Baakiyalakshmi Sep 02: கலக்கலாக கார் ஓட்டும் பாக்கியா.. கோபிக்கு காத்திருந்த அதிர்ச்சி.. பாக்கியலட்சுமியில் இன்று!
Baakiylakshmi Sep 02: பாக்கியா கார் ஓட்டுவதை கேட்டு அதிர்ச்சியான கோபி என்ன செய்ய சொன்னார் தெரியுமா? இன்றைய பாக்கியலட்சுமி எபிசோடில் என்ன நடந்தது?
விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பாக்கியலட்சுமி (Baakiyalakshmi) தொடரின் இன்றைய எபிசோடில் மயூ மஞ்சள் ஈரோடு விழாவுக்கு அலங்காரம் செய்து அழைத்து வருகிறார்கள். அவளைப் பார்த்த கோபி "எவ்வளவு சின்ன பொண்ணா நான் மயூவைப் பார்த்தேன், இவ்வளவு பெரிய பொண்ணா வளந்துட்டா" என சொல்லி ஆனந்த கண்ணீர் விடுகிறார் கோபி. பின்னர் அவளுக்கு வந்திருந்த உறவினர்கள் ஒவ்வொருவராக நலங்கு வைத்து ஆசீர்வாதம் செய்கிறார்கள். ராமமூர்த்தியும் அப்போது வந்து மயூவுக்கு ஆசீர்வாதம் செய்கிறார்.
மயூவை கோபி நன்றாக பார்த்துக் கொள்வதை பார்த்த ராதிகாவின் உறவுக்காரர்கள் ராதிகாவின் அம்மாவிடம் சென்று "ராதிகா இரண்டாவது கல்யாணம் பண்ணிக்கிறாளே அவளோட புருஷன் எப்படி இருப்பாரோ என நினைச்சேன். ஆனா அவர் ராதிகாவையும் மயூவை ரொம்ப நல்லா பாத்துக்குறாரு" என்கிறார்கள். அதைக் கேட்ட ராதிகாவும் அவளின் அம்மாவும் சந்தோஷப்படுகிறார்கள்.
பாக்கியா காரை படு சூப்பராக ஜாலியாக ஓட்டிச் சென்று கொண்டு இருக்கிறாள். பாட்டைப் போட்டு மூவரும் என்ஜாய் செய்து வர ஈஸ்வரி காதை மூடிக் கொள்கிறார். முன்னாடி கார், லாரி எல்லாம் வேகவேகமாக போக அதை பார்த்து ஈஸ்வரி பயப்படுகிறார். பாக்கியாவை பொறுமையாக போக சொல்கிறார்.
அந்த நேரத்தில் கோபி இனியாவுக்கு போன் செய்து "எங்க இருக்கீங்க டா செல்லம். எல்லாம் ஒகே தானே. டிரைவர் ஒழுங்கா வண்டி ஓட்டுறாரா?" எனக் கேட்க, இனியா "அம்மா தான் டாடி ஓட்றாங்க. டிரைவர் ஏதோ எமெர்ஜென்சின்னு சொல்லிட்டு கிளம்பிட்டாரு" என சொல்ல ஷாக்கான கோபி "என்ன அந்த இடியட் வண்டி ஓட்டுறாளா. வண்டியை உடனே ஓரமா நிறுத்துங்க. எனக்கு லொகேஷனை உடனே அனுப்பு. நான் ஆள் அனுப்பி வண்டியை எடுத்துட்டு வர சொல்றேன். 20 வருஷமா நான் கார் ஓட்டுறேன். எனக்கே ஹைவேஸ்ல வண்டி ஓட்டணும்னா கொஞ்ச பதட்டமா இருக்கும்" என சொல்லி வண்டியை ஓரம் கட்டச் சொல்கிறார்.
ஈஸ்வரியும் காரை ஓரமாக நிறுத்தச் சொல்லி சொல்லவும் பாக்கியாவும் நிறுத்துகிறார். அந்த இடியட் கிட்ட போனைக் கொடு என சொல்லி கோபி பாக்கியாவை ஓவராகப் பேசுகிறார். கடுப்பான பாக்கியா போனை கட் பண்ணிட்டு மீண்டும் காரை ஒட்டுகிறாள்.
ஈஸ்வரி "அது தான் கோபி வேண்டாம் என சொன்னானே" என சொல்ல, பாக்கியா "நீங்க பயப்படாதீங்க அத்தை. எனக்கு ஒரு விஷயம் தெரியலனா நா அதை செய்யவே மாட்டேன். நான் நல்ல தானே அத்தை ஓட்டுறேன். அவரு சொல்ற மாதிரியெல்லாம் ஒன்னும் நடக்காது. நீங்க பயாடாதீங்க அத்தை" என சொல்லி ஈஸ்வரியை சமாதானம் செய்கிறாள்.
எல்லாரும் ஹோட்டலுக்கு சென்று சாப்பிடுகிறார்கள். முதலில் ஈஸ்வரி நான் இங்க எல்லாம் சாப்பிட மாட்டேன் என சொல்ல, பிறகு அவளை சமாதானம் செய்து பாக்கியா அழைத்துச் செல்கிறாள். வீட்டில் அமிர்தா கிச்சனில் வேலை செய்து கொண்டு இருக்கிறாள்.
அப்போது அங்கு வந்த எழில் வீட்டில் யாரும் இல்லாததைக் கேட்டு தெரிந்து கொண்டு அமிர்தாவுடன் ரொமான்ஸ் செய்கிறான். அத்துடன் இன்றைய பாக்கியலட்சுமி (Baakiyalakshmi) சீரியல் முடிவுக்கு வந்தது.