் இருந்து நடிகை ரேஷ்மா பசுபுலேட்டி விலகவுள்ளதாக வெளியான தகவலுக்கு அந்த சீரியல் தரப்பு விளக்கமளித்துள்ளது.
பாக்கியலட்சுமி சீரியலில் இருந்து நடிகை ரேஷ்மா பசுபுலேட்டி விலகவுள்ளதாக வெளியான தகவலுக்கு அந்த சீரியல் தரப்பு விளக்கமளித்துள்ளது.
பாக்கியலட்சுமி சீரியல்
சின்னத்திரை நிகழ்ச்சிகள் வயது வித்தியாசமில்லாமல் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரையும் கவரும் வகையில் ஒளிபரப்பாகி வருகிறது. என்னதான் டிஜிட்டல் யுகத்தை நோக்கி பார்வையாளர்கள் நகர்ந்தாலும் வார நாட்களில் சீரியலிலும் சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் ஒளிபரப்பாகும் ரியாலிட்டி ஷோக்களும் இன்றளவும் பேவரைட்டான ஒன்றாகவே உள்ளது.
இதனை ஒரு கருவியாக கொண்டு சேனல்கள் புதுப்புது சீரியல்கள், ரியாலிட்டி ஷோக்களை அறிமுகம் செய்கின்றது. விஜய் டிவி சீரியலில் ஒளிபரப்பாகும் சீரியல்களில், பாக்கியலட்சுமி சீரியல் ரசிகர்களின் ஆல்டைம் ஃபேவரைட்டாக உள்ளது. இந்த சீரியலில் கோபியாக நடிகர் சதீஷ்குமார், பாக்கியலட்சுமியாக நடிகை சுசித்ரா ஷெட்டி, ராதிகாவாக நடிகை ரேஷ்மா ஆகியோர் நடித்து வருகின்றனர்.
ராதிகா விலகலா?
பாக்கியலட்சுமி சீரியல் முதலில் ராதிகாவாக மிகவும் அமைதியான ஒரு கதாபாத்திரமாக நடித்தவர் ஜெனிபர். அவர் தனது பிரசவத்திற்காக சீரியலில் இருந்து விலகிய பிறகு ஜெனிபரின் ரோலில் தேர்ந்தெடுக்கப்பட்டவர் தான் ரேஷ்மா பசுபுலெட்டி. “வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன்” படத்தில் நடிகர் சூரிக்கு மனைவியாக நடித்த நிலையில் சீரியலுக்கு எண்ட்ரீ கொடுத்தார்.
View this post on Instagram
அதுமுதற்கொண்டு ராதிகா கதாபாத்திரத்திற்கு பொருத்தமானவர் ரேஷ்மா தான் என்னும் அளவுக்கு அவரது நடிப்புக்கு பாராட்டுகள் குவிந்தது. இதனிடையே கடந்த சில நாட்களுக்கு முன்பு ரேஷ்மா பாக்கியலட்சுமி சீரியலில் இருந்து விலகப்போவதாக தகவல் வெளியானது. மேலும் அவர் ஜீ தமிழில் சீரியல் ஒன்றில் நடிக்கவுள்ளதாகவும் கூறப்பட்டது. இதனால் ரசிகர்கள் அதிர்ச்சியடைந்தனர்.
சீரியல் இப்போது தான் விறுவிறுப்பாக சென்று வரும் நிலையில், யார் ராதிகா கேரக்டரில் நடிக்கப் போகிறார்கள் என்ற கேள்வியும் எழுந்தது. இந்நிலையில் தான் சீரியல் தரப்பு ரசிகர்களுக்கு மகிழ்ச்சியளிக்கும் வண்ணம் விளக்கம் ஒன்றை அளித்துள்ளதாக கூறப்படுகிறது. அதன்படி வெளியாகியுள்ள தகவலில், ரேஷ்மா விலகவுள்ளதாக சொன்னது எல்லாம் வதந்தி என்றும், அதை நம்ப வேண்டாம் எனவும், ரேஷ்மாவே ராதிகாவாக தொடர்வார் எனவும் கூறப்பட்டுள்ளது.
தொடர் அப்டேட்டில் ரேஷ்மா
சினிமா, சீரியல், வெப் சீரிஸ்கள் என தன்னை பிசியாக வைத்துக் கொண்டுள்ள ரேஷ்மா சோசியல் மீடியாவில் தன்னுடைய புகைப்படங்களை தினமும் வெளியிட்டு ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்துவார். பாக்கியலட்சுமி சீரியலில் அவர் சிறப்பான நடத்தை வெளிப்படுத்தி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.